MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • அடேங்கப்பா! தமிழ்நாட்டு பெண்களிடம் இத்தனை டன் 'தங்கம்' இருக்கா? டேட்டாவை பார்த்தா அசந்து போயிடுவீங்க!

அடேங்கப்பா! தமிழ்நாட்டு பெண்களிடம் இத்தனை டன் 'தங்கம்' இருக்கா? டேட்டாவை பார்த்தா அசந்து போயிடுவீங்க!

உலகளவில் அதிக வைத்திருக்கும் நாடுகள் குறித்தும், இந்தியாவில் எவ்வளவு தங்கம் இருப்பு உள்ளது என்பது குறித்தும் உலக கோல்டு கவுன்சில் டேட்டா வெளியிட்டுள்ளது. 

2 Min read
Author : Rayar r
| Updated : Dec 31 2024, 09:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Gold reserve In India

Gold reserve In India

உலக கோல்டு கவுன்சில் டேட்டா 

இந்தியாவில் தங்கம் மிகவும் ஆடம்பரமான பொருளாக உள்ளது. இந்திய மக்கள் தங்க நகை மீது அதிகளவு ஈர்ப்பு கொண்டுள்ளதாலும், தங்கத்தின் மீது முதலீடு செய்து வருவதாலும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. திருமண நிகழ்வுகள், விஷேச நாட்களில் தங்கம் விற்பனை மிகவும் அதிகமாக இருந்து வருகிறது. 

தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சத்துக்கு சென்று வருவதால் இப்போதே பலரும் அதிகளவு தங்கத்தை வாங்கிக் குவித்து வருகின்றனர். இன்றைய நிலவரப்படி 1 கிராம் தங்கம் ரூ.7,151க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.57,208 என்ற விலையிலும் விற்பனையாகிறது. இந்நிலையில், உலகவிளவில் அதிக தங்கம் இருப்பு வைத்திருக்கும் நாடுகள், இந்தியாவில் எவ்வளவு தங்கம் இருப்பில் உள்ளது என்பது குறித்து உலக கோல்டு கவுன்சில் டேட்டா வெளியிட்டுள்ளது.

24
Gold reserve In Tamilnadu

Gold reserve In Tamilnadu

இந்தியாவில் 24,000 டன் தங்கம்

உலக கோல்டு கவுன்சிலின் டேட்டாவின்படி உலக அளவில் அதிகளவு தங்கம் வைத்திருக்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்திய பெண்கள் சுமார் 24,000 டன் தங்கம் வைத்துள்ளனர். உலக வல்லரசு நாடான அமெரிக்கா 8,000 டன் தங்கம் வைத்துள்ளது. ஜெர்மனி 3,300 டன் தங்கம் வைத்துள்ளது. இதேபோல் இத்தாலி 2,450 டன் தங்கமும், பிரான்ஸ் 2,400 டன் தங்கமும், ரஷ்யா 1,900 டன் தங்கமும் வைத்துள்ளன.

குஷியோ குஷி.! சரசரவென குறைந்த தங்கம் விலை.! இன்று ஒரு கிராமுக்கு இவ்வளவு குறைவா.?

34
Today Gold rate

Today Gold rate

இந்திய பெண்களிடம் அதிக தங்கம் 

இந்த 5 நாடுகளும் மொத்தம் 18,050 டன் தங்கம் இருப்பு வைத்திருக்கும் நிலையில், இந்தியாவில் மட்டும் 24,000 டன் தங்கம் இருப்பு உள்ளது. உலக நாடுகளின் 11% தங்கம் இந்திய பெண்களிடம் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலக கோல்டு கவுன்சிலின் டேட்டாவின்படி இந்தியாவில் இருக்கும் தங்கத்தில் சுமார் 40% தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற தென்னிந்திய மாநில பெண்களிடம் தான் உள்ளது.

44
Gold Price In Chennai

Gold Price In Chennai

தமிழ்நாட்டு பெண்களிடம்  6,720 டன் தங்கம்

அதுவும் தமிழ்நாட்டு பெண்களிடம் மட்டும் 6,720 டன் தங்கம் உள்ளது என்று உலக கோல்டு கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மணமான பெண்கள் 500 கிராம் தங்கம் வரையிலும், மணமாகாத பெண்கள் 250 கிராம் தங்கம் வரையிலும், ஆண்கள் 100 கிராம் தங்கம் வரையிலும் வைத்திருக்காலம் என உலக கோல்டு கவுன்சில் கூறியுள்ளது.

உலகிலேயே இந்திய பெண்களிடம் தான் அதிக தங்கம் இருக்கு! டாப் 5 நாடுகளின் தங்கத்தை விட அதிகம்!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தங்கம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கிழிந்த, சேதமான நோட்டு இருக்கா? வங்கியில் இலவசமாக மாற்றலாம்.. எப்படி தெரியுமா?
Recommended image2
ரயில் டிக்கெட் புக்கிங்.. மார்ச் 1 முதல் புதிய மாற்றம்.. ரயில் பயணிகள் உஷார்!
Recommended image3
1 ரூபாய் முதலீடு இல்லாமல் தொழில் தொடங்கலாம்!.. டாப் 5 பிசினஸ் ஐடியாஸ்!..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved