- Home
- Business
- இனிமேல் EB-பில் 1000 ரூபாய் குறையும்.! அப்படீன்னா மகளீருக்கு ரூ.2000 கிடைக்கும்.! எப்படி தெரியுமா.?
இனிமேல் EB-பில் 1000 ரூபாய் குறையும்.! அப்படீன்னா மகளீருக்கு ரூ.2000 கிடைக்கும்.! எப்படி தெரியுமா.?
மின்சாரக் கட்டணம் உயர்ந்து வரும் நிலையில், வீட்டு உபயோக மின்சாரச் செலவைக் குறைக்க எளிய வழிகள் உள்ளன. மின் விசிறிகள், ஏசி, வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ் போன்ற சாதனங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதன் மூலம் மாதம் ரூ.1000 வரை மிச்சப்படுத்தலாம்.

வீட்டை முன்னேற்ற சம்சாரம்! உலகை முன்னேற்ற மின்சாரம்!
இரவில் இருட்டில் வாழ்ந்து வந்த மனிதனுக்கு, ராத்திரியில் சூரியனை கொடுத்தது மின்சாரம் என்றால் அது மிகையல்ல! தற்போதைய சூழலில் இன்று மின்சாரம் இல்லாத சூழலை நினைத்து பார்ப்பதே கனிடமான விஷயமே. ஒரு பத்து நிமிடம் கரண்ட் கட் ஆனாலே மக்கள் தவித்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. மின்சார பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில் அதற்கேற்றால் போல் EB கட்டணமும் உயர்ந்தே செல்கிறது.
மின்சார செலவை குறைக்கலாம் ஈசியா!
ஒரு நடுத்தர குடும்பம் மின்சாரத்திற்காக மாதத்திற்கு 1,500 ரூபாய் வரை செலவழிக்கிறார்கள் என்கிறது சமீபத்திய கருத்து கணிப்பு. இதற்கு காரணம் பல நேரங்களில் தேவை இல்லாமல் நாம் மின்சாரத்தை பயன்படுத்துவதே என்கின்றனர் மின்வாரிய அதிகாரிகள். ஆனால் சில சிக்கன வழிகளைக் கடைப்பிடித்தால், மாதத்திற்கு குறைந்தது 500 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை மின்சார செலவை குறைக்க முடியும் என்றால் அது மிகையல்ல.!
அயர்ந்து தூங்க வைக்கும் மின் விசிறி!
நமது வீட்டில் மின் விசிறி தினமும் 15 மணி நேரம் ஓடினால் மாதத்திற்கு சராசரியாக 34 யூனிட் மின்சாரம் செலவாகும். இதனால் ரூ.270 – ரூ.300 வரை செலவாகும். வீடுகளில் பொதுவாக 2–3 மின் விசிறிகள் இருப்பதால், மொத்தமாக ரூ800 வரை செலவாகும் சூழல் உள்ளது. இந்தச் செலவை குறைக்க BLDC தொழில்நுட்ப விசிறிகளை பயன்படுத்தினால், அதே வேகத்திலும் 50% மின்சாரம் மட்டுமே தேவைப்படும். அதேபோல் ஆளுக்கு ஒரு ரூமில் இல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்து பணிகளை செய்தால் மின்சாரத்தை சேமிக்கலாம்.
ஏர் கண்டிஷனர் (AC)
சராசரியாக 1.5 டன் ஏசி, தினமும் 8 மணி நேரம் ஓடினால் மாதம் 360 யூனிட் மின்சாரம் தேவைப்படும். இதனால் அதிகபட்சமாக 2,800 ரூபாய் வரை செலவாகும். இந்த செலவை கட்டுப்படுத்த Inverter வகை 5 ஸ்டார் ஏசிகளை பயன்படுத்தலாம். மேலும், 24°C வெப்பநிலைக்கு மேல் வைத்தல், அறையை நன்றாக மூடுதல் போன்ற வழிகளும் மின்சார சேமிப்பை அதிகரிக்கும்.
வாஷிங் மெஷினுக்கு ஓய்வு கொடுப்போம்!
இல்லத்தரசிகளுக்கு பிடித்த முக்கியமான இயந்திரம் வாஷிங் மெஷின் என்றால் அது மிகையல்ல. துணி துவைப்பது என்ற சிரமமான பணியில் இருந்து அவர்களை காப்பது வாஷிங் மெஷின்களே. வாஷிங் மெஷினை வாரத்திற்கு மூன்று முறை மட்டும் பயன்படுத்தினால் கூட, மாதத்திற்கு 12 யூனிட் வரை மின்சாரம் தேவைப்படும். ட்ரையரை தவிர்த்து துணிமணிகளை கைகளால் துவைத்து சூரிய ஒளியில் காய வைத்தால் மிகச் சிறந்த தீர்வாக அமையும். துணிகளை அதிகமாக சேகரித்து ஒரே நேரத்தில் துபைப்பது கூட மின்சார சேமிப்புக்கு வழிவகுக்கும்.
கரண்டை குடிக்கும் பழைய ஃபிரிட்ஜ்
காய்கறி பழங்களை நமக்கு தினமும் பிரஷ்ஷாக கொடுக்கும் ஃபிரிட்ஜ் இல்லாவிட்டால் இல்லத்தரசிகள் தவித்தே போய் விடுவார்கள். பழைய ஃபிரிட்ஜ்கள் அதிகமாக மின்சாரத்தை குடிக்கும் என்கினறனர் மின்துறை நிபுணர்கள். ஒரு பழைய மாடல் ஃபிரிட்ஜ், நாள் முழுவதும் ஓடினால், மாதம் 60 யூனிட் வரை மின்சாரம் செலவாகும். அதற்கு மாற்றாக புதிய 5 ஸ்டார் ஃபிரிட்ஜ் இயங்குவதற்கு மாதம் சராசரியாக 24 யூனிட் மின்சாரத்தை மட்டுமே தேவைப்படும். இதில் 300 ரூபாய் வரை மின்சாரம் சேமிக்க முடியும். மேலும், கதவுகளை அடிக்கடி திறக்காமல் பார்த்துக்கொள்ளவும்.
இதையும் கவனிக்கவும்!
சிறிய சாதனங்கள், மிகப்பெரிய மின்சார பிலுக்கு அழைத்து செல்லும் என்றால் அது உண்மையே. WiFi ரவுட்டர், டிவி, செட்டாப் பாக்ஸ், லேப்டாப் சார்ஜிங், மொபைல் சார்ஜர் ஆகியவை standby mode-இலேயே மின்சாரம் இருந்தால் அதிகமாக மின்சரம் செலவாகும் என்பதை நாம் அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். இதில் மாதம் 10 முதல் 20 யூனிட் வரை மின்சாரம் வீணாகும். இந்த சாதனங்களை பயன்பாட்டிற்குப் பிறகு முழுமையாக அணைத்துவிட்டால் மின்சாரம் சேமிக்கப்படும்
விளக்குகள் பயன்பாடு
நம் வீடுகளில் இன்னும் சில இடங்களில் பல ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்டு வந்த CFL அல்லது பழைய Tube Light இருக்கலாம். இவை LED விளக்குகளைவிட 3 மடங்கு மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும். வீடு முழுவதும் LED விளக்குகள் பதித்தால் மாதம் ரூ.200 முதல் ரூ.300 வரை மின்சாரம் சேமிக்க முடியும் என்கின்றனர் மின்துறை அதிகாரிகள்.மேலும் பகல் போழுதில் இயற்கை வெளிச்சத்தை பயன்படுத்துவது கூட சிறந்த வழியாக பார்க்கப்படுகிறது.
மாற்றி யோசிக்கலாம்! காசு பார்க்கலாம்!
தற்போது நமக்கு சூரிய மின்சக்தி புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. சோலார் இன்வெர்டர்கள், சோலார் ஹீட்டர்கள், சோலார் லைட்டிங் போன்றவற்றில் ஆரம்பத்தில் முதலீடு அதிகமாக இருந்தாலும் இதனால் ஆணடுக்கு ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை EB செலவை குறைக்க முடியும். அரசு மானிய உதவியும் கிடைக்கக்கூடும்.
மாதம் எவ்ளோ மிச்சமாகும்!
இவ்வாறு சாதனங்களின் ஒவ்வொன்றையும் சிந்தனையோடு பயன்படுத்தினால், மின்சார செலவை கட்டுப்படுத்த முடியும். மாதமொன்றுக்கு 550 யூனிட் வரைக்கும் மின்சாரம் செலவாகும் ஒரு வீடில், சிக்கன வழிகளைச் சரியாகப் பயன்படுத்தினால் அதில் குறைந்தது 100 யூனிட் வரை கட்டுப்படுத்த முடியும். அதாவது ரூ.800 முதல் ரூ1,000 வரை நேரடியாக சேமிக்க முடியும்
மகளீருக்கு ரூ.2000 கிடைக்கும்!
மின்சாரத்தை நாம் சிக்கனமாக பயன்படுத்த வேண்டியது நமது பொறுப்பு. சிக்கனமாக செயல்பட்டால் வீட்டின் மொத்த EB செலவை 20% வரை குறைக்க முடியும். அது தொடர் பழக்கத்தால் மட்டும் சாத்தியமாகும். இன்று BLDC விசிறி, நாளை LED, மறுநாள் சோலார் — இவை எல்லாம் சேர்ந்து நம் பணத்தையும், சூழலையும் பாதுகாக்கும் என்றால் அது மிகையல்ல.! மின்சார சேமிப்பால் மாதம் ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும் சூழலில் தமிழக அரசு வழங்கும் மகளீர் உரிமை தொகையுடன் சேர்த்து அது இரண்டாயிரம் ரூபாயாக சேமிப்பில் சேரும் என்பது உண்மைதானே! ரெண்டு லட்டு திங்க யாருக்குதான் ஆசை இருக்காது!