சீனியர் சிட்டிசனுக்கு மாதம் ரூ.20,000 வருமானம்! இந்த ஒரு முதலீடு மட்டும் போதும்!!
பணி ஓய்வுக்குப் பின் நிலையான வருமானம் கிடைப்பதை உறுதிசெய்ய மத்திய அரசு மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை வழங்குகிறது. சீனியர் சிட்டிசன்களுக்கு இது முக்கியமான சேமிப்புத் திட்டமாக உள்ளது.
Savings scheme for senior citizens
பணி ஓய்வுக்குப் பின் நிலையான வருமானம் கிடைப்பதை உறுதிசெய்ய உதவும் வகையில் அனைத்து வங்கிகளும் மூத்த குடிமக்களுக்கு சிறப்புத் திட்டங்களை வழங்குகின்றன. அந்த வகையில் மத்திய அரசு வழங்கும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) சீனியர் சிட்டிசன்களுக்கு முக்கியமான சேமிப்புத் திட்டமாகும்.
Post office scheme for Senior Citizens
அதிக வட்டி விகிதம் வழங்கப்படும் இந்தத் திட்டம் மூலம் மாதம் ரூ.20,000 வருமானம் ஈட்ட முடியும். அதற்கு எவ்வளவு தொகையை முதலீடு செய்ய வேண்டும். முதலீட்டின் பலனை எப்போது பெறலாம் என்று விரிவாகப் பார்க்கலாம்.
Senior Citizens Savings Scheme
குறைந்தபட்சம் 60 வயதை எட்டிய இந்தியக் குடிமக்கள் அனைவரும் இந்தத் திட்டத்தில் கணக்கு தொடங்கலாம். 55 முதல் 60 வயதுக்குள் விருப்ப ஓய்வு பெற்றவர்களும் மூத்தக் குடிமக்களுக்கான இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஓய்வுபெற்ற பாதுகாப்புப் பணியாளர்கள் 50 வயதிலிருந்தே முதலீடு செய்யலாம்.
Senior Citizens Pension scheme
இத்திட்டத்தின் கீழ் கூட்டுக் கணக்கு தொடங்கவும் வாய்ப்பு உள்ளது. ஆனால், டெபாசிட் செய்யும் மொத்தத் தொகையும் முதன்மைக் கணக்குதாரருக்குச் சொந்தமானது. வங்கி அல்லது போஸ்ட் ஆபீசில் இந்ததக் கணக்கைத் தொடங்கலாம். ரூ. 1,000 முதல் ரூ. 30 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
Senior Citizens Scheme
இத்திட்டத்தில் ஒரு முறை மட்டுமே முதலீடு செய்ய முடியும். அதற்குப் பிறகு டெபாசிட் செய்ய முடியாது. இத்திட்டத்தில் டெபாசிட் செய்யும் பணத்துக்கு வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரி விலக்கு பெறலாம். இதன் மூலம் ரூ.1.5 லட்சம் வரை சேமிக்கலாம்.
Senior Citizens Income
இத்திட்டத்தில் 8.2% வட்டி விகிதம் கிடைக்கும். காலாண்டுக்கு ஒருமுறை வட்டி வழங்கப்படும். கணக்கு தொடங்கியதில் இருந்து ஐந்து ஆண்டுகள் முதிர்வு காலம் இருக்கும். விரும்பினால் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும் முடியும். கணக்கை முன்கூட்டியே முடித்துக்கொள்ளவும் அனுமதி உண்டு.
Senior Citizens Savings
இத்திட்டத்தில் அதிகபட்ச டெபாசிட் தொகையான ரூ. 30 லட்சம் செலுத்தினால், ஆண்டுக்கு ரூ.2.46 லட்சம் வட்டி கிடைக்கும். இதன்படி மாதம் ரூ. 20,000 வருமாம் கிடைக்கும்.