MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • பழைய 5 ரூபாய் நாணயம் செல்லாதா? புழக்கம் குறைந்ததற்கு இதுதான் காரணமா?

பழைய 5 ரூபாய் நாணயம் செல்லாதா? புழக்கம் குறைந்ததற்கு இதுதான் காரணமா?

இந்தியாவில் பழைய ரூ.5 நாணயங்களின் புழக்கம் குறைந்து, புதிய செப்பு நிற நாணயங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பழைய 5 ரூபாய் நாணயம் செல்லாதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

2 Min read
Author : Ramya s
Published : Nov 14 2024, 09:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Old 5 Rupee Coin

Old 5 Rupee Coin

இந்தியாவில் ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10, ரூ.20 ஆகிய நாணயங்கள் புழக்கத்தில் இருக்கின்றன. எனினும் தற்போது சந்தையில் பழைய ரூ. 5 காசுகளின் புழக்கம் குறைந்து வருகிறது. பழைய நாணயங்களுக்கு பதில் புதிய செப்பு நிற ரூ.5 நாணயங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பழைய 5 ரூபாய் நாணயம் செல்லாதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் சந்தையில் இந்த நாணயங்கள் குறைந்ததற்கான உண்மையான காரணம் என்ன தெரியுமா? இதுகுறித்து தற்போது பார்க்கலாம்.

25
Old 5 Rupee Coin

Old 5 Rupee Coin

பழைய ரூ. 5 நாணயங்கள் கொஞ்சம் பெரிதாகவும் கனமாகவும் இருந்தன. இந்த நாணயங்கள் குப்ரோ-நிக்கல் என்ற விலையுயர்ந்த உலோகத்தால் செய்யப்பட்டவை. அவற்றின் எடை சுமார் 9 கிராம். ஆனால் சிலர் அவற்றை சட்ட விரோதமாக வங்கதேசத்துக்கு கொண்டு செல்கின்றனர். இந்த நாணயங்களை உருக்கி கத்திகளாக உருவாக்கப்படுகின்றன. இதன் மூலம் அதிகளவில் பணம் சம்பாதிப்பதாக கூறப்படுகிறது. 

உங்ககிட்ட பழைய ரூ.50 நோட்டு இருக்கா? அப்ப ரூ.25 லட்சம் உங்களுக்கு தான்!

35
Old 5 Rupee Coin

Old 5 Rupee Coin

ஒரே ஒரு ரூ. 5 நாணயத்தை உருக்கி ஆறு கத்திகளை உருவாக்கலாம். ஒவ்வொரு கத்தியும் ரூ. 2 ரூபாய்க்கு விற்கப்படுவதால் ஒரு 5 ரூபாய் நாணயத்தை உருக்கி கத்தி செய்து விற்பனை செய்வதன் மூலம் ரூ.12 சம்பாதிக்க முடியும். இந்த வியாபாரம் லாபகரமாக இருப்பதால் இந்தியாவில் இருந்து அதிக அளவில் நாணயங்கள் கடத்தப்படுகின்றன.

இந்த விஷயத்தை ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு சென்ற நிலையில், இதுகுறித்து ரிசர்வ் வங்கி முக்கிய முடிவை எடுத்தது. அதன்படி பழைய 5 ரூபாய் நாணயங்களை அச்சிடும் பணி நிறுத்தப்பட்டு, புதிய நாணயங்கள் அச்சடிக்கப்பட்டன.

45
Old 5 Rupee Coin

Old 5 Rupee Coin

இந்த புதிய 5 ரூபாய் நாணயங்கள் குறைவான தடிமன், எடை உடன் அச்சடிக்கப்பட்டன.. மேலும் புதிய 5 ரூபாய் நாணயங்கள், மலிவான உலோகத்தைக் கொண்டு தயாரிக்கத் தொடங்கினர். இதன் காரணமாகவே தற்போது சந்தையில் பழைய 5 ரூபாய்  நாணயங்களின் புழக்கம் குறைந்துள்ளது. புதிய 5 ரூபாய் நாணயங்கள் அதிகளவில் புழக்கத்தில் இருக்கின்றன.

இந்த 1 ரூபாய் இருந்தா போதும்... 10 லட்சம் ரூபாய் உங்களைத் தேடி வரும்!

55
Old 5 Rupee Coin

Old 5 Rupee Coin

பழைய 5 ரூபாய் நாணயங்களின் அச்சிடுவதை நிறுத்தியதன் மூலம் சட்டவிரோதமாக நாணயங்கள் கடத்தப்படுவது தடுக்கப்படும் என அதிகாரிகள் கருதுகின்றனர். பழைய 5 ரூபாய் நாணயங்களின் புழக்கம் வெகுவாக குறைந்ததற்கு இதுவே காரணமாகும். 

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி

Latest Videos
Recommended Stories
Recommended image1
கிழிந்த, சேதமான நோட்டு இருக்கா? வங்கியில் இலவசமாக மாற்றலாம்.. எப்படி தெரியுமா?
Recommended image2
ரயில் டிக்கெட் புக்கிங்.. மார்ச் 1 முதல் புதிய மாற்றம்.. ரயில் பயணிகள் உஷார்!
Recommended image3
1 ரூபாய் முதலீடு இல்லாமல் தொழில் தொடங்கலாம்!.. டாப் 5 பிசினஸ் ஐடியாஸ்!..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved