10 ஆயிரம் டெபாசிட் 82 லட்சமாக மாறும்! PPF திட்டத்தில் முதலீடு செய்யுங்க!
எதிர்கால வருமானத்தை உறுதிசெய்ய திட்டமிடுபவர்கள் PPF திட்டத்தில் முதலீடு செய்யலாம். பணி ஓய்வு பெற்ற பிறகு நிலையான வருமானம் கிடைக்க உதவும் இந்தத் திட்டத்தில் எப்படி முதலீடு செய்வது என்று தெரிந்துகொள்ளலாம்.
PPF Scheme
PPF எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம் முற்றிலும் பாதுகாப்பானது. இதில் முதலீடு செய்யப்படும் பணத்தில் எந்த விதமான சந்தை அபாயங்களும் இல்லை. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு 7.1 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும். இத்திட்டத்தில் அதிக லாபம் ஈட்டுவது எப்படி என்று பார்க்கலாம்.
Public Provident Fund
பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.500 முதல் டெபாசிட் செய்யலாம். அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும்.
PPF Interest Rate
15 ஆண்டுகளுக்குப் பிறகும் முதலீட்டு காலத்தை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கலாம். இந்தத் திட்டத்தில் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வதன் மூலம், பெரிய தொகையை சுலபமாக ஈட்ட முடியும்.
PPF Investment
PPF திட்டத்தில் கணக்கைத் தொடங்கி ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 டெபாசிட் செய்தால் ஆண்டுக்கு மொத்த முதலீடு ரூ.1,20,000 ஆக இருக்கும். இந்த முதலீட்டை 25 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம் மொத்தம் ரூ.82.46 லட்சம் கிடைக்கும்.
Public Provident Fund Maturity
தற்போதைய 7.1% வட்டி விகிதத்தின் அடிப்படையில் கணக்கிட்டால், முதிர்வு காலத்தில் ரூ.82,46,412 கிடைக்கும். இந்தப் பணம் உங்கள் எதிர்காலத்திற்கு பொருளாதார பாதுகாப்பைக் கொடுக்கும்.