MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Moringa Business : மாதம் லட்சங்களில் வருமானம் தரும் முருங்கை இலை பிசினஸ்! வெறும் 3 ஏக்கர் நிலம் இருந்தா போதும்!

Moringa Business : மாதம் லட்சங்களில் வருமானம் தரும் முருங்கை இலை பிசினஸ்! வெறும் 3 ஏக்கர் நிலம் இருந்தா போதும்!

Moringa Business : ராணுவத்தில் 20 ஆண்டுகள் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற தீபக் கடேகர் மற்றும் சந்தோஷ் நார்வாடே இருவரும், வெறும் 3 ஏக்கர் நிலத்தில் ஆண்டுக்கு 2 டன் முருங்கை பவுடர் தயாரித்து, கிலோவை ரூ.800 வரை விற்று பெரும் லாபம் ஈட்டி வருகிறார்கள்.

2 Min read
Author : Arun Mozhi Varman
Published : Jul 02 2026, 10:20 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
முருங்கை பவுடரில் இவ்வளவு லாபமா?
Image Credit : Chatgpt

முருங்கை பவுடரில் இவ்வளவு லாபமா?

முருங்கை இலைகளில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் ஊட்டச்சத்துகள் காரணமாக, உலகம் முழுவதும் இதன் தேவை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. உலகளாவிய முருங்கை பவுடர் சந்தை மதிப்பு 2025-ல் 0.65 பில்லியன் டாலராக இருந்தது, இது வரும் 2035-க்குள் 1.16 பில்லியன் டாலரை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், உலகளாவிய தேவையில் 80%-ஐ இந்தியா தான் பூர்த்தி செய்கிறது.

தீபக் மற்றும் சந்தோஷ் ஆகியோர் தங்களது 15 ஏக்கர் பாரம்பரிய நிலத்தில், சோதனை முயற்சியாக தலா 1.5 ஏக்கர் (மொத்தம் 3 ஏக்கர்) நிலத்தில் முருங்கை சாகுபடியைத் தொடங்கினர். இதற்காக அவர்கள் தமிழ்நாட்டின் கோயம்புத்தூருக்கே நேரில் வந்து, அதிக இலை மகசூல் தரும் "வலியாபட்டி" (Valiyapatti) ரக முருங்கை விதைகளைத் தேர்ந்தெடுத்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
உற்பத்தியை விட "மதிப்புக் கூட்டுதல்" (Value Addition) தான் கெத்து!
Image Credit : Gemini AI

உற்பத்தியை விட "மதிப்புக் கூட்டுதல்" (Value Addition) தான் கெத்து!

பெரும்பாலான விவசாயிகள் முருங்கை இலையை அப்படியே மலிவான விலைக்கு விற்றுவிடுவார்கள். ஆனால் இந்த ராணுவ நண்பர்கள் அங்கேயே தங்களின் புத்திசாலித்தனத்தைக் காட்டினர். இலையை நேரடியாக விற்காமல், அதை பவுடராக மாற்றி "Divyaniti Agro and Food Products" என்ற பெயரில் சொந்த பிராண்டாக சந்தைப்படுத்தினர்.

இவர்களின் பிசினஸ் மாடலின் ரகசியம் இதுதான்:

  • மொத்த விற்பனை (Wholesale): வியாபாரிகளுக்கு மொத்தமாக விற்கும்போது கிலோ ரூ.400 வரை மட்டுமே கிடைக்கிறது.
  • சொந்த பிராண்டிங் (Retail Branding): அதையே அழகாக 100 கிராம் பாக்கெட்டுகளாக (விலை ரூ.80) மாற்றி, தங்கள் சொந்த பிராண்டில் விற்கும்போது கிலோவுக்கு ரூ.800 கிடைக்கிறது! அதாவது லாபம் அப்படியே இரட்டிப்பாகிறது.

Related Articles

Related image1
Chanakya Rahasya: பிசினஸ் உலகம் அறியாத சாணக்கியரின் 8 ரகசியங்கள்! கோடிகளில் புரள மகா வியூகம்!
Related image2
Best Money Savings : வேலையே பாக்காம வட்டி பணத்திலேயே ஜாலியாக வாழ்வது எப்படி? இதுல முதலீடு பண்ணுங்க!
34
குறைந்த முதலீடு...சுலபமான பராமரிப்பு!
Image Credit : Gemini AI

குறைந்த முதலீடு...சுலபமான பராமரிப்பு!

முருங்கை விவசாயத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் — இதற்கு அதிகப் பராமரிப்போ, தண்ணீரோ தேவையில்லை. ஆரம்பத்தில் நிழலில் உலர்த்தும் உள்கட்டமைப்பு மற்றும் இலைகளைத் தூளாக்கும் 'பல்வரைசர்' (Pulveriser) இயந்திரம் ஆகியவற்றிற்கு மட்டுமே சுமார் ரூ.5 லட்சம் முதலீடு செய்தனர்.

அதன் பின், கெமிக்கல் உரங்களைத் தவிர்த்து, இயற்கை முறையில் மாட்டுச் சாணம், மண்புழு உரம் மற்றும் உள்ளூரிலேயே தயாரிக்கப்படும் "மோர்-முட்டை-வெல்லம்" கலந்த இயற்கை ஊட்டச்சத்து கரைசலை (Tak Andi Sanjeevak) மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். வருடத்திற்கு 3 முதல் 4 முறை தாராளமாக இலைகளை அறுவடை செய்யலாம்.

Chanakya Rahasya: பிசினஸ் உலகம் அறியாத சாணக்கியரின் 8 ரகசியங்கள்! கோடிகளில் புரள மகா வியூகம்!

44
நீங்களும் இதில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்?
Image Credit : Gemini AI

நீங்களும் இதில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்?

நீங்களும் முருங்கை பவுடர் பிசினஸில் இறங்கி நல்ல லாபம் பார்க்க, இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம்:

1.சரியான ரகத்தைத் தேர்ந்தெடுங்கள்: முருங்கைக்காய் விற்க வேண்டும் என்றால் ODC-3 போன்ற ரகங்களையும், இலை பவுடர் பிசினஸ் என்றால் அதிக இலைகள் தரும் 'வலியாபட்டி' போன்ற ரகங்களையும் தேர்வு செய்ய வேண்டும்.

2.நிழலில் உலர்த்துதல் (Shade Drying): பறித்த இலைகளை நேரடி வெயிலில் காய வைக்கக் கூடாது. நிழலில் உலர்த்தினால் மட்டுமே அதன் பச்சையமும் (Nutritional profile) மருத்துவக் குணங்களும் மாறாமல் இருக்கும்.

3.மெஷின் மூலம் பவுடராக்குதல்: நன்கு காய்ந்த இலைகளை ஒரு பல்வரைசர் மற்றும் ஃபில்டரிங் மெஷின் கொண்டு மிக நைசான பவுடராக மாற்ற வேண்டும்.

4.அழகான பேக்கிங் & பிராண்டிங்: FSSAI உரிமம் பெற்று, 100 கிராம், 250 கிராம் பாக்கெட்டுகளில் கவர்ச்சியாக பேக் செய்து ஆன்லைனிலும் (Amazon, Flipkart) உள்ளூர் ஆர்கானிக் கடைகளிலும் விற்கத் தொடங்கலாம்.

பாரம்பரிய விவசாய முறைகளிலிருந்து மாறி, விளைபொருட்களை நாமே மதிப்புக்கூட்டி, பிராண்டிங் செய்து விற்கப் பழகினால் விவசாயத்திலும் ஐடி வேலைகளை விட பல மடங்கு அதிகமாகச் சம்பாதிக்க முடியும் என்பதற்கு இந்த இரு நண்பர்களின் வெற்றியே சாட்சி!

Kubera Yoga : இனி இவர்களைப் பிடிக்கவே முடியாது! அவிட்ட ராகுவால் குபேரனாக மாறப்போகும் 'அந்த' 4 ராசிகள்!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

AM
Arun Mozhi Varman
Bio : அருண் மொழி வர்மன் மீடியா துறையில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். மக்கள் தொலைக்காட்சி, ஒன் இந்தியா, கிளான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ள இவர், பல்வேறு தளங்களில் செய்தி, கட்டுரை மற்றும் சிறப்புப் பதிவுகளை வெளியிட்டுள்ளார். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் துணை ஆசிரியராக பணி புரியும் இவர் அரசியல், சமூக நிகழ்வுகள், வரலாறு, கலாச்சாரம் மற்றும் சினிமா உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
வணிகம்
வணிக யோசனை
வணிக உரிமையாளர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்! 8.2% வட்டியுடன் SCSS சேமிப்பு திட்டம்! புதிய 5 ரூல்ஸ் தெரிஞ்சிக்கோங்க!
Recommended image2
Post Office Savings Scheme: தினமும் ₹50 போதும்.! ₹35 லட்சம் அள்ளலாம்! இந்த சூப்பர் ஸ்கீம் தெரியுமா?
Recommended image3
Hotel Safety Tips: ஹோட்டல் ரூமில் உள்ள கெட்டிலை கையால் கூட தொடாதீர்கள்.! அருவருக்க வைக்கும் காரணங்கள்.! உண்மை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க.!
Related Stories
Recommended image1
Chanakya Rahasya: பிசினஸ் உலகம் அறியாத சாணக்கியரின் 8 ரகசியங்கள்! கோடிகளில் புரள மகா வியூகம்!
Recommended image2
Best Money Savings : வேலையே பாக்காம வட்டி பணத்திலேயே ஜாலியாக வாழ்வது எப்படி? இதுல முதலீடு பண்ணுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved