MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • 2 ஆண்டுகளில் ரூ.2,32,044 கிடைக்கும்! பெண்களுக்கு ஸ்பெஷல் போஸ்ட் ஆபிஸ் திட்டம்!

2 ஆண்டுகளில் ரூ.2,32,044 கிடைக்கும்! பெண்களுக்கு ஸ்பெஷல் போஸ்ட் ஆபிஸ் திட்டம்!

பெண்களுக்காக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்வதற்காகவே சில திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பெண்கள் பணத்தை முதலீடு செய்யக்கூடிய திட்டங்கள் போஸ்ட் ஆபிசும் செயல்படுத்தி வருகிறது.

1 Min read
Author : SG Balan
| Updated : Oct 09 2024, 10:25 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வைப்பு நிதி

வைப்பு நிதி

நகரம் முதல் கிராமம் வரை அனைத்து பெண்களும் பணத்தை முதலீடு செய்யக்கூடிய பல திட்டங்களை தபால் அலுவலகம் செயல்படுத்தி வருகிறது. பெண்கள் நிதி சுதந்ததிரத்துடன் தன்னம்பிக்கை உள்ளவர்களாக உருவாக இந்தத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் போஸ்ட் ஆபிஸ் வழங்கும் சிறப்புத் திட்டம் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

தபால் அலுவலகம் மகிளா சம்மான் சான்றிதழ் திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு நல்ல வட்டியையும் பெறலாம். இத்திட்டத்தில் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வதன் மூலம், 2 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.2,32,044 கிடைக்கும். இந்த திட்டத்தை பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

35

தபால் அலுவலக மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், பெண்கள் எந்தவிதமான சந்தை அபாயத்தையும் சந்திக்க வேண்டியதில்லை. இத்திட்டத்தின் மூலம் உத்தரவாதமான வருமானம் கிடைக்கும். இதில், பெண்கள் 2 ஆண்டுகளுக்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இரண்டு ஆண்டுகளில் முதலீட்டுக்கு 7.5 சதவீதம் வட்டி விகிதம் கிடைக்கும்.

45

இந்தத் தபால் அலுவலகத் திட்டத்தில் டெபாசிட் செய்யப்படும் பணத்திற்கு பிரிவு 80C இன் கீழ் வரிவிலக்குகளையும் அரசு வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் அனைத்துப் பெண்களுக்கும் வரிச் சலுகை கிடைக்கும். இத்திட்டத்தின் கீழ், 10 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களும் தங்கள் கணக்கைத் திறக்கலாம். மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தின் கீழ், இரண்டு ஆண்டுகளுக்கு 7.5 சதவீத வட்டி வழங்கப்படும்.

55

ஒரு முறை ரூ.2 லட்சத்தை முதலீடு செய்தால், முதல் ஆண்டில் ரூ.15,000 மற்றும் இரண்டாம் ஆண்டில் ரூ.17,044 வருமானம் கிடைக்கும். அதாவது, இரண்டு ஆண்டுகளில் ரூ.2 லட்சம் முதலீட்டிற்கு ரூ.32,044 வட்டி கிடைக்கும். இதில் முதலீடு செய்யும் பெண்கள் முதிர்வு காலத்தில், அதாவது 2 வருடத்திற்கு பிறகு, ரூ.2,32,044 பணத்தைப் பெறுவார்கள்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
தனிநபர் நிதி
தபால் அலுவலகத் திட்டம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Loan Guarantor: நண்பருக்காக ஜாமீன் கையெழுத்தா? உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி இதுதான்!
Recommended image2
PM Kisan: விவசாயிகளே வங்கி கணக்கிற்கு ரூ.2,000 வரணுமா? அப்போ இந்த ஒரு அப்டேட்டை உடனே செய்யுங்க!
Recommended image3
Invest 1000 Rupees Scheme: ரூ.1,000 போதும்.. வங்கிகளை மிஞ்சும் வட்டி தரும் தபால் நிலைய திட்டம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved