இந்த 100 ரூபாய் நோட்டு வச்சிருந்தா போதும்! நீங்களும் ஈசியா லட்சாபதி ஆகலாம்!
உங்களிடம் இருக்கும் ஒரு 100 ரூபாய் நோட்டு உங்கள் வாழ்க்கையையே மாற்றலாம். பழைய மற்றும் அரிதான 100 ரூபாய் நோட்டை விற்று, பல லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்.
உங்களிடம் இருக்கும் ஒரு 100 ரூபாய் நோட்டு உங்கள் வாழ்க்கையையே மாற்றலாம். தற்போது சர்வதேச சந்தையில் பழைய மற்றும் அரிதான 100 ரூபாய் நோட்டுகளின் தேவை அதிகரித்துள்ளதால், அவற்றை பல லட்சம் ரூபாய் விலை கொடுத்து வாங்க நிறைய பேர் காத்திருக்கிறார்கள். குறிப்பிட்ட அம்சங்கள் உள்ள ரூ.100 நோட்டு உங்களிடம் இருந்தால், நீங்கள் மிகப்பெரிய தொகையை சம்பாதிக்கலாம்.
சில ரூ.100 நோட்டுகள் "786" என்ற சீரியல் நம்பர் கொண்டவை. இந்த எண் கொண்ட ரூபாய் நோட்டுகள் மத மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தவை. முஸ்லீம் சமூகத்தில், இந்த எண் மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கான அடையாளமாகக் கருதப்படுகிறது. இதனால், நாணய சேகரிப்பாளர்கள் கணிசமான தொகையை கொடுத்து வாங்கத் தயாராக உள்ளனர்.
உங்களின் 100 ரூபாய் நோட்டை விற்பதன் மூலம் ஒரு பெரிய தொகையை சம்பாதிக்க விரும்பினால், கண்டிப்பாக முக்கியமான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். நோட்டில் வரிசை எண் 786 என முன் பக்கத்தில் இருக்க வேண்டும். தேசப்பிதா மகாத்மா காந்தியின் தெளிவான படமும் இருக்க வேண்டும். நோட்டு சுத்தமாகவும் நல்ல நிலையிலும் இருக்க வேண்டும்.
உங்களிடம் இந்த சிறப்புகள் உள்ள 100 ரூபாய் நோட்டு இருந்தால் அதை எப்படி விற்பது? முதலில், OLX இணையதளத்தில் விற்பனையாளராக பதிவு செய்துகொள்ளுங்கள். உங்களிடம் உள்ள 100 ரூபாய் நோட்டின் தெளிவான படத்தைப் பதிவேற்றவும். விளம்பரம் வெளியிடப்பட்டதும், ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் உங்களைத் தொடர்புகொள்வார்கள்.
100 ரூபாய் நோட்டிற்கு என்ன விலை கிடைக்கும் என்று OLX அல்லது வேறு எந்த அமைப்பும் அதிகாரபூர்வமாக எதுவும் கூறவில்லை. இந்திய ரிசர்வ் வங்கியும் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை வாங்குவது மற்றும் விற்பதற்கு சட்டபூர்வமானதாக அங்கீகரிக்கவில்லை என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.