Gold Price : ஜெட் வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன?
தங்கம் விலை எதிர்காலத்தில் 38% வரை குறைய வாய்ப்புள்ளதாக அமெரிக்க பொருளாதார நிபுணர் ஜான் மில்ஸ் கணித்துள்ளார். சென்னையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்து விற்பனையாகிறது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக தங்கம் விலை எவரெஸ்ட் போல் உயர்ந்து வருகின்றது. இதனால் பொதுமக்கள் மிகவும் குழப்பமடைந்துள்ளனர். இனிமேல் தங்கம் விலை மேலும் உயருமா அல்லது திடீரென குறையுமா என்ற கேள்வி அனைவரையும் தாக்கி வருகிறது. குறிப்பாக திருமணம், விழா மற்றும் முதலீட்டு நோக்கில் தங்கம் வாங்கும் மக்கள் எப்போது வாங்குவது சரி என்ற தயக்கத்தில் உள்ளனர்.
தங்கம் விலை உயர்வு
இந்த சூழலில், அமெரிக்காவின் பொருளாதார நிபுணர் ஜான் மில்ஸ் ஒரு முக்கிய கணிப்பை வெளியிட்டுள்ளார். அவரின் கணிப்புப்படி, வருங்காலத்தில் தங்கத்தின் விலை சுமார் 38% வரை குறைவாகும் என கூறுகிறார். இதற்கான காரணங்களில், உலகளவில் தங்கம் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் சப்ளை அதிகம் இருப்பது முக்கியமானது. மார்க்கெட்டில் தங்கத்தின் கிடைப்புப் பற்றாக்குறை இல்லை என்றதால், விலை வீழ்ச்சி ஏற்படும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை தங்க விலை இன்று
கடந்த மாத தொடக்கம் முதல் தங்கம் விலை ஏற்ற இறக்கமாகவே இயங்கியது. ஒருபுறம் திடீர் உயர்வு மக்களுக்கு அதிர்ச்சியையும் கொடுத்தது; மறுபுறம் சட்டென குறைவதால் மக்களுக்கு இன்ப அதிர்ச்சியையும் கொடுத்தது. குறிப்பாக கடந்த பத்து நாட்களில் தங்கம் விலை பெரிய மாற்றமின்றி, மெல்ல மெல்ல கீழே போய்க்கொண்டே இருந்தது. கடந்த ஒரு வாரமாக தினசரி விலை குறைந்துவந்தது.
சென்னையில் இன்று தங்கத்தின் விலை
சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து, கிராமுக்கு ரூ.105 உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.9,120-க்கு மற்றும் ஒரு பவுன் ரூ.72,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதே பவுன் தங்கம் ரூ.71,320-க்கு விற்பனையாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய வெள்ளி விலை
மேலும் 24 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. இன்று 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.114 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,840-க்கு விற்கப்படுகிறது. 18 காரட் தங்கத்தின் விலை இன்று ரூ.90 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு கூடுதலாக, வெள்ளியின் விலையும் நிலைத்துள்ளது. தற்போது ஒரு கிராம் வெள்ளி ரூ.120-க்கு விற்பனை ஆகி வருகிறது.