- Home
- Business
- Astrology: இதை மட்டும் செய்யுங்க கிரக தோஷங்கள் காணாமல் போகும்! வாழ்வில் வளம் சேர்க்கும் ஜோதிட ரகசியங்கள்!
Astrology: இதை மட்டும் செய்யுங்க கிரக தோஷங்கள் காணாமல் போகும்! வாழ்வில் வளம் சேர்க்கும் ஜோதிட ரகசியங்கள்!
ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்களின் இயக்கத்தால் ஏற்படும் தோஷங்கள் வாழ்வில் தடைகளை உருவாக்கும். இக்கட்டுரை சூரியன், சந்திரன், செவ்வாய், ராகு-கேது போன்ற கிரக தோஷங்களை நீக்க மந்திரங்கள், தானங்கள், தெய்வ வழிபாடு போன்ற எளிய பரிகாரங்களை விவரிக்கிறது.

வழிநடத்தும் கிரகங்களின் இயக்கம்
நமது வாழ்க்கையில் நடக்கும் பல ஏற்றத் தாழ்வுகளுக்கும் காரணம் கிரகங்களின் இயக்கம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் கிரக தோஷங்கள் இருந்தால், அவர் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும் சில தடைகள், தாமதங்கள், மன அழுத்தங்கள், உடல்நலக் குறைகள் போன்றவை தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். ஆனால் இதனை எளிதில் சரிசெய்ய சில ஜோதிட ரகசியங்கள் உள்ளன.
சூரியன் கிரக தோஷம்
ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட நாள், நிறம் மற்றும் மந்திரம் உண்டு. அந்த நாளில் அந்த கிரகத்தின் ப்ரார்த்தனையை செய்வது மிகுந்த பலனளிக்கும். சூரியனின் கிரக தோஷம் இருந்தால், ஞாயிற்றுக்கிழமை அன்று காலை வேளையில் சூரியனை நோக்கி தண்ணீர் அர்ப்பணித்து “ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரௌம் சஹ சூர்யாய நமஹ” என்று மந்திரம் ஜபிக்கலாம். இது அந்த கிரகத்தின் தீய விளைவுகளை குறைத்து, உழைப்புக்கு பலன் கிடைக்கச் செய்யும்.
சந்திர தோஷம் விலக
சந்திர தோஷம் இருந்தால், திங்கட்கிழமை அன்று பால் அல்லது வெள்ளை பூக்கள் அர்ப்பணித்து “ஓம் சோம் சோமாய நமஹ” என்று ஜபிக்கலாம்.
செவ்வாய் தோஷம் விலகும்
செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் மங்கள தோஷத்துக்கு செவ்வாய்க்கிழமை அன்று ஹனுமான் சன்னிதியில் தீபம் ஏற்றி “ஓம் அங்காரகாய நமஹ” என்று சொல்லலாம்.
ராகு-கேது தோஷங்கள்
ராகு-கேது தோஷங்கள் இருப்பவர்கள் சனிக்கிழமையன்று ராகு கேது பீடத்தில் நாக பிரதட்சிணை செய்யலாம். நவகிரகங்களை வணங்கும் பழக்கத்தை உருவாக்கினால், வாழ்க்கையில் சமநிலை, மன அமைதி, பொருள் வளம் எல்லாம் தானாக வந்து சேரும்.
தோஷ கிரகத்துக்குரிய பொருளைத் தானம் செய்யல்.
சூரியன் – பசு, கோதுமை
சந்திரன் – பச்சரிசி
செவ்வாய் – துவரம் பருப்பு
புதன் – தங்கம் தட்டைப் பயறு
குரு – மஞ்சள் பட்டு, கொண்டைக் கடலை
சுக்கிரன் – வெள்ளி
சனி – கருப்பு மாடு, எள்ளு
ராகு – இரும்பு, உளுந்து
கேது – ஆட்டுக்கிடா, கொள்ளு.
எந்த தோஷத்திற்கு எந்த தெய்வம்
சூரிய தோஷம் இருப்பின் சிவனாரை வழிபட வேண்டும். சந்திர தோஷம் - துர்கா, செவ்வாய் தோஷம் - பத்ரகாளி மற்றும் முருகன், புதன் - கிருஷ்ணர், குரு - விஷ்ணு, சுக்கிரன்- மகாலட்சுமி, சனி - ஐயப்பன் மற்றும் ஆஞ்சநேயர், ராகு - ஆஞ்சநேயர் மற்றும் நாகதேவதைகள், கேது - கணபதி மற்றும் சாமுண்டியை வணங்கி நலம் பெறலாம்.
பூக்களால் செய்யும் வழிபாடு
ஓவ்வொரு கிரகத்துக்கும் ஏற்ற பூக்கள் இருக்கின்றன. சூரியனை பூஜிக்க உகந்த மலர் செந்தாமரை மற்றும் சிவந்த வண்ணமுள்ள மலர்கள். சந்திரனுக்கு ஏற்றது வெள்ளை அல்லி. செவ்வாய்க்கு செண்பக மலர். புதனுக்கு வெண்காந்தள் மலர். குருவுக்கு வெண்முல்லை. சுக்கிரனுக்கு வெண்தாமரை. சனிக்கு கருங்குவளை மற்றும் நீல வண்ணமுள்ள பூஜைக்கு ஏற்ற மலர்கள். ராகுவுக்கு மந்தாரை மலர். கேதுவுக்கு செவ்வல்லி
தோஷங்கள் நீக்கும் ஆடைகள்
தோஷ காலத்தில் அந்த நிறத்தில் ஆடைகள் அணிவது நல்லது. அவ்வகையில், சூரியனுக்குச் சிவப்பு, சந்திரனுக்கு வெள்ளை, செவ்வாய்க்குச் சிவப்பு, புதனுக்குப் பச்சை, குருவுக்கு பொன்னிறம், சுக்கிரனுக்கு வெண்பட்டு, சனிக்கு கறுப்பு, ராகுவுக்கு சித்திரங்களுடன் கூடிய கறுப்பு, கேதுவுக்கு புள்ளிகளுடன் கூடிய சிவப்பு வண்ணத்தில் ஆடைகள் அணியலாம்.