- Home
- Business
- Today Gold Rate in Chennai : ஆடி தொடக்கமே அமோகம்.. அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை - எவ்வளவு தெரியுமா?
Today Gold Rate in Chennai : ஆடி தொடக்கமே அமோகம்.. அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை - எவ்வளவு தெரியுமா?
கடந்த சில நாட்களாக விலை அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையை காண்போம்.

தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், கடந்த மே மாதம் புதிய உச்சத்தை எட்டியது. அதனைத் தொடர்ந்து பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது.
தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.44,400க்கும், 22 கேரட் தங்கம் கிராம் ரூ.5,550க்கும் விற்பனையானது. இன்றைய (ஜூலை 17) நிலவரப்படி, தங்கம் விலை இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 14 ரூபாய் குறைந்து 5,536 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அதேபோல ஒரு சவரன் 114 குறைந்து, ரூ.44,288க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரை ஒரு கிராம் ரூ.81.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிலோ வெள்ளி ரூ.81,500க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது.
வெறும் ரூ.133 போடுங்க.. உங்களுக்கு 3 லட்சம் கிடைக்கும் - அதிக லாபம் தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டம்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.