ராக்கெட் வேகத்தில் ஏறிய தங்கம் விலை; இன்றைய விலை நிலவரம்
தங்கத்தின் விலை சமீபகாலமாக ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு விலை உயர்ந்த தங்கம், சமீபத்தில் சிறிது குறைந்தாலும், இன்று மீண்டும் உயர்வைச் சந்தித்துள்ளது. இந்த ஏற்ற இறக்கம் முதலீட்டாளர்களின் முடிவுகளை எவ்வாறு பாதிக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Today Gold and Silver Rate
தங்கத்தின் விலை கடந்த சில ஆண்டுகளாக நிலையான உயர்வைக் கண்டுவருகிறது. கோவிட் பெருந்தொற்று ஏற்படும் முன்னர், தங்கத்தின் விலை சீரான நிலையில் இருந்தது மற்றும் மிகப்பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லாமல் சென்றது. ஆனால், அதற்கு பிறகு ஏறத் தொடங்கியது. முக்கியமாக, அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு தங்கம் விலை மேலும் வேகமாக உயரத் தொடங்கியது.
தங்கம் விலை உயர்வுக்கான காரணங்கள்
அவர் அறிவித்த ரெசிப்ரோக்கல் வரி மற்றும் வணிகக் கட்டுப்பாடுகள் போன்ற திடீரான நடவடிக்கைகளே இந்த நிலைமையை உருவாக்கியது. உலகளாவிய பொருளாதார சூழ்நிலை மேலும் தங்கத்தின் விலை உயர்வை தூண்டியது. சமீபத்தில், ஏப்ரல் மாத இறுதியில் நடந்த அட்சய திருதியை கொண்டாடப்பட்டதால், மக்கள் தங்கம் வாங்கும் ஆர்வம் அதிகரித்தது, அதன் விலை உச்சத்திற்கு சென்றது.
தங்கத்தை வாங்கி குவிக்கும் மக்கள்
கடந்த சில நாட்களில் தங்க விலை குறைந்ததால் நகை விரும்பும் மக்களிடையே பெரும் சந்தோஷம் நிலவுகிறது. இந்த புதிய விலை சரிவை பலரும் தங்களுக்கான முதலீட்டு வாய்ப்பாக கருதி, தங்கம் வாங்க தயாராக உள்ளனர். தற்போது நிலவும் சர்வதேச சூழல், முதலீட்டாளர்கள் எடுத்துக் கொள்ளும் முடிவுகள் ஆகியவை, தங்கத்தின் எதிர்கால விலை நிலையை தீர்மானிக்கப்போகின்றன.
இன்றைய தங்கம் விலை
இன்று (மே 5) தங்கத்தின் விலையில் லேசான உயர்வு காணப்பட்டுள்ளது. இன்றைய விலையின்படி, 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.20 அதிகரித்து ரூ.8,775 ஆகவும், ஒரு சவரன் ரூ.160 உயர்ந்து ரூ.70,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 18 காரட் தங்கத்திலும் விலை உயர்வு பதிவாகியுள்ளது.
இன்றைய வெள்ளி விலை
இதில் ஒரு கிராமிற்கு ரூ.10 உயர்ந்து ரூ.7,250 ஆகவும், ஒரு சவரன் ரூ.80 அதிகரித்து ரூ.58,000 ஆகவும் விற்பனை நடைபெறுகிறது. அதேபோல, வெள்ளியின் விலை தற்போது ஒரு கிராம் ரூ.108 ஆகவும், ஒரு கிலோ ரூ.1,08,000 ஆகவும் உள்ளது.