UPI-யில் PIN இல்லாமல் பணம் பரிமாற்றம் செய்யலாம்.! கைகொடுக்கும் பயோமெட்ரிக் முறை.!
UPI பரிவர்த்தனைகளில் பயோமெட்ரிக் அங்கீகாரத்தைப் பயன்படுத்தும் புதிய முறையை NPCI அறிமுகப்படுத்துகிறது. விரல் ரேகை ஸ்கேன் மூலம் PIN எண் இல்லாமல் பணம் செலுத்தும் வசதி விரைவில் வரவுள்ளது.

ஈசியான விஷயம் மேலும் ஈசியாவும பாதுகாப்பாகவும் மாறுகிறது.!
UPI (Unified Payments Interface) என்பது இன்று இந்தியாவில் மிகவும் பிரபலமான பண பரிமாற்ற முறை. தினசரி கோடிக்கணக்கான மக்கள், வணிக நிறுவனங்கள், சிறு கடைகள் வரை அனைவரும் UPI-யை பயன்படுத்தி பரிமாற்றங்களை செய்கிறார்கள். இந்த நிலையில், இந்த பண பரிமாற்ற முறையில் ஒரு பெரிய மாற்றம் வரவிருக்கிறது.இந்திய தேசிய பண பரிமாற்ற நிறுவனம் (NPCI) தற்போது பயோமெட்ரிக் அடையாளங்கள் மூலம் UPI பரிவர்த்தனைகளை செய்வதற்கான புதிய முறையை அறிமுகப்படுத்த தயாராகியுள்ளது. இந்நிலையில், PIN எண் (பாஸ்கோட்) இல்லாமலும் பணம் பரிமாறும் வசதி விரைவில் தொடங்க வாய்ப்பு உள்ளது. இதற்காக பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடன் இணைந்து NPCI சோதனை வேலைகளை தொடங்கியுள்ளது.
பயோமெட்ரிக் முறையெனில் என்ன?
பயோமெட்ரிக் அடையாளம் என்பது உங்கள் விரல் ரேகை, முகம், கண்பார்வை போன்ற தனிப்பட்ட உடல் அடையாளங்களைப் பயன்படுத்தும் தொழில்நுட்பம். தற்போதைய UPI முறையில் பரிமாற்றம் செய்ய PIN எண் தேவைப்படும். ஆனால், புதிய மாற்றம் நடைமுறைக்கு வந்தால், பயனாளர்கள் PIN உள்ளிட வேண்டிய அவசியமே இருக்காது. பதிலாக, கை விரல் ஸ்கேன் செய்தாலே பரிவர்த்தனை முடிவடையும்.
இந்த மாற்றத்தால் ஏற்படும் நன்மைகள்
- PIN எண்ணை நினைவில் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் கிடையாது.
- பரிமாற்ற வேகம் அதிகரிக்கும்.
- பாதுகாப்பு கூடும். PIN எண்களை யாரும் திருட முடியாது.
- மூத்த குடிமக்கள், கல்வியறிவில்லாத மக்கள் ஆகியோருக்கு UPI பயன்படுத்தல் மேலும் எளிதாகும்.
பாதுகாப்பு குறித்த கவலைகள்
பயோமெட்ரிக் தரவுகள் மிகவும் நுணுக்கமானவை. இவை பாதுகாப்பாக சேமிக்கப்பட வேண்டியது அவசியம். எந்த நிறுவனங்களும் இந்த தரவுகளை தவறாக பயன்படுத்த முடியாதவாறு தகுந்த சட்ட கட்டுப்பாடுகள் அமலாக்கப்பட வேண்டும். NPCI இதற்காக தனிச்சிறப்பான பாதுகாப்பு வடிவமைப்புகளை உருவாக்கி வருகிறது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதற்கட்டமாக என்ன நடக்கும்?
புதிய முறை அறிமுகமாகும் தொடக்க கட்டத்தில் PIN மற்றும் பயோமெட்ரிக் இரண்டு முறைகளும் சேர்ந்து பயன்படுத்தக்கூடியதாக இருக்கும். பயனாளர்கள் தாங்கள் விரும்பும் முறையை தேர்வு செய்யலாம். இது ஒரு மென்மையான மாற்றமாக இருக்கும்.
எப்போது வரப்போகிறது?
இப்போது இது சோதனை கட்டத்தில் உள்ளது. சில மாதங்களில் இது சாமான்ய மக்களுக்காக அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. NPCI தரப்பில் இதற்கான தொழில்நுட்ப வேலைகள் முழுசாக செயல்படுகின்றன. இந்த புதிய மாற்றம் இந்திய பண பரிமாற்ற முறைமையில் ஒரு பெரும் புரட்சியாக அமையும். PIN இல்லாமல் பைோமெட்ரிக் அடையாளத்தின் மூலம் பணம் பரிமாறும் வசதி, நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் சிறந்த உதாரணமாகும். மக்கள் விரைவில் இந்த வசதியை அனுபவிக்கத் தொடங்கலாம்!