உங்ககிட்ட பழைய 1 ரூபாய் நாணயம் இருக்கா? கோடிகளில் சம்பாதிக்கலாம்!
பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளுக்கு அதிக தேவை உள்ளதால், அவற்றை விற்பனை செய்வதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம். அந்த வகையில் அரிய 1 ரூபாய் நாணயத்தின் மூலம் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
Old 1 Rupee Coin
பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை சேகரிப்பது பலரின் பொழுதுபோக்காக உள்ளது. ஆனால் தற்போது பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளுக்கு அதிக டிமாண்ட் இருப்பதால் அவற்றின் மூலம் ஒருவர் லட்சாதிபதியாக முடியும் என்பது பலருக்கும் தெரியாது. ஆம். உண்மை தான். சமீபத்தில் ஆன்லைன் ஏலத்தில் ரூ. 1 அரிய நாணயம் ரூ. 10 கோடிக்கு விற்பனையானது. பழைய ரூ.1, ரூ.2 நாணயங்கள், ரூ.1,2,5 பழைய நோட்டுகளுக்கு ஏற்பட்டுள்ள அதிக தேவை காரணமாக அதிக விலை கொடுத்து அவற்றை வாங்க பலரும் தயாராக இருக்கின்றனர்.
அந்த வகையில் தற்போது பழைய நாணயங்களை வைத்திருப்போருக்கு ஒரு குட்நியூஸ் வெளியாகி உள்ளது. இந்த அரிய, பழைய நாணயங்களை ஆன்லைனில் விற்பதன் மூலம் ரூ.10 லட்சம் வரை சம்பாதிக்கலாம். இந்த தனித்துவமான ஒரு ரூபாய் நாணயம் 1885 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியின் போது இந்தியாவில் வெளியிடப்பட்டது.
Old 1 Rupee Coin
1885 ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட 1 ரூபாய் நாணயம் உங்களிடம் இருந்தால், அதை ஆன்லைனில் ஏலத்தில் விடலாம். பழைய மற்றும் அரிய நாணயங்களை விற்க Coinbazaar போன்ற பல இணையதளங்கள் உள்ளன. அந்த இணையத்திற்கு சென்று பயனர்கள் பெயர், முகவரி, மின்னஞ்சல், தொலைபேசி எண் போன்ற அடிப்படை விவரங்களை உள்ளிட்டு பதிவு செய்யலாம்.
இந்த நாணயம் உங்களிடம் இருந்தால், அதில் உங்கள் விவரங்களை சேர்த்து, உங்களிடம் இருக்கும் நாணயத்தின் தெளிவான புகைப்படத்தையும் பதிவேற்ற வேண்டும். உங்களின் விளம்பரத்தை பார்த்து, அவர்கள் உங்களிடம் தொடர்பு கொள்வார்கள். அவர்களிடம் நீங்கள் உங்கள் நாணயத்திற்கு நீங்கள் பேரம் பேசலாம்.
Old 1 Rupee Coin
சமீபகாலமாக பழைய நாணயங்களின் மதிப்பு அதிகரித்துள்ளதால், அவற்றை விற்று பல லட்சம் ரூபாய் சம்பாதிக்கின்றனர். பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை சேகரிப்பவர்கள் கோடீஸ்வரர்கள் ஆகலாம்
1885 ஆம் ஆண்டு நாணயங்களைத் தவிர, மற்ற ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட சில அரிய நாணயங்களுக்கும் அதிக தேவை உள்ளது. coinbazzar.com இல் இவற்றைச் சரிபார்க்கலாம்.
Old 1 Rupee Coin
இதனிடையே, கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை ஆன்லைனில் விற்பது மற்றும் வாங்குவது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி எச்சரிக்கை செய்தியை வெளியிட்டது. அதன்படி, பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் விற்பனையில் சில குறிப்பிட்ட கூறுகள், இந்திய ரிசர்வ் வங்கியின் பெயர்/லோகோவை மோசடியாகப் பயன்படுத்தி, பொதுமக்களிடம் இருந்து கட்டணம்/கமிஷன்/வரி கோருவது இந்திய ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு வந்துள்ளது என்றும் கூறியிருந்தது.
Old 1 Rupee Coin
மேலும் இது போன்ற விஷயங்களை ரிசர்வ் வங்கி கையாளவில்லை என்று விளக்கம் அளித்தது. மேலும் பழைய நாணயங்கள் அல்லது ரூபாய் நோட்டுகளை விற்க எந்த விதமான கட்டணங்கள் / கமிஷன்களை பெறுவதில்லை எனவும். அத்தகைய பரிவர்த்தனைகளில் கட்டணம்/கமிஷன் வசூலிக்க ரிசர்வ் வங்கி எந்த நிறுவனம்/ நிறுவனம்/ நபர் போன்றவற்றையும் அங்கீகரிக்கவில்லை என்று ரிசர்வ் வங்கி கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.