MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்; அதிரடியாக குறைந்த தங்கம் விலை - எவ்வளவு?

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்; அதிரடியாக குறைந்த தங்கம் விலை - எவ்வளவு?

சர்வதேச சந்தை நிலவரங்களால் தங்கம் விலை ஏற்ற இறக்கமாக உள்ளது. சமீபத்தில் உச்சத்தைத் தொட்ட பிறகு, தங்கம் விலை தற்போது குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பார்க்கலாம்.

1 Min read
Author : Raghupati R
Published : May 29 2025, 10:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Today Gold Rate
Image Credit : Meta AI

Today Gold Rate

உலகளாவிய பொருளாதார சூழ்நிலை மற்றும் சர்வதேச சந்தை நிலவரம் இந்தியாவில் தங்கத்தின் விலையை நேர்மாறாக பாதிப்பது வழக்கமாக உள்ளது. இதன் காரணமாக தங்கம் விலை அடிக்கடி ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. சமீபத்தில் தங்கம் விலை மிகக் கூடிய அளவில் உயர்ந்த நிலையில், ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்தை தாண்டி வரலாற்றில் மிக உயர்ந்த நிலையைத் தொட்டது.

24
சமீபத்திய விலை மாற்றங்கள்
Image Credit : AI GENERATED IMAGE WITH GEMINI

சமீபத்திய விலை மாற்றங்கள்

இதற்கு முந்தைய நாட்களில் தங்கம் விலை ரூ.65,800 வரை குறைந்திருந்தது. ஆனால் அதன் பின்னர் தொடர்ந்து சில நாட்கள் விலை அதிகரித்து வந்தது. மே 28-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.71,480-க்கு விற்பனையானது. இப்போது, ​​மே 29-ஆம் தேதி காலை நிலவரப்படி விலை மேலும் குறைந்துள்ளது.

Related Articles

Related image1
Gold Rate : உச்சத்துக்கு சென்ற தங்கத்தின் விலை.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
Related image2
Gold and Crude Oil: தங்கத்தின் விலையை கச்சா எண்ணெய் நிர்ணயம் செய்வது எப்படி?
34
தங்கம் விலை இன்று
Image Credit : ChatGPT

தங்கம் விலை இன்று

அதேபோல சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலையில் மீண்டும் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.40 குறைந்து ரூ.8,895 ஆகவும், ஒரு சவரனின் விலை ரூ.320 குறைந்து ரூ.71,160 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

44
இன்றைய வெள்ளி விலை
Image Credit : unsplash

இன்றைய வெள்ளி விலை

இந்நிலையில் வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.111-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,11,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வாரத்திற்குள் தங்கத்தின் விலை மேலும் உயருமா அல்லது குறையுமா என்பதை சர்வதேச சந்தையின் நிலவரம் தீர்மானிக்கக்கூடும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தங்க விலை
இன்றைய தங்கம் விலை
தங்கம்
தங்க விலை
வெள்ளி

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ.20 கட்டினால் ரூ.2 லட்சம் காப்பீடு.. ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு பாதுகாப்பு திட்டம்
Recommended image2
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி டிக்கெட் புக் செய்தால் கேஷ்பேக்.. சூப்பர் ஆஃபர்!
Recommended image3
இந்த 5 விஷயங்கள் நடந்தால்.. உங்கள் வங்கி கணக்கை பயன்படுத்த முடியாது.. உடனே செக் பண்ணுங்க
Related Stories
Recommended image1
Gold Rate : உச்சத்துக்கு சென்ற தங்கத்தின் விலை.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
Recommended image2
Gold and Crude Oil: தங்கத்தின் விலையை கச்சா எண்ணெய் நிர்ணயம் செய்வது எப்படி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved