சொத்து மதிப்பு 2.97 லட்சம் கோடி.. ஒரு நாளைக்கு ரூ.5.6 கோடி நன்கொடை.. இந்த கோடீஸ்வரர் பற்றி தெரியுமா?
நாட்டின் கோடீஸ்வரர்களில் ஒருவரான ஷிவ் நாடார் ஒரு நாளைக்கு நன்கொடை மட்டும் ரூ.5.6 கோடி வழங்குகிறார்.
Indian Billionaires
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஃபோர்ப்ஸ் உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலைப் வெளியிட்டது. இதில் 200 இந்தியர்கள் இருந்தனர். இவர்களின் 25 பேர் புதிதாக இந்த பட்டியலில் இணைந்தவர்கள்.. சமீபத்தில் இந்த மாதம், Zomato இன் இணை நிறுவனரான தொழிலதிபர் தீபிந்தர் கோயல் உலக பணக்கார பட்டியலில் இணைந்தார். அவரின் சொத்து மதிப்பு ரூ.8,300 கோடிக்கு மேல் உள்ளது என்று மதிப்பிடப்பட்டது.. நாட்டின் பல பெருநகரங்களில் பெரும் பணக்காரர்கள் பரவியுள்ள நிலையில், நாட்டில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை சீராக வளர்ந்து வருகிறது.
அந்த வகையில் டெல்லியின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராக ஷிவ் நாடார் இருக்கிறார். HCL டெக்னாலஜிஸின் நிறுவனரான அவரின் மொத்த சொத்த மதிப்பு 35.6 பில்லியன் டாலர் ஆகும். அதாவது இந்திய ரூபாயில் 2,97,999 கோடி ஆகும். ஷிவ் நாடார் தனது பரோபகாரப் பணிகளுக்காகவும் புகழ் பெற்றவர். அவர் தினமும் ரூ.5.6 கோடி நன்கொடை வழங்குகிறார்.
1976 ஆம் ஆண்டு தனது நண்பர்களுடன் சேர்ந்து 1,87,000 ரூபாய் முதலீட்டில் நொய்டாவில் உள்ள கராஜ் ஒன்றில் HCL நிறுவனத்தை ஒரு கேரேஜில் தொடங்கினர். ஆரம்பத்தில், HCL நிறுவனம் கால்குலேட்டர்கள் மற்றும் நுண்செயலிகளை தயாரித்தது, ஆனால் கடந்த 40 ஆண்டுகளாக உலகின் தலைசிறந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இந்நிறுவனத்திற்கு 60 நாடுகளில் அலுவலகங்கள் உள்ளது.
ஷிவ் நாடார் பிறந்து வளர்ந்தது எல்லாம் தூத்துக்குடி மாவட்டத்தில் தான். செயின்ட் ஜோசப் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் கோயம்புத்தூரில் உள்ள PSG தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்ந்து எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்தார். 1967-ம் ஆண்டு வால்சந்த் குழுமத்தின் கூப்பர் இன்ஜினியரிங் லிமிடெட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
பின்னர் அவர் மைக்ரோகாம்ப் என்ற நிறுவனத்தை நிறுவினார், இது டெலி-டிஜிட்டல் கால்குலேட்டர்களை விற்கிறது. சில மாதங்களுக்குப் பிறகு இந்நிறுவனம் ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட் (HCL Technologies) எனப் பெயர் மாற்றப்பட்டது. 2008-ம் ஆண்டு ஷிவ் நாடார் ஐடி துறையில் அவரது பங்களிப்புகளுக்காக பத்ம பூஷன் விருது பெற்றார்.
40 ஆண்டுகளுக்கு மேலாக நிறுவனத்தை HCL நிறுவனத்தை வழிநடத்திய அவர் பின்னர் தலைவர் பதவியில் இருந்து விலகினார். அவரை தொடர்ந்து அவரின் ரோஷினி நாடார் அந்நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரும் நாட்டின் பணக்கார பெண்களில் ஒருவராக இருக்கிறார்.
ஷிவ் நாடார் இந்தியாவின் முன்னணி பரோபகாரர்களில் ஒருவர். ஹுருன் இந்தியா பரோபகார பட்டியல் 2023 இன் படி, அவர் 2022-2023 இல் சுமார் 2,042 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி உள்ளார். அதாவது ஒரு நாளைக்கு சுமார் 5.6 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். இந்தியாவின் மிகவும் தாராளமானவர்' என்ற பெருமையை அவர் தொடர்ந்து 3 ஆண்டுகள் பெற்றிருந்தார். அவர் சென்னையில் எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியை நிறுவினார், மேலும் அவரது ஐடி நிறுவனம் நாட்டில் பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Shiv Nadar
அந்த வகையில் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராக ஷிவ் நாடார் இருக்கிறார். HCL டெக்னாலஜிஸின் நிறுவனரான அவரின் மொத்த சொத்த மதிப்பு 35.6 பில்லியன் டாலர் ஆகும். அதாவது இந்திய ரூபாயில் 2,97,999 கோடி ஆகும். ஷிவ் நாடார் தனது பரோபகாரப் பணிகளுக்காகவும் புகழ் பெற்றவர். அவர் தினமும் ரூ.5.6 கோடி நன்கொடை வழங்குகிறார்.
Shiv Nadar
1976 ஆம் ஆண்டு தனது நண்பர்களுடன் சேர்ந்து 1,87,000 ரூபாய் முதலீட்டில் நொய்டாவில் உள்ள கராஜ் ஒன்றில் HCL நிறுவனத்தை ஒரு கேரேஜில் தொடங்கினர். ஆரம்பத்தில், HCL நிறுவனம் கால்குலேட்டர்கள் மற்றும் நுண்செயலிகளை தயாரித்தது, ஆனால் கடந்த 40 ஆண்டுகளாக உலகின் தலைசிறந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இந்நிறுவனத்திற்கு 60 நாடுகளில் அலுவலகங்கள் உள்ளது.
Shiv Nadar
ஷிவ் நாடார் பிறந்து வளர்ந்தது எல்லாம் தூத்துக்குடி மாவட்டத்தில் தான். செயின்ட் ஜோசப் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் கோயம்புத்தூரில் உள்ள PSG தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்ந்து எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்தார். 1967-ம் ஆண்டு வால்சந்த் குழுமத்தின் கூப்பர் இன்ஜினியரிங் லிமிடெட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
Shiv Nadar
பின்னர் அவர் மைக்ரோகாம்ப் என்ற நிறுவனத்தை நிறுவினார், இது டெலி-டிஜிட்டல் கால்குலேட்டர்களை விற்கிறது. சில மாதங்களுக்குப் பிறகு இந்நிறுவனம் ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட் (HCL Technologies) எனப் பெயர் மாற்றப்பட்டது. 2008-ம் ஆண்டு ஷிவ் நாடார் ஐடி துறையில் அவரது பங்களிப்புகளுக்காக பத்ம பூஷன் விருது பெற்றார்.
Shiv Nadar And Roshni Nadar
40 ஆண்டுகளுக்கு மேலாக நிறுவனத்தை HCL நிறுவனத்தை வழிநடத்திய அவர் பின்னர் தலைவர் பதவியில் இருந்து விலகினார். அவரை தொடர்ந்து அவரின் ரோஷினி நாடார் அந்நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரும் நாட்டின் பணக்கார பெண்களில் ஒருவராக இருக்கிறார்.
Shiv Nadar
ஷிவ் நாடார் இந்தியாவின் முன்னணி பரோபகாரர்களில் ஒருவர். ஹுருன் இந்தியா பரோபகார பட்டியல் 2023 இன் படி, அவர் 2022-2023 இல் சுமார் 2,042 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி உள்ளார். அதாவது ஒரு நாளைக்கு சுமார் 5.6 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.
Shiv Nadar
’இந்தியாவின் மிகவும் தாராள மனம் கொண்ட நபர்' என்ற பெருமையை அவர் தொடர்ந்து 3 ஆண்டுகள் பெற்றிருந்தார். அவர் சென்னையில் எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியை நிறுவினார், மேலும் அவரது ஐடி நிறுவனம் நாட்டில் பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.