தங்கம் விலை தொடர்ந்து சரியுது.. இல்லத்தரசிகள் குஷியோ குஷி
கடந்த வாரத்தில் உயர்ந்த தங்கம் விலை, இந்த வாரத் தொடக்கத்தில் சரிவை சந்தித்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் விலை குறைந்துள்ளதால், வாங்குவோருக்கு நல்ல சந்தர்ப்பமாக அமைகிறது.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த வாரத்தில் சவரனுக்கு கிட்டத்தட்ட ரூ.3,000 உயர்ந்த தங்கம் விலை, புதிய வாரத்தின் தொடக்கத்தில் சற்றே குறைந்துள்ளது, இன்று இரண்டாவது நாளாகவும் தங்கத்தின் விலை சரிவை கண்டுள்ளது. தங்கம் வாங்க திட்டமிட்டவர்களுக்கு இது ஒரு நெகிழ்ச்சி தரும் செய்தியாகவும் உள்ளது. கடந்த சில வாரங்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏறியதைப் பார்த்தபோது, இந்தப் புதுப்பிப்பு ஒரு தற்காலிக நிவாரணத்தை வழங்குகிறது.
தங்கம் விலை உயர்வுக்கு காரணங்கள்
உலக சந்தையில் ஏற்பட்ட பொருளாதார குழப்பங்களும், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட பதற்றங்களும், கடந்த ஏப்ரல் மாத தங்கம் விலையை உச்சத்திற்கு கொண்டு சென்றன. அதன் பின் மே மாதம் வரும்போது, விலை சற்றே சீராக ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டன. ஆனால், ஜூன் மாதம் தொடங்கி மீண்டும் தங்கம் விலை உயர்ந்ததால், பொதுமக்கள் மீண்டும் கவலையடைந்துள்ளனர். குறிப்பாக, கடந்த வாரத்தில் மட்டுமே தங்கம் விலை சவரனுக்கு ரூ.75 ஆயிரத்தை நெருங்கியது.
ஈரான் - இஸ்ரேல் போர்
மேலும், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான நிலைமைகளும் சர்வதேச சந்தையைப் பாதித்து, தங்கம் மீதான முதலீட்டு நம்பிக்கையை அதிகரித்தன. இந்த தாக்கம் காரணமாக, திருமண சீசன் முடிந்தபின்னும் தங்கம் வாங்கும் எண்ணிக்கையில் குறைவு காணப்படவில்லை. ஆனால் கடந்த நான்கு நாட்களாக, தங்கம் விலை நாளுக்கு நாள் குறைவடைந்து வருகின்றது, சந்தையில் சற்று சமநிலை ஏற்படுவதை உணர முடிகிறது.
தங்கம் விலை இன்று
இன்று (17.06.2025) விலை நிலவரம் படி, 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமத்திற்கு ரூ.105 குறைந்து, ஒரு கிராம் ரூ.9,200 மற்றும் ஒரு சவரன் ரூ.73,600 ஆக விற்பனையானது. செய்யப்பட்டது. மேலும், 18 காரட் தங்கமும் ஒரு கிராமத்திற்கு ரூ.85 குறைந்து, ஒரு கிராம் ரூ.7,575, ஒரு சவரன் ரூ.60,600 ஆக விற்பனை ஆகிறது. தொடர்ந்து இரண்டாவது நாளாக விலை குறைவடைந்துள்ளதால், தங்கம் வாங்க திட்டமிட்ட நபர்களுக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம் ஆகும்.
தங்கம் விலை இன்று
இதேபோல், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ.120 என்றும் ஒரு கிலோ ரூ.1,20,000 என்றும் விற்பனை நடைபெற்று வருகிறது. இது நகை வாங்குவோரிடையே மகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது.