மாதம் ரூ.1000 முதலீட்டில் கோடியை அள்ளலாம்; இந்த பிளான் உங்களுக்கு தெரியுமா?
எஸ்ஐபி மூலம் அதிக வருமானம் பெற முடியும். சந்தை சரியில்லாத நிலையில், இந்த ஃபண்ட் அதிக வருமானம் தருகிறது. இதன் மூலம் நீங்கள் நல்ல லாபத்தை பெறலாம்.

குறைந்த காலத்தில் அதிக வருமானம் பெற அனைவரும் விரும்புவர்கள் இந்த முதலீட்டு திட்டத்தை பார்க்கலாம். பங்குச் சந்தை எப்போதும் ஒரு மாரத்தான் ஓட்டத்துடன் ஒப்பிடப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் முதலீடு செய்ய விரும்புபவர்கள் (Mutual Fund Investment) இந்தச் சந்தையிலிருந்து அதிக வருமானம் பெறலாம்.
Mutual Funds
எஸ்பிஐ லாங் டெர்ம் ஈக்விட்டி ஃபண்ட்
கூட்டு வட்டியின் வேகத்தில் லட்ச ரூபாய் முதலீடு கோடீஸ்வரர் ஆக்கும். எஸ்பிஐ லாங் டெர்ம் ஈக்விட்டி ஃபண்ட் (SBI Long term Equity Fund) அப்படிப்பட்ட ஃபண்ட் ஆகும். தொடர்ந்து 32 வருடங்கள் மாதம் 1000 ரூபாய் முதலீடு செய்தால், அந்த SIP ((Multibagger Fund) மூலம் நீங்கள் 1 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் பெறலாம்.
Mutual Fund Highest Return
37 மடங்கு வருமானம்
இந்த ஃபண்ட் கிட்டத்தட்ட 37 மடங்கு வருமானம் அளித்துள்ளது. கணக்கின்படி, 32 ஆண்டுகளில் இந்த ஃபண்டில் 10 ஆயிரம் ரூபாய் எஸ்ஐபி செய்தால் 14.4 கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருக்கும். மாதம் 1000 ரூபாய் எஸ்ஐபி செய்தால் 1.4 கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருக்கும்.
Sbi long term equity fund direct growth
3 வருட லாக் இன் காலம்
எஸ்பிஐ லாங் டெர்ம் ஈக்விட்டி ஃபண்ட் ஒரு ஓப்பன் எண்டட் ஈக்விட்டி லிங்க்ட் சேமிப்பு திட்டம். இதில் 3 வருட லாக் இன் காலம் உள்ளது. மேலும் இந்த ஃபண்டில் முதலீடு செய்வதன் மூலம் வரி சேமிக்கலாம். இந்த ஃபண்ட் கடந்த 1993 மார்ச் 31 அன்று சந்தையில் அறிமுகமானது.
Sbi long term equity fund
அதிக வருமானம்
முதலில் இந்த ஃபண்ட் டிவிடெண்ட் ஆப்ஷனாக இருந்தது. பின்னர் 2007ல், வளர்ச்சி ஆப்ஷனாக மாறியது. 15 வருட காலத்திற்கு ஆண்டுக்கு 16.03% மற்றும் 10 வருட காலத்திற்கு 17.59%. இந்த ஃபண்ட் 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 24.31% வருமானம் அளித்துள்ளது.
ரூ.5000-க்குள் கிடைக்கும் அசத்தலான ஏர் கூலர்கள்; லிஸ்ட் இங்கே!