பிக்சட் டெபாசிட்களுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள் என்னென்ன? முழு லிஸ்ட்!
இந்தியாவில் பிக்சட் டெபாசிட்களுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள் என்னென்ன? பொதுத்துறை வங்கிகள் எவ்வளவு வட்டி வழங்குகின்றன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
Fixed Deposits Interest Rates
நிலையான வைப்பு தொகை (Fixed Deposit)
இந்திய மக்களுக்கு வங்கிகள் பெரும் வரப்பிரசாதமாக உள்ளன. பெரும்பாலான மக்கள் வங்கிகளில் பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்கின்றனர். வங்கிகள் நிலையான வைப்பு தொகைகளுக்கு (Fixed Deposit) வட்டிகள் வழங்கி வருகிறது. ஆனால் பிக்சட் டெபாசிட்களுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள் எது என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியவில்லை. அவர்களுக்கு உதவும் வகையில் இந்தியாவில் பிக்சட் டெபாசிட்களுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.
பைசாபஜார் பகிர்ந்து கொண்ட தரவுகளின்படி, இந்தியாவில் தற்போது குறைந்தது 11 வங்கிகள் பிக்சட் டெபாசிட்களுக்கு 8 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட வட்டி விகிதத்தை வழங்குகின்றன. இதில் சிறு நிதி வங்கிகள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. பைசாபஜார் தகவலின்படி நார்த் ஈஸ்ட் சிறு நிதி வங்கி 546 நாட்கள் முதல் 1111 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட்களுக்கு 9% வட்டி வழங்குகிறது.
Fixed Deposits Interest Rates
இந்தியாவில் பிக்சட் டெபாசிட்களுக்கு அதிக வட்டி வழங்கும் சிறு நிதி வங்கிகளின் பட்டியல்:
நார்த் ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 546 நாட்கள் முதல் 1111 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட்களுக்கு 9% வட்டி வழங்குகிறது.
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 1001 நாட்களுக்கு 9% வட்டி வழங்குகிறது.
சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை 8.6% வட்டி வழங்குகிறது.
ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 1 ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை 8.25% வட்டியும், உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை 8.50% வட்டியும் வழங்குகின்றன.
ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 888 நாட்களுக்கு 8.25% வட்டியும், உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 12 மாதங்களுக்கு 8.25% வட்டியும் கொடுக்கின்றன.
இந்த பேங்கில் அக்கவுண்ட் இருக்கா? ஜனவரி 23க்குள் அப்டேட் பண்ணுங்க
India's Private Banks
பிக்சட் டெபாசிட்களுக்கு அதிக வட்டி வழங்கும் தனியார் வங்கிகளின் பட்டியல்:
பந்தன் வங்கி: 1 ஆண்டு கால பிக்சட் டெபாசிட்களுக்கு 8.05% வட்டி வழங்குகிறது.
ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க் (IDFC First Bank) 400 முதல் 500 நாட்களுக்கு 7.90% வட்டி வழங்குகிறது.
ஆர்பிஎல் (RBL) வங்கி 500 நாட்களுக்கு 8.00% வட்டியும், டிசிபி (DCB) வங்கி 19 மாதங்கள் முதல் 20 மாதங்கள் வரை 8.05% வட்டியும் வழங்குகின்றன.
இந்தூஸ் இந்த் (IndusInd) வங்கி 1 ஆண்டு 5 மாதங்கள் முதல் 1 ஆண்டு 6 மாதங்களுக்கும் குறைவான காலத்திற்கு 7.99% வட்டி வழங்குகிறது.
ஹெச்டிஎப்சி (HDFC) வங்கி 4 ஆண்டுகள் 7 மாதங்கள் (55 மாதங்கள்) வரையிலான டெபாசிட்களுக்கு 7.40% வட்டி வழங்குகிறது.
ஐசிஐசிஐ (ICICI) வங்கி 15 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு 7.25% வட்டி வழங்குகிறது.
India's Private Sector Banks
பிக்சட் டெபாசிட்களுக்கு அதிக வட்டி வழங்கும் பொதுத்துறை வங்கிகளின் பட்டியல்:
மகாராஷ்டிரா வங்கி: 366 நாட்களுக்கு 7.45% வட்டி வழங்குகிறது.
சென்ட்ரல் வங்கி 3333 வரையிலான நாட்களுக்கு 7.50% வட்டி கொடுக்கிறது.
பாங்க் ஆஃப் பரோடா 400 நாட்களுக்கு 7.30% வட்டியும், பாங்க் ஆஃப் இந்தியா 400 நாட்களுக்கு 7.30% வட்டியும் கொடுக்கின்றன.
கனரா வங்கி: 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகளுக்கு குறைவான காலத்திற்கு 7.40% வட்டி அளிக்கிறது.
இந்தியன் வங்கி 400 நாட்களுக்கு 7.30% வட்டியும், யூனியன் வங்கி: 456 நாட்களுக்கு 7.30% வட்டியும் கொடுக்கின்றன.
கிரட்டி கார்டு என்றால் என்ன? நல்ல கார்டை தேர்வு செய்வது எப்படி?
Highest Interest Rates Banks
இந்தியாவில் பிக்சட் டெபாசிட்களுக்கு அதிக வட்டி வழங்கும் வெளிநாட்டு வங்கிகள்:
டாய்ச் வங்கி 1 ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரையிலான பிக்சட் டெபாசிட்களுக்கு 8% வட்டி வழங்குகிறது.
ஹெச்எஸ்பிசி (HSBC) வங்கி 601 முதல் 699 நாட்களுக்கு 7.50% வட்டியும், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கி 1 ஆண்டு முதல் 375 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட்களுக்கு 7.50% வட்டியும் அளிக்கின்றன.