MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Old Gold Exchange: தங்கம் எக்ஸ்சேஞ்ச் செய்யும் போது இத்தனை சதவீதம் நஷ்டமாகுமா? ஏமாறாமல் இருக்க இதை படிங்க!

Old Gold Exchange: தங்கம் எக்ஸ்சேஞ்ச் செய்யும் போது இத்தனை சதவீதம் நஷ்டமாகுமா? ஏமாறாமல் இருக்க இதை படிங்க!

சிலர் பழைய நகைகளை கொடுத்துட்டு புது டிசைன்ல நகை வாங்கலாம்னு யோசிப்பாங்க. அப்படி செய்யும்போது, ஆயிரக்கணக்குல பணத்தை இழக்காம இருக்க, நகைக்கடைக்காரங்க செய்யுற சில 'மறைமுக கட்டண' தந்திரங்களை பத்தி தெரிஞ்சுக்கலாம் வாங்க.!

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Apr 23 2026, 10:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அதிக சேதாரம் போட்டா ஒத்துக்காதீங்க.!
Image Credit : Gemini

அதிக சேதாரம் போட்டா ஒத்துக்காதீங்க.!

நீங்க உங்க பழைய நகைகளை நகைக்கடைக்காரரிடம் கொடுக்கும்போது, அதை உருக்கி (Melting Loss) சுத்தத்தன்மையை செக் பண்ணனும்னு சொல்லுவாங்க. இங்கதான் வியாபார விளையாட்டே ஆரம்பிக்குது. உருக்கினதுக்கு அப்புறம், 2-ல இருந்து 4% வரைக்கும் 'அழுக்கு' அல்லது 'சேதாரம்'னு சொல்லி எடையை குறைச்சிடுவாங்க. இதைத் தவிர்க்க, நகை உருக்கும்போது நீங்க நேர்ல நின்னு பாருங்க. ஹால்மார்க் நகைன்னா, அதிக சேதாரம் போட்டா ஒத்துக்காதீங்க.

24
அவங்க சொல்றதை அப்படியே நம்பாதீங்க.!
Image Credit : Gemini

அவங்க சொல்றதை அப்படியே நம்பாதீங்க.!

இன்னைக்கு தங்கத்தோட விலை ₹1.லட்சத்தை தாண்டி இருக்கு. ஆனா, இது 24 காரட் (99.9% தூய்மையான) தங்கத்தோட விலை. உங்க நகைகள் பெரும்பாலும் 22 காரட்லதான் இருக்கும். நகைக்கடைக்காரங்க உங்க பழைய நகையை 20 அல்லது 18 காரட்னு சொல்லி விலையை குறைச்சிடுவாங்க. இதை தவிர்க்க, பக்கத்துல இருக்குற 'கேரட் மீட்டர்' சென்டருக்கு போய் நீங்களே முதல்ல தூய்மையை (Purity Test) செக் பண்ணிக்கோங்க. அவங்க சொல்றதை அப்படியே நம்பாதீங்க.

Related Articles

Related image1
Business Ideas: மாசம் ரூ.1லட்சம் சம்பாதிக்கலாம்! வெறும் ரூ.50,000 முதலீட்டில் இந்த 5 தொழில்களை தொடங்குங்க!
Related image2
Business Ideas: கைநிறைய சம்பாதிக்க ஆசையா? ரூ.1 லட்சம் முதலீடு போதும்.. டாப் 5 பிசினஸ் ஐடியாக்கள் இதோ!
34
செய்கூலியில் தள்ளுபடி கிடைக்கும்போது நகை செஞ்சுக்கலாம்.!
Image Credit : AI Generated

செய்கூலியில் தள்ளுபடி கிடைக்கும்போது நகை செஞ்சுக்கலாம்.!

பழைய நகையை கொடுத்துட்டு புது நகை வாங்கும்போது, நீங்க ரெண்டு தடவை பணத்தை இழக்குறீங்க. பழைய நகை வாங்கும் போது கொடுத்த செய்கூலி (Making Charges), இப்போ ஜீரோ ஆகிடும். புது நகைக்கும் நீங்க மறுபடியும் 15% முதல் 25% வரைக்கும் செய்கூலி கொடுக்கணும். இதை தவிர்க்க, பழைய தங்கத்துக்கு பதிலா தங்க நாணயம் அல்லது கட்டி வாங்கி வெச்சுக்கோங்க. சௌகரியமா, செய்கூலியில் தள்ளுபடி கிடைக்கும்போது நகை செஞ்சுக்கலாம்.
44
 நம்பிக்கையான நகை நிபுணரிடம் ஆலோசனை தேவை
Image Credit : Meta AI

நம்பிக்கையான நகை நிபுணரிடம் ஆலோசனை தேவை

இந்த வருஷம் தங்கத்தோட விலை பயங்கரமா ஏறியிருக்கு. டிசம்பர் 31, 2025-ல 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு சுமார் ₹1.33 லட்சமா இருந்துச்சு. இப்போ அது ₹1.52 லட்சத்தை தாண்டிடுச்சு. இதுக்கு முன்னாடி, ஜனவரி 2026 கடைசியில, தங்கம் 10 கிராமுக்கு ₹1.76 லட்சம் வரைக்கும் போய் ஒரு புதிய சாதனையை படைச்சது. இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தங்கத்தின் விலைகள் (Gold Rates) IBJA-வின் படி கொடுக்கப்பட்டுள்ளன. இங்கே சொல்லப்பட்டிருக்கும் எக்ஸ்சேஞ்ச் பாலிசி, சந்தையின் பொதுவான விதிகளை அடிப்படையாகக் கொண்டது. ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு நகைக்கடையிலும் தங்கத்தின் விலை மாறுபடலாம். பழைய நகையை மாற்றுவதற்கு அல்லது புதிய தங்கம் வாங்குவதற்கு முன், உங்களுக்கு நம்பிக்கையான நகை நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. மேலும், தூய்மையை அரசு அங்கீகாரம் பெற்ற மையங்களில் மட்டுமே சரிபார்க்கவும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
தங்கம்
தங்க நகைகள் சுத்தம் செய்யும் முறைகள்
தங்க இறக்குமதி விதிகள்
தங்க நகை
வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட தங்க நகை

Latest Videos
Recommended Stories
Recommended image1
இன்றைய தங்கம் விலை உயர்ந்ததா? குறைந்ததா? வாங்க இதுதான் சரியான நேரமா?
Recommended image2
Best Investment Plan: FD-வை விட லாபம் அதிகம்! இந்த 5 அரசு சேமிப்பு திட்டங்கள் பற்றி தெரியுமா?
Recommended image3
பெட்டி பெட்டியாக தக்காளி.! மூட்டை மூட்டையாக வெங்காயம்.! லாரியில் குவிந்த காய்கறிகள்! இதோ விலை நிலவரம்?
Related Stories
Recommended image1
Business Ideas: மாசம் ரூ.1லட்சம் சம்பாதிக்கலாம்! வெறும் ரூ.50,000 முதலீட்டில் இந்த 5 தொழில்களை தொடங்குங்க!
Recommended image2
Business Ideas: கைநிறைய சம்பாதிக்க ஆசையா? ரூ.1 லட்சம் முதலீடு போதும்.. டாப் 5 பிசினஸ் ஐடியாக்கள் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved