தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு.. இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்.!
இந்தியாவில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் இருமுறை விலை உயர்வு கண்டு, ஒரு கிராம் தங்கம் ரூ.9,100 ஆகவும், ஒரு பவுன் தங்கம் ரூ.72,800 ஆகவும் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் போன்ற காரணிகள் விலை உயர்வுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் தங்கத்தின் விலை மீண்டும் ஏற்றத்தை கண்டுள்ளது. நேற்று காலை மற்றும் மாலை நேரங்களில் தங்கத்தின் விலை திடீரென உயர்ந்ததால், நகை வாங்குவோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தங்கம் விலை
நேற்று காலை, ஒரு பவுன் தங்கம் ரூ.1,000 உயர்ந்து ரூ.72,200-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.125 உயர்ந்ததால் ஒரு கிராம் விலை ரூ.9,025 ஆனது. இதனால் பொதுமக்கள் பதட்டத்தில் உள்ள நிலையில், மாலையிலும் விலை இன்னும் உயர்ந்தது. அதன்படி, மாலை நேரத்தில் ஒரு கிராம் தங்கம் ரூ.75 உயர்ந்து ரூ.9,100 ஆக உயர்ந்தது. இதனுடன், பவுன் விலை ரூ.72,800-க்கு சென்றது.
தங்கம் விலை உயர்வு
தங்கத்தின் இந்த விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணமாக, சர்வதேச சந்தை மாற்றங்கள் மற்றும் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான நிலவரம் குறிப்பிடப்படுகிறது. இது போன்ற காரணிகளால் தங்கம் மீண்டும் பாதுகாப்பான முதலீடு என கருதப்பட்டு வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்றைய தங்கம் விலை
இன்றைய தங்கம் விலை நிலவரத்தின்படி (மே 7) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,075க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.72,600க்கு விற்பனையாகிறது.
இன்றைய வெள்ளி விலை
அதேபோல வெள்ளி விலை எந்தவித மாற்றமும் இன்றி, வெள்ளி ஒரு கிராம் வெள்ளி ரூ.111க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,11,000க்கும் விற்பனையாகிறது. இது இல்லத்தரசிகள் மற்றும் நகை வாங்குவோரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.