Business With Low Investment : ரூ.15,000 இருந்தாலே போதும்! ஈஸியா சம்பாதிக்கலாம்
ஸ்டார்ட் அப் பிசினஸில் ஆர்வம் உள்ளவர்களுக்கு குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க சில யோசனைகள் உள்ளன. திறமை மற்றும் மார்க்கெட் அனாலிசிஸ் மூலம், அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளங்களில் ஊறுகாய், அப்பளம், மொபைல் ரிப்பேர், மாடி தோட்டம் பொருட்கள், கிளவுட் கிச்சன், காமன் சர்வீஸ் சென்டர் போன்ற தொழில்களை தொடங்கலாம்.

இப்போ ஸ்டார்ட் அப் பிசினஸ்ல நிறைய பேர் ஆர்வம் காட்டுறாங்க. நிறைய பேர் ரிஸ்க் எடுத்து புதுசா ஏதாவது ஆரம்பிக்கலாம்னு இருக்காங்க. சிலர் வேலையோட சேர்ந்து எக்ஸ்ட்ரா வருமானம் பார்க்க பிசினஸ் ஆரம்பிக்கலாம்னு இருக்காங்க. அதனால இந்த விஷயத்துல ரெண்டு விதமான ஆங்கிள் இருக்கு.
ஸ்டார்ட் அப் பிசினஸ்
ஆனா எல்லாத்துக்கும் மேல உங்க பேஷன் மற்றும் திறமைக்கு முக்கியத்துவம் கொடுங்க. பிசினஸ்ல இறங்குனா மட்டும் பத்தாது. அதுக்கு முன்னாடி மார்க்கெட் அனாலிசிஸ் பண்றது ரொம்ப முக்கியம். இப்போ இருக்குற சிச்சுவேஷன்ல எந்த மாதிரி ப்ராடக்ட்க்கு டிமாண்ட் இருக்கு, என்ன மாதிரி சர்வீஸ் கஸ்டமர்ஸ் விரும்புறாங்க?
பிசினஸ் ஐடியா
எல்லாத்துக்கும் முன்னாடி இந்த விஷயத்துல கவனம் செலுத்துங்க. ஏன்னா இப்பல்லாம் கம்மியான காசுல கூட பிசினஸ் ஆரம்பிக்கலாம். நிறைய நேரத்துல பெரிய முதலீடு தேவையில்லை. உங்ககிட்ட வெறும் 15 ஆயிரம் இருந்தா போதும். கடை இல்லன்னா ஸ்டோர் எதுவும் திறக்க தேவையில்லை.
வெறும் 11 ரூபாய்க்கு விமான டிக்கெட்.. வெளிநாட்டை சுற்றிப் பார்க்க செம சான்ஸ்!
ஈ-காமர்ஸ் பிளாட்பார்ம்ஸ்
அமேசான், பிளிப்கார்ட் இல்லன்னா மீஷோ மாதிரி ஈ-காமர்ஸ் பிளாட்பார்ம்ஸ் இருக்கு. இந்த பிளாட்பார்ம்ஸ கடையா யூஸ் பண்ணி பொருள் விக்க ஆரம்பிக்கலாம். கம்மியான முதலீட்டுல பிசினஸ் ஆரம்பிக்க இது ரெண்டும் ஈஸியான வழி. உங்களுக்கு ஸ்கில் இருந்தா முதலீடு தேவையில்லை.
ஃப்ரீலான்சிங்
அப்படி இருந்தா ஃப்ரீலான்சிங் கூட பண்ணலாம். உங்க பிசினஸ சரியா கொண்டு போய் சேர்க்கணும். ஸ்டைலிஷ் சேர், பர்னிச்சர், ஃபேஷன் ஆக்சஸரீஸ்க்கு மார்க்கெட்ல டிமாண்ட் இருக்கு. அதோட ஊறுகாய், அப்பளம் இதுக்கெல்லாம் டிமாண்ட் இருக்கு. 15 ஆயிரம் ரூபாய வச்சு இந்த பிசினஸ்லாம் பண்ணலாம். ஸ்மார்ட்போன் காலத்துல மொபைல் ரிப்பேர் பிசினஸ் நல்ல லாபம் தரும்
மாடி தோட்டம்
ஆனா அதுக்கு ட்ரெய்னிங் எடுக்கணும். ஏன்னா வேலை கத்துக்கிறது முக்கியம். நிறைய பேர் வீட்ல தோட்டம் போடுறாங்க. மாடி தோட்டமும், காய்கறி தோட்டமும் இப்ப ரொம்ப ஃபேமஸ். அதுக்கு தேவையான பொருள ஆன்லைன்ல விக்கலாம்.
ஆன்லைன் ஆர்டர்
ஏன்னா எப்பவுமே சாப்பாட்டுக்கு டிமாண்ட் இருக்கும். ஆன்லைன்ல ரெஸ்டாரண்ட் ஆரம்பிக்கலாம். அதாவது கிளவுட் கிச்சன். ஆன்லைன்ல ஆர்டர் எடுத்து சமைச்சு டெலிவரி பண்ணனும். கம்மியான முதலீட்டுல காமன் சர்வீஸ் சென்டர் ஆரம்பிக்கலாம். ஆதார், பான் கார்டு, கவர்மெண்ட் ஸ்கீம்ஸ்னு மக்களுக்கு தேவையான வேலைய செஞ்சு கொடுக்கலாம்.
நிறைய சம்பாதிக்கலாம்
இதுல மாசம் மாசம் நிறைய சம்பாதிக்க சான்ஸ் இருக்கு. எந்த பிசினஸ் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியும் எக்ஸ்பர்ட்ஸ் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கிறது நல்லது.
காய்கறி விற்று வளர்த்த அம்மா; விடாமுயற்சியோடு படித்து ஐபிஎஸ் ஆன மகன்!