மாதம் ரூ.9,250 நிலையான வருமானம்! பைசா வசூல் போஸ்ட் ஆபிஸ் திட்டம்!
தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) தனிநபர்கள், குறிப்பாக மூத்த குடிமக்கள், 5 ஆண்டுகளுக்கு ரூ.9,250 வரை மாத வருமானம் பெற நம்பகமான வழியாக உள்ளது. இத்திட்டத்தில் எவ்வாறு முதலீடு செய்யலாம் என்று பார்க்கலாம்.
தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) வழக்கமான வருமானத்தை ஈட்டுவதற்கான சிறந்த வழி. குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு நிலையான வருமான ஆதாரத்தைக் கொடுக்கிறது. இந்தத் திட்டம் ஒரு மொத்தத் தொகையை முதலீடு செய்து மாதந்தோறும் வட்டி மூலம் வருமானம் ஈட்ட அனுமதிக்கிறது.
இத்திட்டத்தின் மூலம் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.9,250 வரை சம்பாதிக்கலாம். ஆனால் அந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர்ந்து சம்பாதிக்க விரும்பினால் அதற்கும் வாய்ப்பு உள்ளது.
இத்திட்டத்தில் தனிநபராகவோ கூட்டாகவோ கணக்கு தொடங்கலாம். ஒரு தனிநபர் கணக்கில் அதிகபட்சமாக ரூ.9,00,000 செலுத்தலாம். கூட்டுக் கணக்கில் ரூ.15,00,000 வரை டெபாசிட் செய்யலாம்.
Post Office monthly income Scheme
இந்தத் திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.4 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கிடைக்கும் மாத வருமானம் நீங்கள் டெபாசிட் செய்யும் தொகையைப் பொறுத்தது. உதாரணமாக, தனிநபர் கணக்கில் அதிகபட்சமாக ரூ.9,00,000 டெபாசிட் செய்தால், ஒவ்வொரு மாதமும் ரூ.5,550 வரை சம்பாதிக்கலாம். அல்லது குடும்ப உறுப்பினருடன் கூட்டாக கணக்கு தொடங்கி, ரூ. 15,00,000 டெபாசிட் செய்தால், மாத வருமானமாக ரூ.9,250 வரை ஈட்டலாம்.
Post Office Scheme for monthly income
போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர வருமானத் திட்டம் 5 ஆண்டுகளில் முதிர்வடையும். இந்த ஐந்து வருடங்களில் டெபாசிட் செய்த தொகைக்கு வட்டி மூலம் வருமானம் கிடைக்கும். 5 ஆண்டுகளுக்குப் பிறகு, முதலீடு செய்த பணத்தையும் திரும்பப் பெறுலாம்.
MIS Scheme
தற்போது, இந்தத் திட்டத்தில் கணக்கும் வாய்ப்பு இல்லை. ஆனால், உங்கள் கணக்கு முதிர்ச்சியடைந்தவுடன், டெபாசிட் செய்த பணத்தை திரும்பப் பெறலாம். மீண்டும் புதிய கணக்கைத் தொடங்கி, மேலும் 5 வருட வருமானத்தைப் பெறலாம்.
Rs 9250 monthly income
10 வயதுக்குட்பட்ட குழந்தையாக இருந்தால், பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்களால் குழந்தையின் பெயரில் இந்தத் திட்டத்தில் கணக்கு தொடங்க முடியும். இந்தத் திட்டத்தில் கணக்கு தொடங்க, நீங்கள் போஸ்ட் ஆபிஸ் சேமிப்புக் கணக்கு வைத்திருக்க வேண்டும்.