MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • கோடைக்கு முன்பே ஷாக்! 15% உயர்கிறது ஏசி விலை: தப்பிக்க வழி என்ன?

கோடைக்கு முன்பே ஷாக்! 15% உயர்கிறது ஏசி விலை: தப்பிக்க வழி என்ன?

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கும் முன் ஏசிகளின் விலை 10 முதல் 15 சதவீதம் வரை உயர உள்ளது. விலையேற்றத்தில் இருந்து தப்பிக்க, முன்கூட்டியே திட்டமிட்டு வாங்குவது அவசியம்.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Feb 18 2026, 04:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
முன்கூட்டியே பிளான் செய்யவும்!
Image Credit : Pixabay

முன்கூட்டியே பிளான் செய்யவும்!

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கிவிட்டது. இந்த வெப்பத்திலிருந்து தப்பிக்க ஏசி வாங்கலாம் எனத் திட்டமிடுபவர்களுக்கு ஒரு கசப்பான செய்தி காத்திருக்கிறது. ஆம், ஏசிகளின் விலை வரும் வாரங்களில் 10 முதல் 15 சதவீதம் வரை அதிரடியாக உயரப்போகிறது!

25
ஏன் இந்த திடீர் விலை உயர்வு?
Image Credit : Pixabay

ஏன் இந்த திடீர் விலை உயர்வு?

சந்தைப் பொருளாதார வல்லுநர்கள் இந்த விலையேற்றத்திற்கு பின்னால் மூன்று முக்கிய காரணங்களை அடுக்குகிறார்கள்:

காப்பர் விலை உயர்வு

ஏசியின் இதயம் போன்ற 'காயில்கள்' தயாரிக்கப் பயன்படும் செம்பின் (Copper) விலை சர்வதேச சந்தையில் தாறுமாறாக உயர்ந்துள்ளது. இது உற்பத்திச் செலவை ஏகத்திற்கும் ஏற்றிவிட்டது. 

Related Articles

Related image1
Honda electric bike: ஹோண்டாவின் முதல் எலக்ட்ரிக் பைக் Honda WN7..! சிங்கிள் சார்ஜில் 130 கிமீ ரேஞ்ச்
Related image2
Car Price: பட்ஜெட் கார்களின் விலை ஏறப்போகுது.! நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிர்ச்சி தர காத்திருக்கும் மாருதி.!
35
புதிய அரசு விதிகள்
Image Credit : Pixabay

புதிய அரசு விதிகள்

மத்திய அரசின் புதிய எரிசக்தி சேமிப்புக் குறியீடு (BEE Star Rating) மாற்றத்தினால் மட்டுமே விலை 5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உதிரிபாகங்கள் இறக்குமதி

அந்நியச் செலாவணி மாற்றங்களால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிப்கள் மற்றும் பிற எலக்ட்ரானிக் பாகங்களின் விலை அதிகரித்துள்ளது.

45
விலையேற்றத்திலிருந்து தப்பிக்க இதோ சில வழிகள்!
Image Credit : Pixabay

விலையேற்றத்திலிருந்து தப்பிக்க இதோ சில வழிகள்!

விலை உயர்வு உங்கள் பாக்கெட்டைப் பதம் பார்ப்பதற்குள் நீங்கள் ஸ்மார்ட்டாகச் செயல்பட சில வழிகள்!

முன்கூட்டியே வாங்குங்கள் 

மார்ச் மாத இறுதியில் டிமாண்ட் அதிகரிக்கும் போது நிறுவனங்கள் விலையை உயர்த்தும். எனவே, பிப்ரவரி அல்லது மார்ச் முதல் வாரத்திற்குள் வாங்குவது ரூ.3,000 முதல் ரூ.7,000 வரை உங்களுக்கு மிச்சப்படுத்தும்.

பழைய ஸ்டாக்

புதிய ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஏசிகள் வருவதற்கு முன், கடைகளில் உள்ள பழைய ஸ்டாக் ஏசிகளுக்குக் கூடுதல் தள்ளுபடி கிடைக்க வாய்ப்புள்ளது. அவற்றைத் தேடிப் பிடியுங்கள்.

கார்டு ஆஃபர்கள்

கோடைக்கால விற்பனைக்காக வங்கிகள் வழங்கும் 'கேஷ்பேக்' மற்றும் 'நோ காஸ்ட் இஎம்ஐ' வசதிகளைப் பயன்படுத்தி விலையேற்றத்தின் சுமையைக் குறைக்கலாம்.

55
காலதாமதம் செய்வது உங்கள் பட்ஜெட்டை நிச்சயம் பாதிக்கும்!
Image Credit : our own

காலதாமதம் செய்வது உங்கள் பட்ஜெட்டை நிச்சயம் பாதிக்கும்!

ஏசி என்பது இப்போது சொகுசு அல்ல, அது ஒரு அத்தியாவசியத் தேவை. ஆனால், காலதாமதம் செய்வது உங்கள் பட்ஜெட்டை நிச்சயம் பாதிக்கும். இந்த 'ஷாக்' செய்தியிலிருந்து தப்பிக்க, இப்போதே திட்டமிட்டு சரியான ஏசியைத் தேர்ந்தெடுப்பதே புத்திசாலித்தனம்!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஏசி சுத்தம் செய்தல்
ஏசி பராமரிப்பு குறிப்புகள்
காற்று குளிர்விப்பான்
குளிர்சாதனப் பெட்டி சுத்தம் செய்தல்
விலைவாசி

Latest Videos
Recommended Stories
Recommended image1
வெறும் ரூ.3500 ரூபாய் டெபாசிட் செய்தால் ரூ.2.10 லட்சம் வருமானம்.. அரசின் அசத்தலான ஸ்கீம்
Recommended image2
உலகில் 4 இடங்களில் இலவசமாக தங்கம் கிடைக்கும்.. அதில் 2 இந்தியாவில் இருக்கு.. எங்கெல்லாம் தெரியுமா?
Recommended image3
ரூ.2 பங்கு இப்போ ரூ.62 லட்சம்.. 6,000% லாபம்.. முதலீட்டாளர்களை கோடீஸ்வரர் ஆக்கிய பங்கு எது?
Related Stories
Recommended image1
Honda electric bike: ஹோண்டாவின் முதல் எலக்ட்ரிக் பைக் Honda WN7..! சிங்கிள் சார்ஜில் 130 கிமீ ரேஞ்ச்
Recommended image2
Car Price: பட்ஜெட் கார்களின் விலை ஏறப்போகுது.! நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிர்ச்சி தர காத்திருக்கும் மாருதி.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved