- Home
- Business
- ரூ.15,000 கோடி வழக்கு.. ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவுக்கு ஷாக் கொடுத்த அமெரிக்க நீதிமன்றம்
ரூ.15,000 கோடி வழக்கு.. ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவுக்கு ஷாக் கொடுத்த அமெரிக்க நீதிமன்றம்
ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, அமெரிக்காவில் ஒரு பெரிய விவாகரத்து வழக்கை எதிர்கொள்கிறார். இந்த வழக்கு இந்தியாவின் மிகச் செலவான விவாகரத்து வழக்குகளில் ஒன்றாக மாறக்கூடும். இது பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

ஜோஹோ நிறுவனர் வழக்கு
ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். இந்த முறை காரணம், அவரது விவாகரத்து வழக்கு தொடர்புடையது ஆகும். அமெரிக்காவில் நடைபெற்று வரும் இந்த வழக்கில், நீதிமன்றம் ஸ்ரீதர் வேம்புவை சுமார் 1.7 பில்லியன் டாலர் (ரூ.15,000 கோடி) மதிப்புள்ள பத்திரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்தால், இது இந்திய வரலாற்றிலேயே மிகச் செலவான விவாகரத்து வழக்குகளில் ஒன்றாக மாறலாம் என கூறப்படுகிறது. இந்த வழக்கு கலிஃபோர்னியா மாநில நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. செய்தி அறிக்கைகளின்படி, 2025 ஜனவரியில் கலிபோர்னியா உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு
சொத்துப் பரிமாற்றங்கள் மற்றும் திருமண சொத்துப் பங்கீட்டில் முறைகேடுகள் நடக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், நீதிமன்றம் ஜோஹோ தொடர்பான நிறுவனங்களைக் கண்காணிக்க ஒரு ரிசீவரை நியமித்துள்ளது. மேலும், பெரிய அளவிலான நிறுவன மறுசீரமைப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், பிரமிளாவின் உரிமைகள் புறக்கணிக்கப்பட்டதாகவும், நிறுவனங்கள் அனைத்தும் ஸ்ரீதரின் நலனுக்கே செயல்படுகின்றன என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரமிளா ஸ்ரீனிவாசன் முன்வைத்த குற்றச்சாட்டுகளின்படி, 2024 நவம்பரில் தாக்கல் செய்த மனுவில், ஸ்ரீதர் வேம்பு, அமெரிக்காவைச் சேர்ந்த ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பங்குகளை, தனது நீண்டகால கூட்டாளருடன் தொடர்புடைய நிறுவனத்திற்கு ரகசியமாக மாற்றியதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீதர் வேம்பு விவாகரத்து
இந்த மாற்றம் மூன்றாக நடந்ததாகவும், திருமண காலத்தில் உருவான நிறுவனத்தில் ஸ்ரீதருக்கு வெறும் 5 சதவீத பங்குதான் இருப்பதாக கூறியதை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த ஸ்ரீதர் வேம்பு, தன்னிடம் எப்போதும் 5 சதவீத பங்குதான் இருந்ததாகவும், பெரும்பங்கு தனது சகோதரர்களிடமே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஃபோர்ப்ஸ் 2025 பட்டியலின்படி, ஸ்ரீதர் வேம்பு குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 6 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 30 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பிறகு, 2019-ல் இந்தியா திரும்பிய வேம்பு, 2021-ல் விவாகரத்து வழக்கை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

