MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • SIP vs STP: மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டுக்கு சிறந்தது எது? முழு விவரம் இதோ!

SIP vs STP: மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டுக்கு சிறந்தது எது? முழு விவரம் இதோ!

SIP மாதாந்திர குறிப்பிட்ட தொகை முதலீடு, STP பெருந்தொகை டெப்ட் ஃபண்டில் முதலீடு செய்து படிப்படியாக ஈக்விட்டிக்கு மாற்றும் முறை. SIP தொடர் முதலீட்டுக்கு, STP சந்தை அபாயம் குறைக்க ஏற்றது. இலக்குகள், ரிஸ்க் சகிப்புத்தன்மைக்கு ஏற்ப தேர்வு செய்யவும்.

2 Min read
Author : SG Balan
| Updated : Jan 06 2025, 07:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
SIP vs STP

SIP vs STP

பல லட்சம் முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய SIP திட்டத்தைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் சிலருக்கு STP பற்றியும் தெரிந்திருக்கும். SIP என்பது ஒரு நிலையான தொகையை மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை முதலீடு செய்வதாகும். இம்முறையில், பெரும்பாலும் மாதந்தோறும் முதலீடு செய்யப்படுகிறது.

இதற்கு நேர்மாறாக, STP முறையில் முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்டில், ஒரு டெப்ட் ஃபண்டில் முதலீடு பெரிய தொகை ஒன்றை முதலீடு செய்கிறார்கள். பிற்கு அதை சீரான இடைவெளியில் படிப்படியாக ஈக்விட்டி ஃபண்டுகளுக்கு மாற்றுவார்கள். இந்த செயல்முறை, குறைந்த ஆபத்துள்ள டெப்ட் ஃபண்டுகளில் இருந்து ஈக்விட்டி ஃபண்டுகள் போன்ற அதிக ரிஸ்க் உள்ள ஃபண்டுகளுக்கு நிதியை படிப்படியாக மாற்ற உதவுகிறது. இம்முறையில் முதலீட்டாளர்கள் சிறந்த வருவாயை ஈட்டும் அதே வேளையில் அதிக ரிஸ்க்கையும் சமாளிக்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Mutual Fund options

Mutual Fund options

SIP இன் கீழ், முதலீட்டாளரின் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக மியூச்சுவல் ஃபண்டிற்கு பணம் டெபாசிட் செய்யப்படுகிறது. இதன் மூலம் முதலீடைத் தொடங்க பெரிய தொகை தேவையில்லை. STP க்கு ஒரு டெப்ட் ஃபண்டில் ஆரம்பத்திலேயே மொத்தத் தொகையை முதலீடு செய்ய வேண்டும். அதில் இருந்து கிடைக்கும் பணம் ஈக்விட்டி ஃபண்டுகளுக்கு மாற்றப்படுகிறது.

SIP அணுகுமுறை மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீட்டாளர்கள் நிலையான தொகையை தொடர்ந்து முதலீடு செய்ய அனுமதிக்கிறது. STP இல் முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு மியூச்சுவல் ஃபண்டில் இருந்து மற்றொன்றுக்கு தொகையை மாற்ற முடியும். மாற்றப்படும் தொகை முன்னரே தீர்மானிக்கப்பட்டதாக இருக்கும். பொதுவாக ஒரு டெப்ட் ஃபண்டிலிருந்து ஈக்விட்டி ஃபண்டுக்கு பரிமாற்றம் நடைபெறும்.

34
SIP Investment

SIP Investment

SIP முதலீட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை மியூச்சுவல் ஃபண்டில் சீரான இடைவெளியில் டெபாசிட் செய்கிறார்கள். STP முதலீட்டாளர்கள் ஆரம்பத்தில் மொத்தத் தொகையை ஒரு ஃபண்டில் செலுத்திவிட்டு, அதிலிருந்து மற்றொரு ஃபண்டிற்கு ஒரு நிலையான தொகையை மாற்றுவார்கள்.

SIP முதலீடு ரூபாய் செலவின் சராசரியின் பலனை வழங்குகிறது. விலைகள் குறைவாக இருக்கும்போது அதிக யூனிட்களை வாங்குவதன் மூலமும், விலைகள் அதிகமாக இருக்கும்போது குறைவான யூனிட்களை வாங்குவதன் மூலமும் சந்தை ஏற்ற இறக்கத்தின் தாக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும், SIP நெகிழ்வுத்தன்மை கொண்டது. முதலீட்டாளர்கள் சிறிய தொகையுடன் முதலீட்டை ஆரம்பிக்கலாம். தங்கள் நிதி நிலைமையின் அடிப்படையில் முதலீட்டை மாற்றி அமைக்கவும் முடியும்.

44
STP Investment

STP Investment

STP சந்தை அபாயங்களைக் குறைக்க உதவுகிறது. பங்குச்சந்தையின் செயல்பாட்டின் அடிப்படையில் ஃபண்டுகளை ஒதுக்கீடு செய்வதன் மூலம் வருமானத்தை அதிகப்படுத்துகிறது. STP முதலீடு போதுமான அளவுக்கு நிதி இருப்பு கொண்ட முதலீட்டாளர்களுக்குப் பயனளிக்கிறது. அதிக ரிஸ்க் உள்ள பங்குகளில் படிப்படியாக முதலீடு செய்ய அனுமதிக்கிறது. இதனால் முதலீடு செய்த மொத்தத் தொகைக்கு சந்தை ஏற்ற இறக்கத்தால் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.

SIP மற்றும் STP இரண்ட்டில் எந்தத் திட்டத்தைத் தேர்வு செய்வது என்பது உங்கள் நிதி இலக்குகள், ரிஸ்க்கை சமாளிக்கும் திறன் மற்றும் முதலீட்டுக் காலம் ஆகியவற்றைப் பொறுத்தது. சிறிய, தொடர் முதலீடுகள் மூலம் நீண்ட கால வளர்ச்சியை விரும்புவோருக்கு SIP சிறந்தது. மாறாக, சந்தை ஏற்ற இறக்கத்தைச் சமாளித்து, படிப்படியாக லாபத்தை அதிகரிக்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு STP பொருத்தமாக இருக்கும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
மியூச்சுவல் ஃபண்ட்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: ரூ.30,000 வாங்குபவர்களுக்கு ரூ.90,000 ஆகுமா? 8வது ஊதியக் குழுவின் சம்பளக் கணக்கீடு இதோ!
Recommended image2
DMart Offers: வெளியில் ரூ.300.. டிமார்ட்டில் ரூ.50-க்கே கிடைக்குமா? தீபாவளி பொருட்களுக்கு அதிரடி சலுகை
Recommended image3
ட்ரோன் முதல் விண்வெளி ஜி.பி.எஸ் வரை: 21 வயதில் சிலிக்கான் வேலியையே அதிர வைக்கும் இந்திய ஜென்-இசட் இளைஞர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved