- Home
- Gallery
- பென்ட் ஹவுஸ் முதல் ரியல் எஸ்டேட் வரை.. அப்பாவுக்கே சவால் விடும் துல்கர் சல்மான்.. சொத்து மதிப்பு எவ்வளவு?
பென்ட் ஹவுஸ் முதல் ரியல் எஸ்டேட் வரை.. அப்பாவுக்கே சவால் விடும் துல்கர் சல்மான்.. சொத்து மதிப்பு எவ்வளவு?
மலையாள நடிகர் துல்கர் சல்மான் பான் இந்தியா படங்களில் நடித்து வருகிறார். அவரின் சொத்து மதிப்பு, வாங்கும் சம்பளம் போன்றவற்றை பார்க்கலாம்.

Dulquer Salmaan Net Worth
நடிகர் துல்கர் சல்மான் இந்தியாவில் அதிகம் ரசிக்கப்படும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். சிலர் துல்கர் சல்மான் டிகியூ (DQ) என்றும் அழைக்கிறார்கள். ஒரு நட்சத்திரத்தின் மகனாக இருப்பதால், அதன் சலுகைகள் எதையும் எடுக்காமல் தனது சொந்த திறமை மற்றும் கடின உழைப்பால் வளர்ந்த ஒரு இளைஞனாக துல்கர் சல்மான் உள்ளார்.
Dulquer Salmaan
துபாயில் ஐடி வேலையை விட்டுவிட்டு அப்பாவின் பாதையில் சினிமாவுக்கு வந்தவர் தான் துல்கர் சல்மான். அந்த முடிவு தவறல்ல என்பதை பிற்காலம் நிரூபித்தது. பொதுவாக நடிகர் மோகன்லாலுக்கு அடுத்து அதிக சம்பளம் வாங்கும் நடிகர் மம்முட்டி என்று கூறப்படுகிறது. மம்முட்டி, மோகன்லால் போல் துல்கர் இந்த விஷயத்தில் முக்கிய இடத்தை வகிக்கிறார்.
Dulquer Salmaan Career
துல்கர் சல்மான் திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்கள் மூலம் பெரும் வருமானம் ஈட்டி வருகிறார். இவரது சம்பளமும் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகிறது. ஒரு படத்துக்கு துல்கர் சல்மான் மூன்று முதல் எட்டு கோடி ரூபாய் வரை ஊதியமாக பெறுகிறார் என்று கூறப்படுகிறது. அதேபோல விளம்பரங்களில் நடித்து வருகிறார்.
Dulquer Salmaan Salary
அதோடு மட்டுமன்றி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் சொந்தமாக வைத்துள்ளார். லைஃப்ஸ்டைல் ஏசியாவின் 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, துல்கர் சல்மானின் சொத்து மதிப்பு $7 மில்லியன் (தோராயமாக ரூ. 57 கோடி) ஆகும். அவரது ஆண்டு வருமானம் 1.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 10 கோடி).
Dulquer Salmaan Assets
துல்கர் சல்மான் ஒரு படத்துக்கு தோராயமாக $967,012 (ரூ. 8 கோடி) வரை வசூலிப்பதாக டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. நடிப்பு மட்டுமன்றி, பிராண்ட் அம்பாசிடர் மற்றும் பிற நிகழ்ச்சிகளில் இருந்தும் ஒவ்வொரு மாதமும் ஒரு நல்ல தொகையை சம்பாதிக்கிறார் துல்கர் சல்மான். தந்தையைப் போலவே கார் பிரியர் துல்கருக்கும் ஏழு கோடிக்கு மேல் மதிப்புள்ள வாகனங்கள் உள்ளன.
Dulquer Salmaan Cars
விலையுயர்ந்த Porsche 911 Carrera S, Audi Q7, Mercedes-Benz SLS AMG, Range Rover Vogue, BMW M3 Convertible, Ferrari 458 Spider, BMW X6, Mercedes Benz AMG G63, BMW Z4 மற்றும் BMW Z5 போன்ற பல சொகுசு கார்களை அவர் வைத்திருக்கிறார். போன்வில்லே மற்றும் பிஎம்டபிள்யூ ஆர்1200ஜிஎஸ் அட்வென்ச்சர் போன்ற சொகுசு பைக்குகளையும் வைத்திருக்கிறார்.
Dulquer Salmaan Income
துல்கர் சல்மான் கேரளா மற்றும் துபாயில் ரியல் எஸ்டேட் முதலீடு செய்துள்ளார். பைனான்சியல் எக்ஸ்பிரஸின் அறிக்கையின்படி, அவர் துபாயில் சுமார் 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ. 14 கோடி) மதிப்புள்ள பென்ட் ஹவுஸ் வைத்திருக்கிறார். கொச்சியில் உள்ள அவரது வீட்டின் மதிப்பு 12 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது.
ரூ.4000 வரை சரிந்த தங்க விலை.. இதற்கு காரணம் மத்திய அரசே கிடையாது.. அப்போ யாரு தெரியுமா?