MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • மாதம் ரூ.9,250 வருமானம்.. ரிஸ்க் இல்லாமல் பணம் வரும் அரசு திட்டம்.. உங்களுக்கு தெரியுமா?

மாதம் ரூ.9,250 வருமானம்.. ரிஸ்க் இல்லாமல் பணம் வரும் அரசு திட்டம்.. உங்களுக்கு தெரியுமா?

இந்திய அஞ்சல் வழங்கும் மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) என்பது, 7.4% வட்டியில் நிலையான மாத வருமானத்தை வழங்கும் ஒரு பாதுகாப்பான அரசு முதலீடாகும். இதன் மூலம் மாதம் ரூ.9,250 வரை வருமானம் ஈட்டலாம். இதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Raghupati R
Published : Apr 19 2026, 09:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ரிஸ்க் இல்லாமல் மாதாந்திர வருமானம்
Image Credit : AI

ரிஸ்க் இல்லாமல் மாதாந்திர வருமானம்

இந்திய அஞ்சல் வழங்கும் சேமிப்பு திட்டங்களில், மாதந்தோறும் உறுதியான வருமானம் தரும் ஒரு நல்ல தேர்வு தான் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS). பங்கு சந்தை ஏற்ற இறக்கங்களால் பாதிக்கப்படாமல், நிலையான வருமானம் தேடுபவர்களுக்கு இது மிகவும் பாதுகாப்பான வழி. அரசு ஆதரவு இருப்பதால் முதலீடு முழுவதும் பாதுகாப்பாக இருக்கும் என்பது இதன் பெரிய பலம்.

25
மாதம் நிலையான வருமானம்
Image Credit : Getty

மாதம் நிலையான வருமானம்

இந்த திட்டத்தில் தற்போது 7.4% வட்டி வழங்கப்படுகிறது. அதாவது, நீங்கள் ஒருமுறை தொகையை முதலீடு செய்தால், அதிலிருந்து வரும் வட்டி மாதந்தோறும் உங்களுக்கு கிடைக்கும். உதாரணமாக, கணவன்-மனைவி இணைந்து ரூ.15 லட்சம் முதலீடு செய்தால், ஆண்டு வட்டி ரூ.1,11,000 ஆகும். இதை 12 மாதங்களாகப் பிரித்தால், மாதம் ரூ.9,250 வரை வருமானம் கிடைக்கும். ஒருவராக ரூ.9 லட்சம் முதலீடு செய்தாலும், மாதம் நல்ல தொகை கிடைக்கும்.

Related Articles

Related image1
RBI: வெளிநாட்டு பணம் இனி 1 மணி நேரத்தில் கிரெடிட் ஆகும்.. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!
Related image2
இப்போ போனா சேமிப்பு… பிறகு செலவு.. இண்டிகோ டிக்கெட் விலை உயரப்போகுது
35
அரசு பாதுகாப்புடன் வருமானம் தரும் திட்டம்
Image Credit : Gemini AI

அரசு பாதுகாப்புடன் வருமானம் தரும் திட்டம்

இந்த திட்டத்தின் கால அவகாசம் 5 ஆண்டுகள். இந்த 5 ஆண்டுகள் முடிந்தது, நீங்கள் முதலீடு செய்த முழு பணமும் திரும்ப கிடைக்கும். அதற்குப் பிறகு, அந்த பணத்தை மீண்டும் இதே திட்டத்தில் முதலீடு செய்து, தொடர்ந்து மாதாந்திர வருமானத்தைப் பெறலாம். அதனால் இது ஒரு நீண்டகால வருமான திட்டமாகவும் பயன்படுத்த முடியும்.

45
குடும்பத்திற்கான நிச்சய வருமான திட்டம்
Image Credit : Getty

குடும்பத்திற்கான நிச்சய வருமான திட்டம்

இந்த திட்டம் பொதுமக்கள் அனைவருக்கும் ஏற்றது. தனி கணக்கு திறக்கலாம், அல்லது இரண்டு அல்லது மூன்று பேர் சேர்ந்து ஜாயின்ட் கணக்காகவும் திறக்கலாம். மேலும், 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குப் பெற்றோர் பெயர் கணக்கு திறந்து, அவர்களின் எதிர்கால சேமிப்பையும் ஆரம்பிக்கலாம். இது குடும்பத்துக்கு ஒரு பாதுகாப்பான நிதி அடித்தளம் அமைக்க உதவும்.

55
தபால் சேமிப்பு திட்டம்
Image Credit : Gemini AI

தபால் சேமிப்பு திட்டம்

இந்த கணக்கைத் திறப்பது மிகவும் எளிது. அருகிலுள்ள தபால் நிலையத்துக்குச் சென்று சேமிப்பு கணக்கைத் தொடங்கினால். தற்போதைய விதிகளின்படி பான் கார்டு மற்றும் ஆதார் அட்டை கட்டாயம் தேவை. குறைந்த ஆபத்து, நிலையான வருமானம், அரசு பாதுகாப்பு என இந்த மூன்றையும் ஒரே இடத்தில் தரும் இந்த திட்டம், மாதாந்திர வருமானம் தேடுபவர்களுக்கு ஒரு நம்பகமான தேர்வாக இருக்கும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தபால் அலுவலகத் திட்டம்
அஞ்சல் அலுவலகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வாடகை உயர்வில் ஆசியாவிலேயே பெங்களூரு முதலிடம்.. சென்னை எந்த இடம்? முழு விவரம் உள்ளே!
Recommended image2
இந்தியா vs வெளிநாடுகள்.. எங்கே வருமான வரி அதிகம்? சம்பளம் எவ்வளவு கைக்கு வரும்.. முழு விவரம் இதோ!
Recommended image3
ஜியோவின் மெகா ஹிட் சலுகை: ரூ.149-க்கு ரீசார்ஜ் செஞ்சா 3 மாசம் ஹாட்ஸ்டார் ஃப்ரீ..!
Related Stories
Recommended image1
RBI: வெளிநாட்டு பணம் இனி 1 மணி நேரத்தில் கிரெடிட் ஆகும்.. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!
Recommended image2
இப்போ போனா சேமிப்பு… பிறகு செலவு.. இண்டிகோ டிக்கெட் விலை உயரப்போகுது
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved