அவசரமா காசு வேணுமா? SBI ல உடனே ரூ. 35 லட்சம் கடன் வாங்கலாம் - நோ பேப்பர் ஒர்க்!
பாரத ஸ்டேட் வங்கி (SBI) 'ரியல் டைம் எக்ஸ்பிரஸ் கிரெடிட்' (RTXC) என்ற புதிய டிஜிட்டல் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், YONO ஆப் மூலம் காகிதமில்லா முறையில் ரூ. 35 லட்சம் வரை உடனடி தனிநபர் கடன் பெறலாம்.

ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூ.2 லட்சம்?
பாரத ஸ்டேட் வங்கி (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு 'ரியல் டைம் எக்ஸ்பிரஸ் கிரெடிட்' (RTXC) எனும் அதிரடியான புதிய கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் எஸ்பிஐ ரூ. 2 லட்சம் தருவதாக ஒரு வீடியோ பரவி வரும் நிலையில், உண்மை நிலவரம் அதைவிட ஆச்சரியமாக உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள வாடிக்கையாளர்கள் ரூ. 35 லட்சம் வரை தனிநபர் கடன் பெற முடியும்.
திட்டத்தின் சிறப்பம்சங்கள்
முழுக்க முழுக்க டிஜிட்டல்: வங்கிக்கு நேரில் செல்லவோ, எந்த ஒரு காகித ஆவணங்களையும் (Paperwork) சமர்ப்பிக்கவோ தேவையில்லை.
உடனடிப் பணம்: அவசர பணத்தேவை இருப்பவர்கள் 'YONO' ஆப் மூலமாகவே சில நிமிடங்களில் விண்ணப்பிக்கலாம்.
இ-சைன் (e-sign) வசதி: உங்கள் ஆதார் கார்டு மற்றும் ஓடிபி (OTP) மூலமாகவே விண்ணப்பத்தைச் சரிபார்த்துவிடலாம்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
எல்லா எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கும் இந்தக் கடன் கிடைக்காது. பின்வரும் தகுதிகள் இருப்பவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
1. சம்பளக் கணக்கு (Salary Account): எஸ்பிஐ வங்கியில் சம்பளக் கணக்கு வைத்திருப்பவராக இருக்க வேண்டும்.
2. வேலை: மத்திய/மாநில அரசு ஊழியர்கள், ராணுவத்தினர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களுக்கு முன்னுரிமை.
3. மாத வருமானம்: குறைந்தபட்சம் மாதம் ரூ. 15,000 சம்பளம் வாங்குபவராக இருக்க வேண்டும்.
4. சிபில் ஸ்கோர் (CIBIL): உங்களது கிரெடிட் ஸ்கோர் 650 அல்லது 700-க்கு மேல் இருக்க வேண்டும்.
5. EMI விகிதம்: உங்கள் சம்பளத்தில் கடனுக்காகக் கட்டும் தொகை (EMI/NMI ratio) 50-60 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
வட்டி விகிதம் மற்றும் செயல்முறை
இந்தக் கடனுக்கான வட்டி விகிதம் 2 ஆண்டுகால MCLR விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கடன் காலம் முழுவதும் இந்த வட்டி மாறாமல் (Fixed Rate) இருக்கும். சிபில் ஸ்கோர் சரிபார்ப்பு முதல் லோன் அப்ரூவல் வரை அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே மிக வேகமாக நடக்கும் என்பதால், பணம் உங்கள் கணக்கிற்கு உடனே வந்து சேரும்.
வாடிக்கையாளர்கள் சமூக வலைத்தளங்களில் வரும் அரைகுறைத் தகவல்களை நம்பாமல், வங்கியின் அதிகாரப்பூர்வ தளத்தை அணுகி முழு விவரங்களையும் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

