மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்! அதிக வட்டியை அள்ளிக்கொடுக்கும் எஸ்பிஐ FD திட்டம்!
எஸ்பிஐ வங்கி மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டியை கொடுக்கும் பிக்சட் டெபாசிட் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

SBI FD Scheme Offers Higher Interest Rates: இந்தியாவில் மக்கள் தங்கள் பணத்தை சேமிக்கும் வழிகளில் சிறந்த ஒன்று பிக்சட் டெபாசிட் திட்டங்கள். நாட்டில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் அனைத்தும் பிக்சட் டெபாசிட் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. நாம் குறிப்பிட்ட கால வரையறைக்குள் வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணத்துக்கு ஏற்ப வட்டி கிடைக்கும். இந்தியாவின் மிகப்பெரிய அரசு வங்கியான SBI, பல்வேறு கால நிலையான வைப்புத்தொகைக்கு வட்டி விகிதத்தை 0.25% குறைத்துள்ளது.
SBI FD Scheme Offers
எஸ்பிஐ பிக்சட் டெபாசிட் பிளான்
ரிசர்வ் வங்கி இந்த மாதம் ரெப்போ விகிதத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, அனைத்து வங்கிகளும் கடன் மற்றும் வைப்புத்தொகை வட்டி விகிதங்களைக் குறைக்கத் தொடங்கின. இதன் ஒரு பகுதியாக, எஸ்பிஐ தனது சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டியையும் குறைத்தது. இருப்பினும், இந்தக் குறைப்புக்குப் பிறகும், SBI-யின் பிக்சட் டெபாசிட் (FD) திட்டங்களில் சிறந்த வட்டி கிடைக்கிறது. இப்போது, எஸ்பிஐயின் ஒரு திட்டத்தில் வெறும் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால் ரூ.24,604 நிலையான வட்டி கிடைக்கும். SBI FD-களுக்கு 3.50% முதல் 7.55% வரை வட்டி வழங்குகிறது. சாதாரண மக்களுக்கான FD வட்டி விகிதத்தை 3.50%-7.25%ல் இருந்து 3.50%-7.05% ஆக SBI குறைத்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்; சம்பள உயர்வு எவ்வளவு தெரியுமா?
SBI, Senior Citizens Scheme
மூத்த குடிமக்களுக்கு எவ்வளவு வட்டி கிடைக்கும்?
மூத்த குடிமக்களுக்கு 4.00% முதல் 7.55% வரை வட்டி வழங்குகிறது, இது முன்பு 7.75% ஆக இருந்தது. 2 முதல் 3 ஆண்டுகள் வரையிலான FD திட்டங்களுக்கு சாதாரண குடிமக்களுக்கு 6.90% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.40% வட்டி வழங்குகிறது. வட்டி விகிதக் குறைப்புக்கு முன்பு, இந்தத் திட்டத்தில் சாதாரண குடிமக்களுக்கு 7.00% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.50% வட்டி கிடைத்தது. அதாவது, இந்தத் திட்டத்தில் வழங்கப்படும் வட்டியில் SBI 0.10% குறைத்துள்ளது.
SBI Fixed Deposit
ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால்...
SBI-யில் 3 ஆண்டு கால FD-யில் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால், முதிர்வு நேரத்தில் ரூ.24,604 நிலையான வட்டி கிடைக்கும். நீங்கள் ஒரு சாதாரண குடிமகனாக இருந்தால் (60 வயதுக்குக் குறைவாக), ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால் மொத்தம் ரூ.1,22,781 கிடைக்கும், இதில் ரூ.22,781 நிலையான வட்டி அடங்கும். நீங்கள் ஒரு மூத்த குடிமகனாக இருந்தால் (60 வயதுக்கு மேல்), இந்தத் திட்டத்தில் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால் மொத்தம் ரூ.1,24,604 கிடைக்கும், இதில் ரூ.24,604 நிலையான வட்டி அடங்கும்.
இனி வங்கி லாக்கரை பயன்படுத்துவது ரொம்ப ஈசி! புதிய விதிமுறையை வெளியிட்ட RBI