MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ரூ. 14,000 கோடி சொத்து மதிப்பு.. பிரைவேட் ஜெட், ஆடம்பர வீடு.. அம்பானியின் இந்த பணக்கார விருந்தினர் யார்?

ரூ. 14,000 கோடி சொத்து மதிப்பு.. பிரைவேட் ஜெட், ஆடம்பர வீடு.. அம்பானியின் இந்த பணக்கார விருந்தினர் யார்?

அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்து கொண்ட ஒரு சர்வதேச பிரபலம் தற்போது கவனம் ஈர்த்துள்ளார்.

2 Min read
Ramya s
Published : Jul 27 2024, 10:41 AM IST| Updated : Jul 27 2024, 10:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Kim Kardashian

Kim Kardashian

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தது. உலகின் மிகவும் விலையுயர்ந்த திருமணங்களில் ஒன்றாக இந்த திருமணம் கருதப்படுகிறது.

29
Kim Kardashian

Kim Kardashian

அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்து கொண்ட ஒரு சர்வதேச பிரபலம் தற்போது கவனம் ஈர்த்துள்ளார். அவர் வேறு யாருமில்லை. அமெரிக்காவின் தொலைக்காட்சி பிரபலம் கிம் கர்தாஷியன் தான். ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் ஆடம்பர திருமணத்தில் கலந்து கொண்ட கிம், விநாயகப் பெருமானின் சிலை அருகே எடுத்துக் கொண்ட படம் உட்பட பல போட்டோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

39
Kim Kardashian

Kim Kardashian

கிம் கர்தாஷியன் ஒரு ரியாலிட்டி டிவி நட்சத்திரம் என்பதை தாண்டி அவர் ஃபேஷன் ஐகானாகவும் வலம் வருகிறார். அவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.14,000 கோடி என்று கூறப்படுகிறது., நடிப்பு, மாடலிங் மற்றும் வணிக முயற்சிகள் மூலம் அவருக்கு ஆண்டு வருமானம் மொத்தம் ரூ 900 கோடி என்று கருதப்படுகிறது.

49
Kim Kardashian

Kim Kardashian

கலிஃபோர்னியாவில் பெவர்லி ஹில்ஸில் அவருக்கு சொந்தமாக ஆடம்பர வீடு உள்ளது. இந்த வீட்டின் மதிப்பு சுமார் 500 கோடி என்று கூறப்படுகிறது. 2022 இல் வாங்கப்பட்ட இந்த பிரம்மாண்ட வீடு 4,239 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது. மேலும் நேர்த்தியான வெள்ளை தீமில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில் 4 படுக்கையறைகள், 5 குளியலறைகள், ஒரு உடற்பயிற்சி கூடம், ஒரு தியேட்டர் மற்றும் ஒரு பெரிய நீச்சல் குளம் மற்றும் கூடைப்பந்து மைதானம் உட்பட பல ஆடம்பர வசதிகள் உள்ளன. 

59
Kim Kardashian

Kim Kardashian

ஆடம்பர வீட்டை தவிர கிம் பிரைவெட் ஜெட்டையும் வைத்திருக்கிறார். 2022 ஆம் ஆண்டில், 1,255 கோடி மதிப்புள்ள Gulfstream ஜெட் விமானத்தை வாங்கினார். அதற்கு 'கிம் ஏர்' என்று அவர் பெயரிட்டுள்ளார். இந்த. ஜெட் விமானத்தில் கிங் சைஸ் பெட், இரண்டு குளியலறைகள் மற்றும் காஷ்மீர் லெதர் இருக்கைகள் உள்ளன, இதில் 16 பயணிகள் வரை தங்கலாம்.

69
Kim Kardashian

Kim Kardashian

ரூ. 1 கோடி மதிப்புள்ள Audemars Piguet Royal Oak மற்றும் ரூ. 61 லட்சம் மதிப்பிலான பதிப்பு Aujacob & Co Casio G-Shock உட்பட பல ஆடம்பர கடிகாரங்களை கிம் வைத்திருக்கிறார். .

79
Kim Kardashian

Kim Kardashian

உலகம் முழுவது உள்ள பல்வேறு இடங்களுக்கு செல்ல ஆர்வம் காட்டி வரும் கிம் கர்தாஷியன் அடிக்கடி கோஸ்டாரிகாவின் வில்லாவுக்கு செல்வது வழக்கம். அந்த வில்லாவில் தங்க ஒரு நாள் வாடகை ரூ. 20 லட்சம் ஆகும். மேலும் துபாய், இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற இடங்களுக்கும் அவர் அடிக்கடி சுற்றுலா செல்கிறார்.

89
Kim Kardashian

Kim Kardashian

கிம் ஆடம்பர் ஹேண்ட்பேக்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார். அவரின் 130 ஆடம்பர பைகள் சேகரிப்பில் ₹3 கோடி மதிப்பிலான ஹிமாலயன் க்ரோக்கடைல் டயமண்ட் பர்கின் போன்றவை உள்ளன. 

 

99
Kim Kardashian

Kim Kardashian

மேலும் பல ஆடம்பர கார்களையும் அவர் வைத்திருக்கிறார். அதன்படி ரூ. 3.5 கோடி மதிப்புள்ள vanity van, மற்றும் ரூ.7.9 கோடி மதிப்புள்ள Rolls Royce Ghost  உட்பட பல  சொகுசு கார்கள் அவரிடம் உள்ளது. அவர் விளம்பரங்களுக்கு ரூ. 8 கோடி வரை சம்பளம் பெறுவதாகவும் கூறப்படுகிறது. 

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved