MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Flights: ஃப்ளைட் டிக்கெட் விலை குறையுதா? விமான எரிபொருள் விலையில் அதிரடி மாற்றம்! மத்திய அரசின் சூப்பர் திட்டம்!

Flights: ஃப்ளைட் டிக்கெட் விலை குறையுதா? விமான எரிபொருள் விலையில் அதிரடி மாற்றம்! மத்திய அரசின் சூப்பர் திட்டம்!

Flights: விமான எரிபொருள் விலையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் கொண்டு வந்துள்ளது. இதனால் விமான டிக்கெட் விலை உயராமல் தடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

2 Min read
Author : Rayar A
Published : Jun 04 2026, 09:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
விமான எரிபொருளுக்கு ஒரே விலை
Image Credit : X

விமான எரிபொருளுக்கு ஒரே விலை

சர்வதேச சந்தையில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்த விமான எரிபொருள் விலையை, மத்திய அரசு தனது அதிரடி திட்டத்தால் அதிரடியாகக் குறைத்துக் கட்டுப்படுத்தியுள்ளது. இதனால், விண்ணைத் தொட இருந்த விமான டிக்கெட் கட்டணங்கள் பெருமளவு உயர்வது தடுக்கப்பட்டு, பயணிகளுக்குப் பெரிய நிம்மதி கிடைத்துள்ளது.

அதாவது மத்திய அரசு புதிதாக அறிவித்துள்ள 'ATF விலை நிலைப்படுத்தல் நிதி' திட்டத்தின் கீழ், விமான எரிபொருளுக்கான (Aviation Turbine Fuel - ATF) விலை நிர்ணய முறை மாற்றப்பட்டுள்ளது. இதன்படி, டெல்லியில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளுக்கு ஒரே மாதிரியாக, ஒரு லிட்டர் விமான எரிபொருள் சுமார் ரூ.115-க்கு விற்கப்படும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இயக்குநர் விளக்கம்
Image Credit : Getty

விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இயக்குநர் விளக்கம்

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் குறித்து நடந்த அமைச்சகங்களுக்கு இடையேயான கூட்டத்தில், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இயக்குநர் ரோஹித் ராஜ் இதுபற்றி விளக்கினார். முந்தைய விலை உச்சவரம்பு முறையை மாற்றி, இந்த புதிய விலை முறைக்கு அரசு எப்படி வந்தது என்பதை அவர் தெளிவாக எடுத்துரைத்தார்.

"நேற்றைய தினம் 60.5, 75.62, 104, 142 என சில நம்பர்கள் பரவியது. அமைச்சரவை முடிவுக்குப் பிறகு இந்த வெவ்வேறு விலைகள் எப்படி வந்தன என்பதை நான் விளக்குகிறேன்" என்று ராஜ் பேசத் தொடங்கினார். அவர் சொன்னபடி, மார்ச் 1, 2026 அன்று, விமான எரிபொருளின் அடிப்படை விலை லிட்டருக்கு ரூ.60.5 ஆக இருந்தது. இது மேற்கு ஆசியப் பிரச்சினை காரணமாக எரிபொருள் சந்தை பாதிக்கப்படுவதற்கு முந்தைய விலை.

"பிப்ரவரி 28-க்கு பிறகுதான் மேற்கு ஆசியாவில் இந்த நெருக்கடி ஏற்பட்டது. அதனால், ஏப்ரல் மாதம் முழுவதும் விமான எரிபொருள் விலையில் பெரிய ஏற்ற இறக்கம் இருந்தது. மே 1-ம் தேதி விலை வெளியிடப்பட்டபோது, அது 142 ரூபாயாக இருந்தது. இதுதான் IPP விலை" என்று ராஜ் கூறினார்.

34
இனி உச்சவரம்பு கிடையாது
Image Credit : X

இனி உச்சவரம்பு கிடையாது

"மார்ச் மாத அடிப்படை விலையான ரூ.60.5-ல் 25% கணக்கிட்டால், ரூ.75.62 வரும். இப்படித்தான் அந்த கணக்கு வந்தது" என்றும் ராஜ் விளக்கினார். இதனுடன் பொருந்தக்கூடிய வரிகளைச் சேர்த்த பிறகு, டெல்லியில் உச்சவரம்பு முறையின் கீழ் விற்பனை விலை லிட்டருக்கு சுமார் ரூ.104 ஆக இருந்தது. "இந்த 104 ரூபாய் விலை, உச்சவரம்பு இருந்ததால்தான் வந்தது" என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

இப்போது அரசு இந்த உச்சவரம்பு முறையிலிருந்து விலகி, ஒரு நிலையான விலை முறைக்கு (fixed-price framework) மாறியுள்ளது. "புதிய திட்டத்தின் கீழ், இனி உச்சவரம்பு கிடையாது. அதற்கு பதிலாக, ஒரு நிலையான விலை முறைக்கு நாங்கள் மாறுகிறோம்" என்று ராஜ் கூறினார். 

இந்த திருத்தப்பட்ட திட்டத்தின் கீழ், வரிகள் மற்றும் சில கட்டணங்களை நீக்கிய பிறகு, Free on Board (FOB) நிலையில் எரிபொருள் விலையை அரசு நிர்ணயித்துள்ளது. "இந்தத் திட்டத்தின் கீழ், உள்நாட்டு விமான சேவைக்கு விலை ரூ.86.32 ஆகவும், சர்வதேச விமான சேவைக்கு ரூ.104.49 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.

44
மத்திய அரசின் ரூ.10,000 கோடி பட்ஜெட் ஆதரவு
Image Credit : X

மத்திய அரசின் ரூ.10,000 கோடி பட்ஜெட் ஆதரவு

விமானங்களின் இயக்கச் செலவுகளில் சுமார் 40% முதல் 60% வரை எரிபொருளுக்காகவே செலவிடப்படுகிறது. எனவே, இந்த விலை ஏற்ற இறக்கத்தைச் சமாளித்து பயணிகளுக்குக் கட்டணம் உயராமல் தடுக்க, எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு (OMCs) ரூ.10,000 கோடி வரை ஒருமுறை பட்ஜெட் ஆதரவு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இதுபற்றி கூறுகையில், "இந்திய விமான நிறுவனங்களுக்கு ATF விலை நிலைப்படுத்தல் ஆதரவை வழங்க, எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.10,000 கோடிக்கு மிகாமல் ஒருமுறை பட்ஜெட் ஆதரவு வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது" என்றார்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வானூர்திப் பயணங்கள்
இந்தியா
வணிகம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Post Office Scheme: பணம் இரட்டிப்பாகும் அஞ்சலக திட்டம்! ரூ.1,000 முதல் முதலீடு செய்யலாம் - முழு விபரம்
Recommended image2
Best Smartwatches Under 5000: 5000 ரூபாய்க்குள் கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட்வாட்ச்கள்!
Recommended image3
KVP Scheme: ரூ.5 லட்சம் முதலீடு.. ரூ.10 லட்சம் கையில்.! மத்திய அரசின் சூப்பர் சேமிப்பு திட்டம்..!
Related Stories
Recommended image1
Cancellation Charges: விமான டிக்கெட் ரத்து செய்தால் ஏன் இவ்வளவு கட்டணம்? மத்திய அரசு அதிரடி.. பயணிகள் குஷி
Recommended image2
Chennai Parandur Airport : பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து! ரூ.50,000 கோடி இழப்பா? விஜய் அரசின் அடுத்த பிளான் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved