MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • பர்சனல் லோன் வாங்குவது இனி ஈஸி; இந்த 6 இருந்தால் போதும்!

பர்சனல் லோன் வாங்குவது இனி ஈஸி; இந்த 6 இருந்தால் போதும்!

இப்போது இந்தியாவில் ஏராளமானோர் பர்சனல் லோன் வாங்கி வரும் நிலையில், பர்சனல் லோன் வாங்க என்னென்ன ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

3 Min read
Rayar r
Published : Jan 13 2025, 11:59 AM IST| Updated : Jan 19 2025, 11:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Personal Loan

Personal Loan

பர்சனல் லோன் (Personal Loan)

இந்தியாவில் பர்சல் லோன் எனப்படும் தனிநபர் கடன்களை (Personal Loan) அதிகமானோர் வாங்குகின்றனர். கல்விக்கட்டணம் செலுத்த, வாகனங்கள் வாங்க, அவசர மருத்துவ செலவுகள் என பல்வேறு செலவுகளை ஈடுகட்ட பர்சல் லோன்களை வாங்கி வருகின்றனர். நமது நாட்டில் தனியார் வங்கிகள் உள்பட ஏராளமான தனியார் நிதி நிறுவனங்கள் பர்சனல் லோன்களை கொட்டிக் கொடுக்கின்றன. குறைந்த வட்டி, குறைந்த இஎம்ஐ என ஆசைகாட்டி பெரும்பாலானவர்களை பர்சனல் லோன்களை வாங்க வைத்து விடுகின்றன.

25
How To Get Personal Loan

How To Get Personal Loan

6 ஆவணங்கள் அவசியம் 

மொபைல் வழியாக தனியார் நிதி நிறுவனங்களின் பெர்சன்ல் லோனுக்கு அப்ளை செய்வது மிவும் எளிமையானது. நீங்கள் லோன் வாங்கும் நிறுவனத்தின் ஆப்ஸ் (APP)  அல்லது இணையதளம் சென்று உங்கள் மொபைல் எண்ணை பதிவிட்டால், அதற்கு ஒரு ஓடிபி வரும். அந்த ஓடிபி எண்ணை டைப் செயதால் ரிசஸ்டர் ஆகி விடும். பின்பு உங்கள் பெயர், முகவரி மற்ற விவரங்களை அங்கு பதிவு செய்ய வேண்டியது இருக்கும்.

இந்த அடிப்படை விவரங்களை பதிவு செய்த பிறகுதான் முக்கியமான விஷயமே இருக்கிறது. அதன்பிறகு அவர்கள் கேட்கும் 6 ஆவணங்களை நீங்கள் சமர்ப்பித்தால் எளிதாக லோன் கிடைத்து விடும். அந்த ஆவணங்கள் என்னென்ன? என்பது குறித்து பார்ப்போம். 

100 கோடி வைர பேப்பர் வெயிட்; 50 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்! இந்தியாவின் முதல் கோடீஸ்வரர்!
 

35
How To Apply Personal Loan

How To Apply Personal Loan

பர்சனல் லோனுக்கு தேவையான முக்கிய ஆவணங்கள்:

சம்பள ரசீது (Pay Slip)

கடனைத் திருப்பிச் செலுத்தும் உங்கள் திறனை அளவிட, வங்கி அல்லது பிற கடன் வழங்கும் நிறுவனங்கள் உங்களின் கடந்த மூன்று மாத சம்பளச் சீட்டுகளை (Pay Slip) சமர்ப்பிக்கச் சொல்வார்கள். கடன் வழங்கும் நிறுவனங்கள் உங்கள் கையில் உள்ள ரொக்கத்தின் அடிப்படையில் உங்கள் பணப்புழக்கத்தை மதிப்பிடும். 

மொத்த சம்பளத்திற்கும் ஒருவர் கையில் பெறும் ரொக்கத்திற்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடு இருப்பதால் சம்பள சீட்டுகளை சமர்ப்பிக்க சொல்கின்றனர். உங்கள் நிறுவனத்தில் சம்பள சீட்டுகள் கொடுக்கவில்லை என்றால் சம்பளம் கிரெடிட் ஆகும் பேங்க் ஸ்டேட்மேன்டை (Bank Statement)  கேட்பார்கள். கடைசி 3 மாதத்துக்கு பேங்க் ஸ்டேட்மேன்ட் கொடுக்க வேண்டியது இருக்கும். 

பான் கார்டு (Pan Card)

பர்சனல் லோனுக்கு விண்ணப்பிக்கும் அனைவரும் கட்டாயம் பான் எனப்படும் நிரந்தரக் கணக்கு எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். இது வருமான வரி தொடர்பான ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஒரு முக்கிய ஆவணமாகும்.

45
Personal Loan Details

Personal Loan Details

ஆதார் கார்டு (Aadhar Card)

பர்சனல் லோனுக்கு விண்ணப்பிக்கும்போது ஆதார் எண் கண்டிப்பாக கேட்கப்படும். இது முகவரி மற்றும் அடையாளச் சான்று ஆவணமாக செயல்படுகிறது.

வேலைவாய்ப்புச் சான்று (Appointment Order or ID Card) 

சில நிறுவனங்கள் பர்சனல் லோனுக்கு விண்ணப்பிப்பவர்களின் அடையாள அட்டை மற்றும் நியமனக் கடிதம் போன்ற வேலைவாய்ப்புச் சான்றிதழ்களையும் கேட்கலாம்.

சம்பள உயர்வு கடிதம் (Salary Appraisal Letter)

நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் நியமன கடிதம் மற்றும் சம்பள ரசீதுகளை சமர்பித்தாலும், உங்களின் சமீபத்திய சம்பள உயர்வு கடிதத்தையும் சில கடன் வழங்கும் நிறுவனங்கள் கேட்க வாய்ப்பு இருக்கிறது.

உத்தரவாதம் அளிப்பவர் (Guarantor)

 பர்சனல் லோன் வாங்க உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் உங்களின் தாய் அல்லது தந்தை, சகோதர்கள் ஆகிய நெருங்கிய உறவுகளின் செல்போன் எண்கள், விவரங்களையும் கொடுப்பது மிகவும் அவசியமாகும்.   
 

 

55
Personal Loan Credit Score

Personal Loan Credit Score

கிரெடிட் ஸ்கோர் (Credit Score)

கிரெடிட் ஸ்கோர் என்பது ஆவணங்களில் வராது. ஆனால் நீங்கள் பர்சனல் லோன் வாங்க கிரெடிட் ஸ்கோர் என்பது மிகவும் முக்கியமானது. உங்களின் கடன் மதிப்பீடுகளை அளவிடும் கிரெடிட் ஸ்கோர் இதற்கு முன் வாங்கிய லோன்களை நீங்கள் சரியாக அடைத்துள்ளீர்களா? வேறு ஏதும் கடன்கள் நிலுவையில் உள்ளதா? என்பதை காட்டிக்கொடுத்து விடும்.  

ஆகவே கடன் வழங்கும் நிறுவனங்கள் உங்களின் கிரெடிட் ஸ்கோரை பரிசோதித்து விட்டு, அது நன்றாக அல்லது பராவாயில்லை என்பது போல் இருந்தால் மட்டுமே பர்சனல் லோன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்த்த செய்தி பொங்கலுக்கு முன்னாடியே வருது; அரசு ஊழியர்களுக்கு 56% வரை உயரும்?

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வணிகம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved