டி-மார்ட் விலை ஏன் குறைவு? பின்னால இருக்குற ட்ரிக் இதுதான்!
ராதாகிருஷ்னன் தமாணியால் தொடங்கப்பட்ட டி-மார்ட், தனது 'லோ-காஸ்ட்' பிஸினஸ் மாடல் மூலம் இந்திய ரீட்டெயில் உலகில் புரட்சி செய்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்கி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

டி-மார்ட்
இந்திய ரீட்டெயில் உலகில் “குறைந்த விலை – அதிக சேமிப்பு” என்ற மந்திரத்தை கொண்டு மக்கள் மனதில் பதிந்த பெயர் டி-மார்ட். ஒரு சாதாரண கிராசரி கடையாக தொடங்கிய இது இன்று இந்தியாவின் மிகப்பெரிய ரீட்டெயில் சங்கிலிகளில் ஒன்றாக உயர்ந்துள்ளது. பலர் தினசரி வாங்கும் பொருட்களுக்கு முதலில் நினைப்பது டி-மார்ட் தான். ஆனால், இந்த வெற்றியின் பின்னால் இருக்கும் சில ரகசியங்களை தெரிந்துகொண்டால், டி-மார்ட்-க்கு செல்லும் பலரும் ஆச்சரியப்படுவார்கள்.
ராதாகிருஷ்னன் தமாணி
இந்த சாதனையின் பின்னால் உள்ள முக்கிய மனிதர் ராதாகிருஷ்னன் தமாணி. அவர் 2002-ல் மும்பை பவாயில் முதல் கடையைத் தொடங்கினார். அப்போது ஒரு சிறிய முயற்சியாகத் தொடங்கிய இது இன்று 500-க்கும் மேற்பட்ட கடைகளாக வளர்ந்து புதிய வரலாறு படைத்துள்ளது. கடந்த 24 ஆண்டுகளில், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை இழக்காமல், மெதுவாகவும் திட்டமிட்டும் வளர்ந்ததே இந்த நிறுவனத்தின் மிகப்பெரிய பலமாகும்.
டி-மார்ட் குறைந்த விலை ரகசியம்
டி-மார்ட் வெற்றியின் முக்கிய ரகசியம் அதன் ‘லோ-காஸ்ட்’ பிஸினஸ் மாடல். இங்கு பொருட்கள் MRP-யை விட குறைந்த விலையில் கிடைக்கும். அதற்கு காரணம், பெரும்பாலான கடைகள் வாடகைக்கு அல்லாமல் சொந்தமாக வாங்கப்பட்டவை. இதனால் வாடகை செலவு குறைகிறது. மேலும், சப்ளையர்களிடம் பொருட்களை உடனடி பணம் கொடுத்து வாங்குவதால் குறைந்த விலைக்கு பொருட்கள் கிடைக்கிறது. அந்த லாபத்தை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடியாக வழங்குகிறது.
இந்திய ரீட்டெயில் வளர்ச்சி
மற்றொரு முக்கியமான விஷயம், டி-மார்ட்-ன் விரிவாக்க திட்டம். இது எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் கடைகள் திறக்காது. ஒரு நகரத்தில் ஒரு கடை வெற்றி அடைந்த பிறகு, அதே பகுதியிலேயே மேலும் கடைகள் திறக்கும். இதனால் போக்குவரத்து மற்றும் சப்ளைச் செலவுகள் குறைகின்றன. இதேபோல், மற்ற ரீட்டெயில் கடைகள் போல “ஷெல்ஃப் ஸ்பேஸ்” கட்டணம் வசூலிக்காமல், வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற மற்றும் அதிகம் விற்பனையாகும் பொருட்களையே முன்னிலைப்படுத்துகிறது.
சூப்பர் மார்க்கெட் டிஸ்கவுண்ட்
இன்றைக்கு டி-மார்ட் ஆன்லைன் தளமான “டி-மார்ட் ரெடி” மூலமும் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது. மேலும், எதிர்காலத்தில் டியர்-2 மற்றும் டியர்-3 நகரங்களில் அதிக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது. ஒரு சிறிய கடையாக தொடங்கி, கட்டுப்பாடு, திட்டமிடல் மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கையை அடிப்படையாக கொண்டு இந்தியாவின் மிகப்பெரிய ரீட்டெயில் பேரரசாக வளர்ந்தது டி-மார்ட் என்றால், அது ஒரு சாதாரண வெற்றி கதை அல்ல, ஒரு வணிக பாடமாகும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

