MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • PPF Scheme: மாசம் ரூ.12,500 மட்டும் போதும்.. ரூ.43 லட்சம் சொளையா கிடைக்கும் போஸ்ட் ஆபீஸ் சூப்பர் திட்டம்

PPF Scheme: மாசம் ரூ.12,500 மட்டும் போதும்.. ரூ.43 லட்சம் சொளையா கிடைக்கும் போஸ்ட் ஆபீஸ் சூப்பர் திட்டம்

PPF Scheme: எதிர்காலத்துக்காக பாதுகாப்பா முதலீடு செய்யணுமா? அப்போ போஸ்ட் ஆபீஸ் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) ஒரு சூப்பர் சாய்ஸ். மார்க்கெட் ரிஸ்க் இல்லாம, ஒழுங்கா முதலீடு செஞ்சா 15 வருஷத்துல ரூ.43 லட்சம் வரை சேர்க்கலாம்.

2 Min read
Author : Raghupati R
Published : Jul 26 2026, 09:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
போஸ்ட் ஆபீஸ் திட்டம்
Image Credit : Gemini AI

போஸ்ட் ஆபீஸ் திட்டம்

பொது வருங்கால வைப்பு நிதி (PPF) கணக்குல ஒரு நிதி ஆண்டுக்கு அதிகபட்சமா ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். அதாவது, ஒரு நாளைக்கு சுமார் ரூ.411 சேமிச்சா, மாசத்துக்கு ரூ.12,500, வருஷத்துக்கு ரூ.1.5 லட்சம் ஆகும். இதேபோல 15 வருஷம் தொடர்ந்து முதலீடு செஞ்சா, உங்க மொத்த முதலீடு ரூ.22.50 லட்சம். தற்போதைய 7.9% வட்டி விகிதத்தின்படி, மெச்சூரிட்டி சமயத்துல உங்க கைக்கு வட்டியோட சேர்த்து சுமார் ரூ.43.60 லட்சம் கிடைக்கும். இதுல வட்டி மட்டுமே ரூ.21 லட்சம்! ஆனா, வட்டி விகிதங்களை மத்திய அரசு மாற்றி அமைக்க வாய்ப்பு இருக்கு.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்
Image Credit : Chatgpt

பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்

பொது வருங்கால வைப்பு நிதி ஒரு நீண்ட கால சேமிப்புத் திட்டம். குறைந்தபட்சம் ரூ.500 வெச்சு கணக்கைத் தொடங்கலாம். அதிகபட்சமா வருஷத்துக்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். பணத்தை மொத்தமாகவோ அல்லது தவணைகளாவோ கட்டலாம். இதுக்கு கூட்டு வட்டி கிடைக்குறதால, காலம் போகப் போக உங்க பணம் வேகமா வளரும். பிள்ளைகளின் படிப்பு, கல்யாணம், ஓய்வுக்காலம் போன்ற நீண்ட கால தேவைகளுக்கு இந்தத் திட்டம் கச்சிதமா இருக்கும்.

இந்தியர்கள் கவனத்திற்கு.. ஒரே நிமிடத்தில் ஆதார் பயோமெட்ரிக் லாக்.. மோசடியில் இருந்து தப்பிக்க!

Related Articles

Related image1
Aadhaar Biometric Lock: இந்தியர்கள் கவனத்திற்கு.. ஒரே நிமிடத்தில் ஆதார் பயோமெட்ரிக் லாக்.. மோசடியில் இருந்து தப்பிக்க!
Related image2
Vande Bharat: ஒரு வந்தே பாரத் ரயில் செய்ய எத்தனை கோடி செலவாகும் தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.!
34
வரிச்சலுகை உண்டு
Image Credit : ChatGPT

வரிச்சலுகை உண்டு

பொது வருங்கால வைப்பு நிதி முதலீட்டுக்கு சூப்பரான வரிச் சலுகைகளும் இருக்கு. வருமான வரிச் சட்டம் பிரிவு 80C-யின் கீழ், வருஷத்துக்கு ரூ.1.5 லட்சம் வரையிலான முதலீட்டுக்கு வரி விலக்கு உண்டு. இதுல வர்ற வட்டிக்கும் வரி கிடையாது. மெச்சூரிட்டி பணத்துக்கும் வரி கட்டத் தேவையில்லை. அதனாலதான் இதை EEE (Exempt-Exempt-Exempt) திட்டம்னு சொல்றாங்க. இது மத்திய அரசு திட்டம்ங்கிறதால உங்க பணத்துக்கு 100% பாதுகாப்பு.

44
அவசரத் தேவைக்கு கடன்
Image Credit : Asianet News

அவசரத் தேவைக்கு கடன்

பொது வருங்கால வைப்பு நிதி கணக்குல பணம் போட்ட பிறகு, அவசரத் தேவைக்கு கடன் வாங்குற வசதியும் இருக்கு. கணக்கு ஆரம்பிச்ச மூணாவது வருஷத்துல இருந்து ஆறாவது வருஷத்துக்குள்ள, உங்க கணக்குல இருக்குற தொகையில இருந்து கடன் வாங்கிக்கலாம். இப்போ போஸ்ட் ஆபீஸ் சேவைகள் டிஜிட்டல் ஆகிடுச்சு. இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் (IPPB) மற்றும் DakPay ஆப் மூலமா, வீட்ல இருந்தே பொது வருங்கால வைப்பு நிதி கணக்கை இயக்கலாம். பணம் கட்டுறது, ஸ்டேட்மென்ட் பாக்குறது எல்லாம் மொபைல்லயே செஞ்சுக்கலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பொது வருங்கால வைப்பு நிதி
தபால் அலுவலகத் திட்டம்
அஞ்சல் அலுவலகம்
தனிநபர் நிதி
வணிகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Aadhaar Biometric Lock: இந்தியர்கள் கவனத்திற்கு.. ஒரே நிமிடத்தில் ஆதார் பயோமெட்ரிக் லாக்.. மோசடியில் இருந்து தப்பிக்க!
Recommended image2
Vande Bharat: ஒரு வந்தே பாரத் ரயில் செய்ய எத்தனை கோடி செலவாகும் தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.!
Recommended image3
House Construction : 900 சதுர அடியில் வீடு கட்ட எவ்வளவு செலவாகும்? முழு பட்ஜெட் பிளான் இதோ!
Related Stories
Recommended image1
Aadhaar Biometric Lock: இந்தியர்கள் கவனத்திற்கு.. ஒரே நிமிடத்தில் ஆதார் பயோமெட்ரிக் லாக்.. மோசடியில் இருந்து தப்பிக்க!
Recommended image2
Vande Bharat: ஒரு வந்தே பாரத் ரயில் செய்ய எத்தனை கோடி செலவாகும் தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved