- Home
- Business
- Reliance Ice Cream: ரூ.10-க்கு ஐஸ்கிரீம் விற்பனை! அம்பானியின் புதிய ஐஸ்கிரீம் பிராண்டு இதுதான்
Reliance Ice Cream: ரூ.10-க்கு ஐஸ்கிரீம் விற்பனை! அம்பானியின் புதிய ஐஸ்கிரீம் பிராண்டு இதுதான்
Reliance Ice Cream: முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்கனவே பல்வேறு நுகர்வோர் பொருட்கள் பிரிவுகளில் தனது தடத்தை விரிவுபடுத்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது ஐஸ்கிரீம் சந்தையிலும் புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது.

ரூ.10 ஐஸ்கிரீம்
பாம்பே கிரீமரி ஐஸ்கிரீம்களின் விலை, சாதாரண மக்களும் வாங்கும் வகையில் வெறும் 10 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. கோன், கப், டப், பார், ஸ்டிக் எனப் பல வடிவங்களில் இவை கிடைக்கும். குறைந்த விலையில் பிரீமியம் தரத்தை வழங்குவதே ரிலையன்ஸின் நோக்கம்.
பாம்பே கிரீமரி ஐஸ்கிரீம்
'பாம்பே கிரீமரி' ஐஸ்கிரீம்கள், உண்மையான டைரி கிரீம் கொண்டு தயாரிக்கப்படுவதாக RCPL நிறுவனம் தெரிவித்துள்ளது. "தரத்தில் எந்தக் குறுக்குவழியும் இல்லை" என ஆர்சிபிஎல் இயக்குநர் டி. கிருஷ்ணகுமார் கூறியுள்ளார். ஒவ்வொரு இந்தியக் குடும்பமும் வாங்கும் விலையில், தரமான ஐஸ்கிரீம் கொடுப்பதே இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய ஐஸ்கிரீம் சந்தை
பாம்பே கிரீமரி ஐஸ்கிரீம்கள் முதலில் மேற்கு இந்தியச் சந்தைகளில் அறிமுகமாகும். அதன் பிறகு, படிப்படியாக நாடு முழுவதும் விற்பனையை விரிவுபடுத்த ஆர்சிபிஎல் திட்டமிட்டுள்ளது. ரிலையன்ஸின் வலுவான விநியோக நெட்வொர்க் மூலம் இது எளிதாக சாத்தியமாகும்.
முகேஷ் அம்பானி ஐஸ்கிரீம்
ரிலையன்ஸ் ஏற்கெனவே உணவு, பானங்கள், பர்சனல் கேர் என எப்எம்சிஜி துறையில் வலுவாக உள்ளது. 'கேம்பா' குளிர்பானங்கள், 'இண்டிபெண்டன்ஸ்' பிராண்ட் சமையல் எண்ணெய், மாவு, குடிநீர் பாட்டில்கள் போன்றவற்றை விற்கிறது. இப்போது ஐஸ்கிரீம் சந்தையிலும் நுழைந்து தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தியுள்ளது.
ரிலையன்ஸ் புதிய பிசினஸ்
இது ஒரு தற்காலிக முயற்சி இல்லை என ஆர்சிபிஎல் தெளிவுபடுத்தியுள்ளது. தரமான பொருட்கள், மலிவு விலை, மற்றும் பரந்த விநியோக நெட்வொர்க் மூலம் இந்திய ஐஸ்கிரீம் சந்தையில் ஒரு முக்கிய பிராண்டாக வளர ரிலையன்ஸ் இலக்கு வைத்துள்ளது. இது சந்தையில் புதிய போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

