MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ரூ.775 கோடிக்கு சொத்து இருந்தாலும் 30 வருடமாக ஒரு புடவை கூட வாங்காத தொழிலதிபரின் மனைவி!

ரூ.775 கோடிக்கு சொத்து இருந்தாலும் 30 வருடமாக ஒரு புடவை கூட வாங்காத தொழிலதிபரின் மனைவி!

தொழிலதிபர் இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மனைவியும் எழுத்தாளருமான சுதா மூர்த்தி சுமார் 775 கோடி ரூபாய் சொத்துகளை வைத்துள்ளார். ஆனால், 30 வருடமாக ஒரு புடவைகூட வாங்கவில்லை! அது ஏன் தெரியுமா?

2 Min read
Author : SG Balan
| Updated : Sep 11 2024, 11:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Sudha Murthy Saree

Sudha Murthy Saree

ராஜ்யசபா எம்.பி.யும், தொழிலதிபர் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மனைவுயமான சுதா மூர்த்தி, கடந்த 30 ஆண்டுகளாக தனக்கென ஒரு சேலை கூட வாங்கவில்லை என்று சமீபத்தில் தெரிவித்துள்ளார். ஷாப்பிங் செய்வதையும் கைவிட்டுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். கோடீஸ்வரரின் மனைவியாக இருந்தும் எப்பொழுதும் எளிமையான புடவையில் காட்சியளிக்கிறார்.

30 ஆண்டுகளுக்கு முன்பு காசிக்குச் சென்றபோது ஷாப்பிங் செய்வதைக் கைவிட்டதாக சுதா மூர்த்தி தெரிவித்திருக்கிறார். சுதா மூர்த்தியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 775 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவர் ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் சம்பாதிப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Sudha Murthy Simplicity

Sudha Murthy Simplicity

"காசிக்கு செல்லும் போது, ​​நீங்கள் மிகவும் விரும்பும் ஒன்றை விட்டுவிட வேண்டும் என்று கூறப்படுகிறது. நான் ஷாப்பிங் செய்வதை விரும்பினேன். எனவே கங்கைக்கு நான் கொடுத்த வாக்குறுதி என்னவென்றால், நான் இந்த வாழ்நாள் முழுவதும் ஷாப்பிங்கை செய்வதை விட்டுவிடுவேன் என்பதுதான்" என்று அவர் சுதா மூர்த்தி ஒரு பேட்டியில் கூறினார். 

"ஆறு வருடங்களுக்கு முன்பு என் அம்மா இறந்தபோது, அவரது அலமாரியில் 8-10 புடவைகள் மட்டுமே வைத்திருந்தார். 32 ஆண்டுகளுக்கு முன்பு என் பாட்டி இறந்தபோது, ​​அவரிடம் நான்கு புடவைகளே இருந்தன. அவர்கள் இந்த பூமியில் இலகுவாக பயணித்தார்கள். அவளுடைய வளர்ப்பில் உருவான நான் குறைவான உடைமைகளுடன் எளிமையான வாழ்க்கையை மேற்கொள்ள எளிதாகவே கற்றுக்கொண்டேன்" என்றும் கூறியிருக்கிறார்.

35
Sudha Murthy and Narayana Murthy

Sudha Murthy and Narayana Murthy

அவர் தனது சகோதரிகள், நெருங்கிய நண்பர்கள், தான் பணிபுரியும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் பரிசளிக்கப்பட்ட புடவைகளையே அணிகிறார். அவருக்குப் பிடித்த புடவைகள் பற்றியும் பகிர்ந்துகொண்டிருக்கிறார். இன்ஃபோசிஸ் அறக்கட்டளையில் பணிபுரிந்த பெண்கள் குழு அவருக்கு வழங்கிய இரண்டு எம்பிராய்டரி புடவைகள்தான் அவருக்கு மிகவும் விருப்பமானவை என்று தெரிவித்துள்ளார்.

45
Sudha Murthy Net Worth

Sudha Murthy Net Worth

ஆரம்பத்தில் அவரது சகோதரிகள் ஒவ்வொரு வருடமும் ஒன்றிரண்டு புடவைகளை பரிசாக அளித்தனர். பிறகு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வந்ததால் அதை சேகரித்து வைப்பதிலேயே சிரமம் ஏற்பட்டுவிட்டது என்றும் சொல்கிறார் சுதா மூர்த்தி. இதனால், தன்னிடம் ஏற்கனவே நிறைய புடவை இருக்கிறது என்று கூறி புதிய சேலைகளைப் பெறுவைத் தவிர்த்துவிட்டாராம்.

"நான் ஐம்பது வருடங்களாக புடவைகளை அணிந்து வருகிறேன். அணிந்த சேலையை துவைத்து, அயர்ன் செய்து பத்திரமாக வைக்கிறேன்" என்றும் கூறுகிறார். 

55
Sudha Murthy Books

Sudha Murthy Books

சுதா மூர்த்தி பல புத்தகங்களை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ராஜ்யசபாவிற்கு உறுப்பினராகப் பதவியேற்றார். இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவரான இவர் ராஜ்யசபாவில் முதல் முறையாக உரை நிகழ்த்தினார். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு தடுப்பூசி போடும் திட்டத்தை முன்வைத்துப் பேசினார்.

57 உள்நாட்டு சுற்றுலா தலங்களை உலக பாரம்பரிய சின்னங்களாக அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுதா மூர்த்தி கேட்டுக்கொண்டார். சுதா மூர்த்தியின் இந்த முதல் உரையை பிரதமர் பாராட்டினார். "பெண்களின் ஆரோக்கியம் பற்றி விரிவாகப் பேசிய சுதா மூர்த்திக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்" என்று பிரதமர் தெரிவித்தார்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Tax on one litre petrol: ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினா அரசுக்கு இவ்வளவு வரியா? வரி கணக்கீடு முழு விபரம்!
Recommended image2
Bonus Money Tips: தீபாவளி போனஸ் வந்தாச்சா? மொத்தமாகச் செலவு செய்யாமல் இப்படி பயன்படுத்துங்க
Recommended image3
Car Loan Interest Rates: தீபாவளி கார் வாங்கும் முன் இதைப் பாருங்க! வங்கிகளின் கடன் சலுகைகள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved