Real Estate: 350 சதுர அடியில் வீட்டுமனை! ஆபரை நம்பி வாங்கினால் ஆபத்து!
350 சதுர அடி வீட்டுமனைகள் குறைந்த விலையில் கிடைத்தாலும், CMDA/DTCP அனுமதி, பில்டிங் அப்ரூவல், resale value போன்றவற்றில் சிக்கல்கள் ஏற்படலாம். முதலீட்டு நோக்கில் 1000 சதுர அடிக்கு மேல் உள்ள மனைகளே சிறந்தது.

வீட்டுமனை வாங்கும் முன் தெரிந்து கொள்ள வேண்டியவை
நாம் ஒவ்வொருவரும் வாழ்வதற்கும், நிம்மதியாக இருக்கவும், எதிர்காலத்திற்கும் முதலீடு செய்யும் முக்கிய முடிவு – வீட்டு மனை வாங்குவது. சமீபத்தில், பலர் 350 சதுர அடியில் வீட்டுமனை கிடைக்கும் என விளம்பரம் செய்து வருகின்றனர்.இத்தகைய சிறிய மனைகள் குறித்து சில முக்கியமான விஷயங்களை தெரிந்து வைத்தால்தான் தவறான முடிவு எடுக்காமல் பாதுகாப்பாக முடிவு செய்ய முடியும்.
350 சதுர அடிக்கு அனுமதி கிடைக்குமா?
சி.எம்.டி.ஏ (CMDA) மற்றும் டி.டி.சி.பி (DTCP) போன்ற அரசு நிர்வாக அமைப்புகள் குறைந்தபட்ச வீட்டு மனை அளவுக்கு அனுமதியை வழங்குகின்றன. பொதுவாக சி.எம்.டி.ஏ மற்றும் டி.டி.சி.பி விதிமுறைகள்படி சாதாரணம் குறைந்தபட்சம் சுமார் 440 சதுர அடி (22 அடி x 20 அடி) இருக்க வேண்டும்.350 சதுர அடி என்பது இந்த அளவைவிட குறைவாக உள்ளது.இதனால் தனியாக அந்த அளவுக்கு லே-அவுட் அப்பிரூவல் கிடைக்கும் வாய்ப்பு மிகவும் மிகக் குறைவு.
சிறிய மனைகள் ஏன் விற்பனை செய்யப்படுகின்றன?
பெரிய லே-அவுட்களில் சில சிறிய கார்னர் (கோண) பிளாட்கள் இருப்பதை நிறுவனம் காட்டலாம். உண்மையில் இதை மார்க்கெட்டிங் ட்ரிக் ஆகப் பயன்படுத்தி, “சிறிய இடத்தில் குறைந்த விலை” என மக்களை ஈர்க்கின்றனர்.
அந்த மனைக்கு பில்டிங் அனுமதி கிடைக்குமா?
அப்ரூவல் பெறுவது மிகவும் கடிமான இருக்கும் என்கின்றனர் அத்துறை வல்லுணர்கள். வீடு கட்டும் போதும் நான்புறமும் இடம் விட வேண்டிய கட்டாயம் இருப்பதால் 350 சதுரஅடி மனையில் பில்டிங் கட்டுவது மிகவும் சிரமம் என்கின்ரனர் கட்டிடக்கலை நிபுணர்கள்
350 சதுர அடியில் வீடு கட்டினால் பிரச்சினைகள் என்ன?
- பில்டிங் அப்ரூவல் கடினம்: சட்டப்படி setback (பக்க இடைவெளி), வீதி அகலம், முன்பக்கம் இடைவெளி ஆகியவற்றை பின்பற்ற வேண்டும்.
- அந்த இடத்தில் குடியிருக்கும் பகுதி குறைவு: பிளான் கடுமையாக கட்டுப்படும்.
- வசதிகள் அமைப்பது கடினம்: செப்டிக் டேங்க், மாடி கட்டிடம் அனுமதி கிடைக்கும் வாய்ப்பு குறைவு.
- பிரத்தியேக வீதிச்சாலை இல்லாத மனை: தனியார் வழியோ, பொதுச் சாலையோ தொடர்பில்லையெனில் இடத்தை உபயோகிப்பதே சிரமம்.
முதலீட்டு நோக்கில் சிறிய மனைகள் சரியா?
குறைந்த அளவுள்ள மனைகள் முதலீட்டுக்கு ஏற்றதாக இல்லை.
காரணம்:
- அனைவரும் வாங்க விரும்புவது சுமார் 1,000 சதுர அடி அல்லது அதற்கு மேல்.
- resale value குறைவாக இருக்கும்.
- வங்கி கடன் பெறவும் சிக்கல் ஏற்படும்.
- கடைசியில் நீங்கள் வாங்கிய விலைக்கு மேல் விற்க முடியாமல் போகும்.
- எந்த அளவு மனையை வாங்குவது சிறந்தது?
- குறைந்தபட்சம் 650 சதுர அடி (அதிக சிறிய குடும்பத்துக்கு மட்டுமே).
சராசரி வசிப்பதற்கும் resale கும்: 1,000 சதுர அடி – 1,500 சதுர அடி.
பெரிய வீட்டும் சிறந்த முதலீட்டும்: 1,500 சதுர அடி – 2,400 சதுர அடி.
350 சதுர அடி அளவு மனை:சிக்கல் தரும்
- 350 சதுர அடி அளவு மனை வாங்குவதில் மிகுந்த ஆபத்து உள்ளது.
- சட்டப்படி அப்ரூவல் கிடைக்கும் வாய்ப்பு குறைவு.
- resale value மற்றும் வீடு கட்டும் வசதி இரண்டும் குறையும்.
- வங்கியில் கடன் பெற கூட சிரமம்.
- குறைந்தபட்சம் 1,000 சதுர அடி அல்லது அதற்கும் மேல் இடம் வாங்குவதே நல்லது.
மனை வாங்கும் முன் இவற்றை சரிபார்க்கவும்
- சி.எம்.டி.ஏ/டி.டி.சி.பி அப்ப்ரூவல் டாகுமெண்ட்.
- பட்டா, சிட்டா, ஆதார் சேதி.
- சாலையின் அகலம் மற்றும் அணுகல்.
- பில்டிங் அப்ரூவல் பெற வாய்ப்பு உள்ளதா.
- முன்பின் பக்க இடைவெளி (setback) விதிமுறைகள்.
- சிறிய விளம்பரங்களை பார்த்து ஈர்க்கப்படாமல், அனைத்து ஆவணங்களையும் சட்ட ரீதியாக பரிசீலித்து, பின் முடிவு எடுக்க வேண்டும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.
