- Home
- Business
- UPI Transaction Limit: யுபிஐ பண பரிவர்த்தனை வரம்பு உயர்வு..! எவ்வளவு தெரியுமா? டோட்டலாக மாறிய ரூல்ஸ்!
UPI Transaction Limit: யுபிஐ பண பரிவர்த்தனை வரம்பு உயர்வு..! எவ்வளவு தெரியுமா? டோட்டலாக மாறிய ரூல்ஸ்!
UPI Transaction Limit:: யுபிஐ பண பரிவர்த்தனை வரம்பு உயந்துள்ளது. செப்டம்பர் 15 முதல் வணிகர் பிரிவுகளுக்கு UPI வாடிக்கையாளர்கள் ஒரே நாளில் ரூ.10 லட்சம் வரையிலான P2M பரிவர்த்தனைகளைச் செய்யலாம்.

UPI Transaction Limit
Unified Payments Interface (UPI) என்று அழைக்கப்படும் மின்னணு பணப் பரிவர்த்தனை இன்றைய டிஜிட்டல் இந்தியாவில் அத்தியாவசிய தேவையாக உள்ளது. பிறருக்கு பணம் அனுப்பவும், பணம் பெறவும் UPI பெரிதும் உதவியாக இருக்கிறது. GPay, PhonePe, Paytm உள்ளிட்ட ஆப்ஸ்கள் UPI பண பரிவர்த்தனையில் முன்னணியில் உள்ளன. இதேபோல் ஏராளமான வங்கிகளும், தனியார் நிதி நிறுவனங்களும் UPI பண பரிவர்த்தனை ஆப்ஸ்களை கொண்டுள்ளன.
யுபிஐ பணபரிவர்த்தனை
இந்நிலையில், யுபிஐ-யில் (UPI) செப்டம்பர் 15, 2025 முதல் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. அதாவது செப்டம்பர் 15 முதல் வணிகர் பிரிவுகளுக்கு UPI வாடிக்கையாளர்கள் ஒரே நாளில் ரூ.10 லட்சம் வரையிலான P2M பரிவர்த்தனைகளைச் செய்யலாம். காப்பீட்டு பிரீமியம், பங்குச் சந்தை முதலீடுகள், அரசு இ-சந்தையில் (Government e-Marketplace) செய்யப்படும் வரி மற்றும் இதர கட்டணங்கள், பயணக் கட்டணங்கள் போன்ற குறிப்பிட்ட வணிகர் பரிவர்த்தனைகளுக்கு (Person-to-Merchant - P2M) ஒரு நாளில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை பரிவர்த்தனை செய்யலாம்.
தனிநபர் பரிவர்த்தனையில் மாற்றமில்லை
மேலே குறிப்பிட்ட வகைகளில் ஒரு தனிப்பட்ட பரிவர்த்தனையின் வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல் கிரெடிட் கார்டு பில்கள், நகை வாங்குதல், கடன் மற்றும் இஎம்ஐ போன்ற சில பரிவர்த்தனைகளுக்கும் வரம்புகள் உயர்த்தப்பட்டுள்ளன. அதே வேளையில் சாதாரண பரிவர்த்தனைகளுக்கு மாற்றம் இல்லை. தனிநபர் பரிவர்த்தனைகளுக்கான (Person-to-Person - P2P) ஒரு நாள் வரம்பு ரூ. 1 லட்சம் என்ற அளவிலேயே உள்ளது. அதில் எந்த மாற்றமும் இல்லை.
பரிவர்த்தனை கட்டுப்பாடுகள்
தினசரி மளிகை பொருட்கள், காய்கறிகள், மருந்துகள் போன்ற சிறிய தொகையிலான பரிவர்த்தனைகளுக்கும் இந்த மாற்றம் பொருந்தாது. இந்த மாற்றங்கள், வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் பெரிய பரிவர்த்தனைகளில் கட்டுப்பாடுகளை எதிர்கொண்ட துறைகளுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் அவர்கள் கட்டணங்களைப் பிரிக்க அல்லது காசோலைகள் மற்றும் வங்கி பரிமாற்றங்கள் போன்ற பாரம்பரிய விருப்பங்களைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.