MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • உங்களை லட்சாதிபதியாக மாற்றும் எஸ்.பி.ஐ. திட்டம்! முதலீடு செய்வது எப்படி?

உங்களை லட்சாதிபதியாக மாற்றும் எஸ்.பி.ஐ. திட்டம்! முதலீடு செய்வது எப்படி?

SBI Har Ghar Lakhpati RD scheme: ஸ்டேட் வங்கியின் ஹர் கர் லக்பதி திட்டம் மூலம், குறைந்த முதலீட்டில் லட்சாதிபதி ஆகலாம். மாத முதலீட்டை நீங்களே தீர்மானித்து, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அதிக வருமானம் பெறலாம்.

2 Min read
Author : SG Balan
Published : Mar 20 2025, 06:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
SBI Har Ghar Lakhpati Recurring Deposit

SBI Har Ghar Lakhpati Recurring Deposit

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஜனவரி 2025 இல் ஹர் கர் லக்பதி என்ற வித்தியாசமான ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் மூலம் மக்கள் கோடீஸ்வரர்களாக முடியும்.

26
Har Ghar Lakhpati Scheme

Har Ghar Lakhpati Scheme

இது மற்ற ரெக்கரிங் டெபாசிட் திட்டங்களிலிருந்து சற்று வித்தியாசமானது. மற்ற ஆர்.டி. திட்டங்களில் மாதத்திற்குக் குறைந்தபட்சம் ரூ.500, ரூ.1000 என இப்படியே முதலீடு செய்துகொண்டே இருந்தால், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நமக்கு வருமானம் கிடைக்கும். ஆனால் இந்தத் திட்டத்தில் மாதம் எவ்வளவு டெபாசிட் செய்ய வேண்டும் என்பதை நாமே முடிவு செய்யலாம்.

36
SBI RD Scheme

SBI RD Scheme

இந்தத் திட்டத்தின் நோக்கம் ரூ. 1 லட்சம் மற்றும் அதற்கு மேல் வருமானத்தை வழங்குவதாகும். எனவே நாம் கால அளவை அடிப்படையாகக் கொண்டு முதலீடு செய்ய வேண்டும். இந்த RD திட்டத்தில் தனியாகவோ கூட்டாகவோ சேரலாம். பத்து வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலம் ஒரு கணக்கைத் திறக்கலாம்.

46
Recurring Deposit

Recurring Deposit

குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்ய வேண்டும். அதிகபட்சமாக பத்து ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம். முதிர்வு தேதிக்கு முன்பு பணத்தை எடுத்தால், வட்டி விகிதங்களில் அபராதம் விதிக்கப்படும். உதாரணமாக ரூ. ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக எடுத்துக்கொண்டால் 0.50 சதவீதம், ரூ.5 லட்சத்திற்கு மேல் எடுத்தால், ஒரு சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.

56
SBI Investment

SBI Investment

ஒரு லட்சம் ரூபாய் பெற, மூன்று ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.2,500 செலுத்த வேண்டும். இதற்கு 6.75 சதவீத வட்டி கிடைக்கும். மூத்த குடிமக்களுக்கு ரூ.2480 மட்டும் செலுத்தினால் போதும். அவர்களுக்கு 7.25 சதவீதம் வட்டி கிடைக்கும். மூன்று ஆண்டுகள் முடிவில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் முதிர்வுத்தொகை ஈட்டலாம்.

66
SBI RD interest rate

SBI RD interest rate

நான்கு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1810 செலுத்தலாம். மூத்த குடிமக்கள் ரூ.1791 செலுத்தினால் போதும். நான்கு ஆண்டுகள் முதலீட்டுக்குப் பின் லட்சம் ரூபாய்க்கு மேல் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் மூலம் சிறிய தொகையைச் சேமித்து லட்சாதிபதி ஆகலாம். நிதி இலக்குகளை அடைய இது ஒரு நல்ல வழியாகும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
40% உயர்ந்த செம்பு விலை… இந்த 3 பங்குகள் லாபம் தருமா?
Recommended image2
திருமணம், சுற்றுலாவுக்கு முழு ரயிலை புக் செய்யலாமா.? டெபாசிட் தொகை இவ்வளவு கட்டினால் போதும்
Recommended image3
தங்கம் ரூ.1 லட்சத்திற்கு கீழ் சரியப்போகுது.. ரஷ்யாவின் டாலர் முடிவால்… குஷியில் பொதுமக்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved