MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ரூ.3,500 சம்பளம் டூ இன்று மாதம் ரூ.1.5 கோடி டர்ன்ஓவர்... மனைவியின் சேமிப்பில் உருவான ஹெரால்ட் இ-பைக் சாம்ராஜ்யம்!

ரூ.3,500 சம்பளம் டூ இன்று மாதம் ரூ.1.5 கோடி டர்ன்ஓவர்... மனைவியின் சேமிப்பில் உருவான ஹெரால்ட் இ-பைக் சாம்ராஜ்யம்!

மாதம் ரூ.3,500 சம்பளத்தில் தொடங்கி இன்று மாதம் ரூ.1.5 கோடி வருமானம்! ஹெரால்ட் இ-பைக் நிறுவனத்தைத் தொடங்கிய கிருஷ்ணா குரோவரின் ஊக்கமளிக்கும் வெற்றிப் பயணம் பற்றி பார்ப்போம்.

3 Min read
Author : Meenakshisundaram
Published : Oct 19 2026, 10:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ரூ.3,500 சம்பளம் டூ இன்று மாதம் ரூ.1.5 கோடி டர்ன்ஓவர்...
Image Credit : x

ரூ.3,500 சம்பளம் டூ இன்று மாதம் ரூ.1.5 கோடி டர்ன்ஓவர்...

ஒரு காலத்தில் மாதம் வெறும் 3,500 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்து வந்த ஒரு நபர், இன்று மாதம் தோறும் 1.5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் அளவுக்கு ஒரு மாபெரும் எலக்ட்ரிக் டூ-வீலர் சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா அதுவும் கைநிறைய சம்பளம் தந்த கார்ப்பரேட் வேலையை உதறித்தள்ளிவிட்டு, தன் மனைவியின் சேமிப்புப் பணத்தை மட்டுமே மூலதனமாக வைத்து இந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கிறார் உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த கிருஷ்ணா குரோவர் (Krishna Grover). இவர் உருவாக்கிய ஹெரால்ட் இ-பைக் (Herald E-Bike) நிறுவனம், இன்று இந்தியாவின் சிறு நகரங்களை மையமாகக் கொண்டு 34 மாடல்கள், 550-க்கும் மேற்பட்ட ஷோரூம்களுடன் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஹெரால்ட் இ-பைக் கிருஷ்ணா குரோவரின் அசுர வெற்றி!
Image Credit : x

ஹெரால்ட் இ-பைக் கிருஷ்ணா குரோவரின் அசுர வெற்றி!

கிருஷ்ணா குரோவரின் இந்தப் பயணம் எளிதாக அமைந்துவிடவில்லை. தனது 13-வது வயதிலேயே தந்தையை இழந்த இவர், மிக இளம் வயதிலேயே குடும்பப் பொறுப்புகளைத் தன் தோளில் சுமக்கத் தொடங்கினார். கடந்த 2005-ம் ஆண்டு, மாதம் வெறும் 3,500 ரூபாய் சம்பளத்திற்கு ஒரு வேலையில் சேர்ந்தார். தனது கடின உழைப்பால் படிப்படியாக முன்னேறி, 2014-க்குள் ஒரு சர்வதேச பி.பி.ஓ (BPO) நிறுவனத்தில் மேலாளர் (Manager) பதவிக்கு உயர்ந்தார்.

நல்ல சம்பளம், நிலையான வேலை என வாழ்க்கை சீராகப் போனாலும், குரோவருக்குள் சொந்தமாகத் தொழில் தொடங்கி தன் குடும்பத்திற்கு வலுவான ஒரு அடித்தளத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவு எரிந்துகொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் துணிந்து தனது கார்ப்பரேட் வேலையை ராஜினாமா செய்தார். அந்த இக்கட்டான சூழலில், அவரது மனைவி ரித்திகா (Ritika) தனது சொந்த சேமிப்புப் பணம் முழுவதையும் கொடுத்து கணவரின் தொழில் கனவுக்குப் பக்கபலமாக நின்றார்.

35
இ- வாகனச் சந்தையில் ஹெரால்ட் இ-பைக் நுழைந்தது எப்படி?
Image Credit : x

இ- வாகனச் சந்தையில் ஹெரால்ட் இ-பைக் நுழைந்தது எப்படி?

மனைவியின் ஆதரவோடு 2018-ல் கிருஷிகா சர்வீசஸ் என்ற பெயரில் தனது தொழில் பயணத்தைத் தொடங்கிய குரோவர், பின்னர் அதை கிருஷிகா இவி இந்தியா (Krishika EV India) என மாற்றினார். இதற்கிடையில், இவரது முன்னாள் சக ஊழியரும் நண்பருமான வினய் குமார் இவருடன் துணை நிறுவனராக (Co-founder) கைகோர்த்தார். 2ம், 3ம் கட்ட (Tier-2 & Tier-3) சிறு நகரங்களில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகமாக இருப்பதை இவர்கள் சரியாகக் கணித்தார்கள்.

பெட்ரோல் விலை உயர்வு ஒருபக்கம் இருந்தாலும், புதிய பிராண்டுகளின் தயாரிப்புத் தரம், உதிரிபாகங்கள் கிடைப்பதில் உள்ள சிக்கல், விற்பனைக்குப் பிந்தைய சர்வீஸ் பயம் காரணமாகப் பலரும் இ-பைக் வாங்கத் தயங்கினர். மக்களின் இந்தத் தயக்கத்தைப் போக்க நினைத்த ஹெரால்ட் நிறுவனம், மலிவான விலையில் தரமான தயாரிப்புகளை வழங்குவதோடு, வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற பேட்டரி, மோட்டாருக்கு 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்ட வாரண்டியை (Extended warranty) வழங்கி சந்தையில் தடம் பதித்தது.

45
34 மாடல்கள், 550-க்கும் மேற்பட்ட ஷோரூம்கள்:
Image Credit : x

34 மாடல்கள், 550-க்கும் மேற்பட்ட ஷோரூம்கள்:

காசியாபாத்தை தலைமையிடமாகக் கொண்டும், துஹாயில் (Duhai) உற்பத்தி ஆலையையும் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம், தற்போது 34 விதமான எலக்ட்ரிக் இருசக்கர வாகன மாடல்களை விற்பனை செய்கிறது. இதில் 23 மாடல்கள் குறைந்த வேகத்தில் செல்லும் பதிவு எண் தேவையில்லாத (Non-RTO) வாகனங்கள்; மீதமுள்ள 11 மாடல்கள் ஆர்டிஓ பதிவு தேவைப்படும் அதிவேக மாடல்கள் ஆகும். தொழிற்சாலைக் கட்டமைப்புகளுக்குப் பெரும் தொகையை முடக்குவதைத் தவிர்த்து, அசெட்-லைட் (Asset-light), ஜாப்-ஒர்க் தயாரிப்பு முறையைக் கையாண்டதால் இவர்களால் மிகக் குறைந்த மூலதனத்தில் நாடு முழுவதும் நெட்வொர்க்கை விரிவுபடுத்த முடிந்தது. இதன் பலனாக, இன்று இந்தியா முழுவதும் 550-க்கும் மேற்பட்ட நேரடி ஷோரூம்கள் இயங்கி வருகின்றன.

ரூ.78 லட்சத்தில் இருந்து ரூ.7.8 கோடி வரை எகிறிய வருமானம்:

என்.பி.டி (NBT) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த மூன்று நிதியாண்டுகளில் இந்நிறுவனத்தின் வருமானம் ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. 2023-24 நிதியாண்டில் 78 லட்சம் ரூபாயாக இருந்த நிறுவனத்தின் மொத்த வருமானம், அடுத்த ஆண்டிலேயே 1.9 கோடி ரூபாயாக உயர்ந்தது. அதன்பின் 2025-26 நிதியாண்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 7.8 கோடி ரூபாயைத் தொட்டு சாதனை படைத்துள்ளது. தற்போது இந்நிறுவனம் மாதம் தோறும் சுமார் 1.5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் வேகத்தில் (Run rate) இயங்கி வருகிறது. மேலும், வரும் 2026-27 நிதியாண்டிற்குள் ஆண்டுக்கு 20 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட வேண்டும் என்ற இலக்கையும் நிர்ணயித்துள்ளது.

55
நேபாளம், இலங்கை விரிவாக்கம், ஐபிஓ (IPO) திட்டம்:
Image Credit : x

நேபாளம், இலங்கை விரிவாக்கம், ஐபிஓ (IPO) திட்டம்:

உள்நாட்டுச் சந்தையோடு திருப்தியடைந்துவிடாமல், நேபாளம், இலங்கை போன்ற அண்டை நாடுகளுக்கும் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்த ஹெரால்ட் இ-பைக் திட்டமிட்டுள்ளது. மேலும், வரும் 2029-ம் ஆண்டிற்குள் பங்குச் சந்தையில் காலடி எடுத்து வைத்து பொதுப் பங்கு வெளியீடு (IPO) கொண்டுவருவதையும் இலக்காகக் கொண்டுள்ளது. மாதம் 3,500 ரூபாய் சம்பளத்தில் தொடங்கி, கார்ப்பரேட் வேலையை உதறி, மனைவியின் சேமிப்புப் பணத்தை மட்டுமே நம்பி களமிறங்கிய கிருஷ்ணா குரோவரின் இந்த வெற்றிப் பயணம், சொந்தமாகத் தொழில் தொடங்க நினைக்கும் பலருக்கும் ஒரு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது. போட்டி நிறைந்த இந்திய எலக்ட்ரிக் வாகனச் சந்தையில் தனது மாபெரும் விநியோக நெட்வொர்க் மூலம் இந்த நிறுவனம் தொடர்ந்து எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்தப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
வணிகம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Reliance Jio: ஜியோவில் ரூ.123 vs ரூ.189! எது பெஸ்ட்? ரீசார்ஜ் செய்வதற்கு முன் இதைத் தெரிஞ்சுக்கோங்க!
Recommended image2
Home Loan: வீட்டுக் கடன் வாங்கியிருக்கிறீர்களா? எஸ்பிஐ கொடுத்த ஷாக்.. இ.எம்.ஐ எவ்வளவு அதிகரிக்கிறது?
Recommended image3
Gold FoF: பண்டிகை காலத்தில் தங்க முதலீட்டாளர்களுக்கு ஷாக்: புதிய SIP-களுக்கு முழுத் தடை; பின்னணி என்ன?
Related Stories
Recommended image1
Home Loan: வீட்டுக் கடன் வாங்கியிருக்கிறீர்களா? எஸ்பிஐ கொடுத்த ஷாக்.. இ.எம்.ஐ எவ்வளவு அதிகரிக்கிறது?
Recommended image2
Gold FoF: பண்டிகை காலத்தில் தங்க முதலீட்டாளர்களுக்கு ஷாக்: புதிய SIP-களுக்கு முழுத் தடை; பின்னணி என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved