G Pay, PhonePe பயனர்களே! UPI பணப்பரிவர்த்தனைக்கு இனி பணம் செலுத்தனுமாம்
நாட்டில் தற்போது கணிசமான மக்கள் தங்கள் பணப்பரிவர்த்தனையை இணையதளம் வாயிலாக மேற்கொள்ளத் தொடங்கி உள்ளனர். அந்த வகையில் UPI மூலம் பணம் பரிவர்த்தனை மேற்கொள்ளும் நபர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இனி பேமெண்ட் செய்ய 15 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த பேமெண்ட் நிறுவனம் புதிய விதி கொண்டுவருகிறது.
UPI இப்போது மக்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயமாகிவிட்டது. ஆன்லைன் பரிவர்த்தனை இப்போது மக்களின் வாழ்க்கையில் இன்றியமையாததாகிவிட்டது.
UPI மூலம் ஒரு நாளில் சராசரியாக 60 முதல் 80 சதவீதம் பரிவர்த்தனைகள் நடக்கின்றன. இந்த பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
நாடு முழுவதும் பல நிறுவனங்கள் UPI மூலம் ஆன்லைன் பேமெண்ட் வசதியை வழங்குகின்றன, ஆனால் Paytm, Google Pay, PhonePe அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதுவரை UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படவில்லை. ஆனால் இனி ஆன்லைனில் பணம் செலுத்த கட்டணம் வசூலிக்கப்படும்.
ரீசார்ஜ் செய்ய கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இனி அந்த கட்டணம் ரீசார்ஜுக்கு மட்டும் இல்லாமல் மற்ற பரிவர்த்தனைகளுக்கும் வசூலிக்கப்படும். பெட்ரோல்-டீசல், மொபைல் ரீசார்ஜ், டிடிஎச் ரீசார்ஜ், பில் பேமெண்ட், ரயில்-விமான டிக்கெட், சினிமா டிக்கெட், ஃபாஸ்டேக், கேஸ் புக், பணம் அனுப்புதல்.