MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ஆண்டுக்கு ரூ.2.4 லட்சம் வட்டி கிடைக்கும்.. இந்த சேமிப்பு திட்டத்தில் ஒருமுறை முதலீடு செய்தால் போதும்..

ஆண்டுக்கு ரூ.2.4 லட்சம் வட்டி கிடைக்கும்.. இந்த சேமிப்பு திட்டத்தில் ஒருமுறை முதலீடு செய்தால் போதும்..

இந்த போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் மூத்த குடிமக்கள் ஒரு முறை முதலீடு செய்தால் அவருக்கு ஆண்டுக்கு ரூ.2,46,000 வருமானம் கிடைக்கும்..

2 Min read
Author : Ramya s
Published : Aug 01 2024, 01:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
SCSS Savings Scheme

SCSS Savings Scheme

தங்கள் வழக்கமான செலவுகளை நிர்வகிக்கவும், மருத்துவத் தேவைகளை பூர்த்தி செய்யவும் மூத்த குடிமக்களுக்கு வழக்கமான வருமானம் தேவை. தங்கள் ஓய்வுகாலத்தில் யாரையும் நம்பி இருக்காமல் தங்கள் செலவுகளை தாங்களே பார்த்துக் கொள்வதற்கும் இந்த வருமானம் உதவுகிறது.

29
SCSS Savings Scheme

SCSS Savings Scheme

ஆனால் இந்த வருமானத்தை பெற ஒன்று ஓய்வூதியம் பெற வேண்டும் அல்லது ஓய்வு காலத்தில் வருமானம் பெறும் வகையில் ஏதேனும் ஒரு சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். இந்த சேமிப்பு திட்டங்களில் ஒரு முறை முதலீடு செய்து வட்டி வடிவில் வருமானத்தைப் பெறலாம். அத்தகைய வருமானம் ஒருவரின் முதலீட்டைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுவதால், மூத்த குடிமக்கள் தங்கள் வருமானத்திற்கு ஏற்ப தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளலாம். 

39
SCSS Savings Scheme

SCSS Savings Scheme

பெரும்பாலும், இத்தகைய முதலீட்டுத் திட்டங்கள் மூலம் மூத்த குடிமக்கள் வட்டி வடிவில் உத்தரவாதமான வருமானத்தைப் பெறுவார்கள். அத்தகைய ஒரு சேமிப்பு திட்டம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் தான் அந்த திட்டம்.

49
SCSS Savings Scheme

SCSS Savings Scheme

இந்த போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் ஒருவர் உத்தரவாத வருமானம் பெற முடியும். இதில் மூத்த குடிமக்கள் ஒரு முறை முதலீடு செய்து ஐந்து ஆண்டுகளுக்கு காலாண்டு ஓய்வூதியத்தைப் பெறலாம். இந்த திட்டத்தில் ஒருவர் முதலீடு செய்வதன் மூலம் ஆண்டுக்கு ரூ.2,46,000 வருமானம் பெறலாம்.

59
SCSS Savings Scheme

SCSS Savings Scheme

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட கணக்கு (SCSS) அடிப்படை அம்சங்கள்

இந்தத் திட்டம் 8.20 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) திட்டத்திற்கு பிறகு அதிக வட்டி வழங்கும் போஸ்ட் ஆபிஸ் திட்டங்களில் ஒன்றாகும். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், 55 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 60 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிவில் பணியாளர்கள், 50 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 60 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற பாதுகாப்புப் பணியாளர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

69
SCSS Savings Scheme

SCSS Savings Scheme

இந்த திட்டத்தில் குறைந்தபட்ச ஒரு முறை முதலீடு ரூ. 1,000 ஆகும். அதிகபட்சம் ரூ. 30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இத்திட்டத்தில் ரூ. 1.50 லட்சம் வரை வரி விலக்கு பெற முடியும்..

79
SCSS Savings Scheme

SCSS Savings Scheme

இந்தத் திட்டத்தில் ஒருவர் ஒருமுறை முதலீடு செய்ய வேண்டும். அவருக்கு காலாண்டு அடிப்படையில் வட்டி செலுத்தப்படும். ஒருவர் SCSS கணக்கை முன்கூட்டியே மூடலாம் அல்லது முதிர்வு தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம்.

 

89
SCSS Savings Scheme

SCSS Savings Scheme

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மூலம் ஆண்டுக்கு ரூ.2,46,000 பெற வேண்டுமெனில் அவர் இந்த திட்டத்தில் ரூ.30 லட்சத்தை ஒருமுறை முதலீடு செய்ய வேண்டும். 8.2 சதவீத வட்டி விகிதத்தில், ஒரு காலாண்டில் ரூ.61,500 காலாண்டு வட்டி தொகை கிடைக்கும்.

99
SCSS Savings Scheme

SCSS Savings Scheme

இதன் மூலம் ஒரு ஆண்டில், அவர் ரூ.2,46,000 பெறுவார். அந்த நபர் ஐந்தாண்டுகள் முழுவதுமாக இந்த திட்டத்தை தொடர்ந்தால், அவர்களின் ஆரம்ப முதலீட்டான ரூ.30 லட்சத்தில் ரூ.12 லட்சம் வருமானம் கிடைக்கும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
பழைய தங்கத்தை விற்றால் லாபமா? மாற்றினால் லாபமா? உங்கள் பணத்தை மிச்சப்படுத்தும் ரகசியம் இதோ!
Recommended image2
வாங்கும் போது இனிக்கும், கட்டும் போது கசக்கும்.. தனிநபர் கடன் vs கிரெடிட் கார்டு EMI.. எது பெஸ்ட்..?
Recommended image3
கர்ப்பிணிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பு.. ரூ.5000 அள்ளி கொடுக்கும் அரசு..! விண்ணப்பிப்பது எப்படி..?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved