சஞ்சய் மல்ஹோத்ரா கையொப்பத்துடன் புதிய 50 ரூபாய் நோட்டு: ஆர்பிஐ
New 50 Rupees Note with RBI Governor Sanjay Malhotra's signature: ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பத்துடன் கூடிய புதிய ரூ.50 நோட்டுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்த நோட்டுகள் தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.50 நோட்டுகளின் வடிவமைப்பை ஒத்திருக்கும். ஏற்கனவே வெளியிடப்பட்ட 50 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும்.

New 50 Rupees Note
முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பதவிக்காலம் முடிந்த பிறகு, டிசம்பர் 2024 இல் புதிய ஆர்பிஐ ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா பதவியேற்றார். அவரது கையொப்பத்துடன் புதிய 50 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது.

புதிய 50 ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி படம் மற்ற புதிய ரூபாய் நோட்டுகளின் வரிசையில் உள்ள வடிவமைப்பைத் தக்கவைத்துக்கொள்ளும். மேலும் முன்னர் வெளியிடப்பட்ட அனைத்து 50 ரூபாய் நோட்டுகளும் தொடர்ந்து சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்றும் கூறியுள்ளது.
50 rupees
இந்திய ரிசர்வ் வங்கி புதன்கிழமை இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது. ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பத்துடன் கூடிய ரூ.50 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை விரைவில் வெளியிட இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
Reserve Bank of India
ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சக்திகாந்த தாஸுக்கு நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் சென்ற ஆண்டு முடிந்தது. அவருக்குப் பிறகு சஞ்சய் மல்ஹோத்ரா பதவியேற்றார்.