MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • இனி பிறந்த குழந்தைகளுக்கும் மாதாந்திர பென்ஷன்: மத்திய அரசின் ஓய்வூதிய திட்டங்களில் அதிரடி மாற்றம்

இனி பிறந்த குழந்தைகளுக்கும் மாதாந்திர பென்ஷன்: மத்திய அரசின் ஓய்வூதிய திட்டங்களில் அதிரடி மாற்றம்

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் தேசிய சமூக உதவித் திட்டத்தை (NSAP) 2026-27 முதல் 2030-31 வரை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதுடன், இதற்காக ரூ.53,428 கோடி நிதியும் ஒதுக்கியுள்ளது.

2 Min read
Author : Meenakshisundaram
Published : Oct 16 2026, 12:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தேசிய சமூக உதவித் திட்டம் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
Image Credit : X

தேசிய சமூக உதவித் திட்டம் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள ஏழை எளிய மக்களுக்குச் சமூகப் பாதுகாப்பு வழங்கும் நோக்கில், கடந்த 1995-ம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்ட தேசிய சமூக உதவித் திட்டம் (NSAP), அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இத்திட்டத்தை 2026-27 முதல் 2030-31 வரை தொடர்ந்து செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டு, இதற்காக மொத்தம் ரூ.53,428 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
திட்டங்களின் புதிய பெயர்கள்
Image Credit : x

திட்டங்களின் புதிய பெயர்கள்

தேசிய சமூக உதவித் திட்டம் மற்றும் அதன் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பிற துணைத் திட்டங்களின் பெயர்களை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது. தேசிய சமூக உதவித் திட்டம் (NSAP) இனி 'பிரதான் மந்திரி சாமாஜிக் சகாயதா யோஜனா' என அழைக்கப்படும். முதியோர் ஓய்வூதியத் திட்டம் 'பிரதான் மந்திரி விருத்தாவஸ்தா பென்ஷன் யோஜனா' எனப் பெயர் மாற்றம் பெற்றுள்ளது. விதவை ஓய்வூதியத் திட்டம் 'பிரதான் மந்திரி விதவா பென்ஷன் யோஜனா' என மாற்றப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி ஓய்வூதியத் திட்டம் 'பிரதான் மந்திரி திவ்யாங்ஜன் பென்ஷன் யோஜனா' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தேசிய குடும்ப நலத் திட்டம் 'பிரதான் மந்திரி பரிவார் லாப் யோஜனா' என மறுபெயரிடப்பட்டுள்ளது.

34
மாற்றுத் திறனாளிகளுக்கான தளர்வுகள், உதவித்தொகை உயர்வு
Image Credit : x

மாற்றுத் திறனாளிகளுக்கான தளர்வுகள், உதவித்தொகை உயர்வு

மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தில் சில முக்கியத் தளர்வுகளும் நிதி உயர்வும் அறிவிக்கப்பட்டுள்ளன. உதவித்தொகை பெறுவதற்கு முன்பு இருந்த 80% இயலாமை வரம்பு தளர்த்தப்பட்டு, இனி 40% இயலாமை இருந்தாலே இத்திட்டம் பொருந்தும். இதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பிறந்தது முதல் (0 வயது) அனைத்து மாற்றுத்திறனாளி குழந்தைகளும் உதவித்தொகை பெறத் தகுதி பெறுகின்றனர்.

மாதாந்திர உதவித்தொகை விவரம்:

0 முதல் 79 வயது வரை மாதம் ரூ. 375

80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாதம் ரூ. 625

இச்சலுகைகளுக்கான விரிவான அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்கள் அடுத்த 3 மாதங்களுக்குள் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

44
பழைய நடைமுறையுடன் தொடரும் திட்டங்கள்
Image Credit : x

பழைய நடைமுறையுடன் தொடரும் திட்டங்கள்

முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம் மற்றும் குடும்ப நலத் திட்டங்கள் எவ்வித மாற்றமும் இன்றி பழைய நடைமுறையிலேயே தொடர்ந்து செயல்படுத்தப்படும். இத்திட்டங்களின் விரிவாக்கம் மூலம் நாடு முழுவதும் சுமார் 3.20 கோடி ஏழை மக்கள் பயனடைவர். மேலும், இத்திட்டங்களுக்கான நிதியுதவி முழுவதும் இடைத்தரகர்கள் இன்றி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கே நேரடியாக (DBT - Direct Benefit Transfer) செலுத்தப்படும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
வணிகம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
தமிழ்நாட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடா? அடுத்த 60 நாட்களில் என்ன மாற்றம் வரும்? இனி விலை குறையுமா?
Recommended image2
DMart Shopping Tips: மாதம் ரூ.5,000 மளிகைச் செலவா? டிமார்ட்டில் இப்படி வாங்கினால் ரூ.2,500 மிச்சமாகுமா? யாரும் சொல்லாத ஷாப்பிங் டிப்ஸ்!
Recommended image3
TN Govt Grocery Sale: ரூ.60-க்கு பொன்னி அரிசி.. ரூ.130-க்கு துவரம் பருப்பு! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு.. எங்கே வாங்கலாம்?
Related Stories
Recommended image1
Cheap Flight Tickets: ரயிலை விட குறைந்த விலையில் விமான‌ டிக்கெட் புக் பண்ண சூப்பர் ட்ரிக்ஸ்!
Recommended image2
19 ஆர்டர், 51 கி.மீ அலைச்சல்... பிளிங்கிட் டெலிவரிபாயான சட்டக் கல்லூரி மாணவன்; முதல் நாளில் சம்பாதித்தது இவ்வளவுதானா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved