மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில், 2025-ஆம் ஆண்டிற்காக 19 நிரந்தர பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் இன்ஜினியர், ஜூனியர் அசிஸ்டன்ட் போன்ற பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 

இளைஞர்களை பணிக்கு அழைக்கிறது அறநிலையத்துறை

மயிலாப்பூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில் சார்பில் 2025–ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 19 நிரந்தர பணியிடங்களை நிரப்புவதற்கான இந்த அறிவிப்பு, ஆலய வேலைவாய்ப்பை எதிர்பார்த்து இருந்த பலருக்கும் ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. தமிழ்நாடு அரசு கீழ் செயல்படும் இந்த திருக்கோவில், பல்வேறு துறைகளில் பணியாற்றும் Assistant Engineer, Junior Assistant, Ticket Seller, Tamil Pulavar, Electrician, Para, Gurukkal, Kavalar, Paricharakar போன்ற பணியிடங்களை நிரப்ப உள்ளது. இந்த பணியிடங்களுக்கு 27.11.2025 முதல் விண்ணப்பிக்கலாம், 28.12.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பம் முழுமையாக அனுப்பப்பட வேண்டும். 

போட்டி அதிகம் இருக்குமாம்

பொதுவாக கோவில் நிர்வாக வேலைகள் என்பது நிரந்தர ஊதியம், அரசு நலன்கள், மருத்துவ நலத் திட்டங்கள் போன்ற பல நன்மைகளை கொண்டவை என்பதால் போட்டியும் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் விண்ணப்பதாரர்கள் தங்கள் தகுதி, கல்வி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை அறிவிப்பில் நன்கு உறுதி செய்த பிறகே விண்ணப்பிக்க வேண்டும்.

10 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை

இந்த அறிவிப்பு படி, சில பணிகளுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. சில பணிகளுக்கு B.E (சிவில்), Agama பாடநெறிகள், ITI, டைப்பிங் மற்றும் Computer Automation சான்றிதழ்கள் போன்ற தகுதிகள் அவசியம். குறிப்பாக Gurukkal / Archakar மற்றும் Assistant Paricharakar பணிகளுக்கு கோவில் சம்பிரதாய விதிமுறைகள், நெய்வேத்யம் மற்றும் ப்ரசாதம் தயாரிக்கும் நடைமுறைகள், தமிழ் வாசித்தல், எழுதுதல் போன்ற அறிவும் திறன்களும் அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

சம்பளத்தை கேட்டா சந்தோஷத்துல மயக்கமே வரும்

ஒவ்வொரு பணிக்கும் 18 முதல் 45 வயது வரை விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பள விவரங்களும் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. Assistant Engineer பணிக்கு Level 35–இல் ரூ.36,700 முதல் ரூ.1,16,200 வரை, Junior Assistant, Ticket Seller மற்றும் Tamil Pulavar பணிகளுக்கு ரூ.18,500 – ரூ.58,600 வரை ஊதிய நிலை வழங்கப்படும். மற்ற பணிகளுக்கும் பணிநிலைக்கு ஏற்ப attractive salary package அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை 

முற்றிலும் ஆஃப்லைன். விண்ணப்பப் படிவம் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது கோவில் அலுவலகத்திலிருந்து நேரடியாக பெற முடியும். விண்ணப்பத்துடன் வயது, கல்வி, முகவரி, சமூகச் சான்றிதழ்கள் போன்ற ஆவண நகல்கள் இணைக்கப்பட வேண்டும். மேலும், விண்ணப்பத்துடன் Rs.75 மதிப்புடைய தபால் முத்திரை ஒட்டிய முகவரி உறை மற்றும் விண்ணப்பக் கட்டணம் செலுத்தப்பட்டிருக்கும் acknowledgment card கூட இணைக்க வேண்டும்.

 அனைத்து விண்ணப்பங்களும் அஞ்சல் மூலமாக அல்லது நேரடியாக கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்: The Joint Commissioner / Executive Officer, Arulmigu Kapaleeswarar Temple, Mylapore, Chennai – 600 004. தேர்வு முறை shortlisting மற்றும் interview அடிப்படையில் நடைபெறும். பொதுவாக கோவில் வேலைகள் பாதுகாப்பான, மரியாதைக்குரிய, நிலையான பணிகள் என்பதால் இந்த வாய்ப்பு தவறவிட வேண்டாம் என்று ஆலோசனை வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனமாகப் படித்து விரைவில் விண்ணப்பித்து விடலாம். இந்த வேலைவாய்ப்பு தொடர்பான புதிய அப்டேட்கள், விண்ணப்ப நிலை, முடிவுகள் போன்றவை தொடர்ந்து வெளியிடப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.