MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Crorepati Formula: ரூ.30,000 சம்பளத்தை ரூ.1 கோடி ஆக்கலாம்! மிடில் கிளாஸை கோடீஸ்வரனாக்கும் சூப்பர் ஃபார்முலா!

Crorepati Formula: ரூ.30,000 சம்பளத்தை ரூ.1 கோடி ஆக்கலாம்! மிடில் கிளாஸை கோடீஸ்வரனாக்கும் சூப்பர் ஃபார்முலா!

கோடீஸ்வரன் ஆகணும்னா பெரிய பிசினஸ் அல்லது லட்சக்கணக்கில் சம்பளம் வேணும்னு நினைக்கிறீங்களா? அப்போ நீங்க தப்பு. 50-30-20 விதியைப் பயன்படுத்தி, உங்க சின்ன சேமிப்பை எப்படி 1 கோடி ரூபாயா மாத்துறதுனு தெரிஞ்சுக்கோங்க. இதோ வழி...

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Mar 24 2026, 04:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
50 30 20 ஃபார்முலானா என்ன?
Image Credit : Gemini

50-30-20 ஃபார்முலானா என்ன?

நம்ம சம்பளத்தை கணக்கு பார்க்கும்போது பட்ஜெட் அடிக்கடி இடிக்கும். இதுக்குதான் உலகின் வெற்றிகரமான முதலீட்டாளர்கள் '50-30-20' விதியைப் பயன்படுத்துறாங்க. உங்க ₹30,000 சம்பளத்தை மூணா பிரிக்கணும். முதல் 50%, அதாவது ₹15,000, வீட்டு அடிப்படைத் தேவைகளுக்கு. அடுத்த 30%, அதாவது ₹9,000, உங்க ஆசைகளுக்கு (வெளியே சாப்பிடுவது, சுற்றுவது). கடைசி 20%, அதாவது ₹6,000, நேரடியா முதலீடு செஞ்சு 1 கோடி நிதி உருவாக்கலாம்.

25
₹6,000 சேமிப்பில் 1 கோடி எப்படி சாத்தியம்?
Image Credit : Gemini

₹6,000 சேமிப்பில் 1 கோடி எப்படி சாத்தியம்?

வெறும் 6,000 ரூபாய்ல எப்படி கோடீஸ்வரன் ஆக முடியும்னு யோசிக்கிறீங்களா? பதில், 'கூட்டு வட்டியின் சக்தி' (Power of Compounding). ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இதை உலகின் எட்டாவது அதிசயம்னு சொன்னார். இந்த சேமிப்பை ஒரு நல்ல மியூச்சுவல் ஃபண்ட்ல (SIP) முதலீடு செஞ்சு, ஆண்டுக்கு 12% வருமானம் கிடைச்சா, காலம் செல்லச் செல்ல அது வேலை செய்ய ஆரம்பிக்கும். முதல் 10 வருஷத்துல பணம் மெதுவா வளர்ற மாதிரி தோணும், ஆனா 15 வருஷத்துக்குப் பிறகு ராக்கெட் வேகத்துல ஏறும்.

Related Articles

Related image1
தூங்கும்போது கூட வருமானம் வரும்..! அரசு மானியத்துடன் EV சார்ஜிங் நிலையம்..? முதலீடு முதல் லாபம் வரை A to Z கைடு
Related image2
போடு.!! மாதம் ரூ.2.7 லட்சம் வருமானம்.. ஃபேஸ்புக் அறிவித்த புதிய திட்டம்.!
35
1 கோடி நிதி எப்போது தயாராகும்?
Image Credit : Getty

1 கோடி நிதி எப்போது தயாராகும்?

தொடர்ந்து 19-20 வருஷம் இதே மாதிரி முதலீடு செஞ்சா, இந்த சின்ன தொகை 1 கோடி ரூபாய்க்கும் மேல ஒரு நிதியை உருவாக்கும். SIP கால்குலேட்டர் படி, மாசம் ₹6,000 SIP செஞ்சா, 19-வது வருஷத்துல அது ₹1,01,73,234 ஆக மாறும். இதுல உங்க முதலீடு ₹36,83,532, ஆனா வட்டி மட்டுமே ₹64,89,702. உங்க சம்பளம் உயரும்போது சேமிப்பையும் கொஞ்சம் அதிகரிச்சா, இந்த இலக்கை இன்னும் சீக்கிரமா அடையலாம்.

45
கோடீஸ்வரன் ஆவதை தடுக்கும் 3 தவறுகள்
Image Credit : Getty

கோடீஸ்வரன் ஆவதை தடுக்கும் 3 தவறுகள்

1. மத்தவங்களுக்கு காட்டிக்கொள்ள EMI-ல் விலை உயர்ந்த போன் அல்லது கார் வாங்குவது.

2. முதலீட்டை தள்ளிப்போடுவது. 25 வயதில் தொடங்கும் ₹2,000 முதலீடு, 35 வயதில் தொடங்கும் ₹10,000-ஐ விட மதிப்புமிக்கது. 

3. எல்லா பணத்தையும் முதலீடு செய்வது. அவசர தேவைக்கு முதலீட்டை உடைக்காமல் இருக்க, குறைந்தது 6 மாத செலவுக்கான பணத்தை வங்கியில் தனியாக வைக்க வேண்டும்.

55
SIP-ஐ நிறுத்தாமல் தொடர்வது எப்படி?
Image Credit : Gemini

SIP-ஐ நிறுத்தாமல் தொடர்வது எப்படி?

உங்க சேமிப்புல ஒரு பகுதியை வச்சு அவசர கால நிதியை (Emergency Fund) உருவாக்குங்க. திடீர் மருத்துவச் செலவு அல்லது வேலை இழப்பு போன்ற சமயங்களில், பலர் தங்களோட பல வருட முதலீட்டை உடைச்சிடுறாங்க. இதனால கூட்டு வட்டி சுழற்சி உடைஞ்சு, நீங்க மறுபடியும் ஜீரோவுக்கு வந்துடுவீங்க. அதனால, குறைந்தது 6 மாத செலவுக்கான பணத்தை பேங்க்ல தனியா வைங்க. அப்போதான் உங்க முதலீடு தடையின்றி தொடரும். பொறுப்புத் துறப்பு (Disclaimer): இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இதில் உள்ள கணக்கீடுகள் உதாரணத்திற்காக கொடுக்கப்பட்டுள்ளன; சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இவை மாறலாம். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. எந்தவொரு முதலீட்டிற்கும் முன், உங்கள் SEBI பதிவு பெற்ற நிதி ஆலோசகரிடம் ஆலோசனை பெறவும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வணிகம்
வணிக யோசனை
வணிக உரிமையாளர்
Latest Videos
Recommended Stories
Recommended image1
கடையே வேண்டாம்! கிச்சன்ல இருந்தே லட்சத்தில் பணம் சம்பாதிக்கலாம்!
Recommended image2
ரயில் டிக்கெட் ரீஃபண்ட் விதிகளில் மாற்றம்.. பணத்தை மிச்சப்படுத்த இந்த 4 புதிய ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க!
Recommended image3
சொந்த வீடு வாங்கும் ஆசையா? ஏமாறாமல் இருக்க இதோ ஒரு முழு வழிகாட்டி!
Related Stories
Recommended image1
தூங்கும்போது கூட வருமானம் வரும்..! அரசு மானியத்துடன் EV சார்ஜிங் நிலையம்..? முதலீடு முதல் லாபம் வரை A to Z கைடு
Recommended image2
போடு.!! மாதம் ரூ.2.7 லட்சம் வருமானம்.. ஃபேஸ்புக் அறிவித்த புதிய திட்டம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved