- Home
- Business
- மாதம் ரூ.9,700 சேமித்தால் ரூ.14.50 லட்சம் ரிட்டர்ன்ஸ்: போஸ்ட் ஆபீஸின் 'கிராம் பிரியா' மணி-பேக் திட்டம்!
மாதம் ரூ.9,700 சேமித்தால் ரூ.14.50 லட்சம் ரிட்டர்ன்ஸ்: போஸ்ட் ஆபீஸின் 'கிராம் பிரியா' மணி-பேக் திட்டம்!
போஸ்ட் ஆபீஸ் கிராம் பிரியா திட்டம்: 10 ஆண்டுகளில் ரூ.14.50 லட்சம் வருமானம் பெறுவது எப்படி? 3 அடுக்கு கேஷ்பேக் வசதி, போனஸ் கணக்கீடு, தகுதிகள் மற்றும் முழுமையான முதலீட்டு விவரங்களை பற்றி பார்போம்.

போஸ்ட் ஆபிஸ் கிராம் பிரியா திட்டம்
கிராமப்புறங்கள் மற்றும் பகுதியளவு நகர்ப்புறங்களில் வாழும் மக்கள், சிறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அஞ்சலகத் துறை (Post Office) 'கிராம் பிரியா' (Gram Priya) என்ற சிறப்பான திட்டத்தை வழங்கி வருகிறது. இது 10 ஆண்டுகள் மட்டுமே கொண்ட குறுகிய கால 'மணி-பேக்' (Money-back) சேமிப்புத் திட்டமாகும். இதில் முதிர்வு காலம் வரை காத்திருக்கத் தேவையில்லாமல், இடைப்பட்ட காலங்களிலேயே பணத்தேவையை பூர்த்தி செய்ய கேஷ்பேக் வசதிகள் வழங்கப்படுகின்றன.
கிராமப்புறங்கள் மற்றும் பகுதியளவு நகர்ப்புறங்களில் வாழும் மக்கள், சிறு வியாபாரிகள், மற்றும் விவசாயிகள் ஆகியோருக்கு அஞ்சல் துறை (Post Office) வழங்கும் மிகச் சிறந்த சேமிப்புத் திட்டங்களில் ஒன்று ‘கிராம் பிரியா’ (Gram Priya) திட்டம் ஆகும். இது 10 ஆண்டுகள் மட்டுமே கொண்ட குறுகிய கால மணி-பேக் (Money-Back) திட்டமாகும். இதில் முதலீடு செய்யும் பணத்தை எடுக்க 10 ஆண்டுகள் வரை முழுமையாகக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இடைப்பட்ட காலங்களில் பாலிசிதாரர்களின் பணத்தேவையை பூர்த்தி செய்ய கேஷ்பேக் வசதியை இத்திட்டம் வழங்குகிறது.
முக்கிய அம்சங்கள்
இத்திட்டத்தின் சிறப்பம்சமே 3 அடுக்கு பண பகிர்வு (Cashback) முறைதான். இதில் காப்பீடு எடுத்தவர்களுக்கு மொத்த காப்பீட்டுத் தொகையில் (Sum Assured) இருந்து 10 ஆண்டுகளில் 3 தவணைகளாகப் பணம் வழங்கப்படுகிறது.
முதல் கேஷ்பேக் (4-ஆம் ஆண்டு) - பாலிசியில் இணைந்து 4 ஆண்டுகள் நிறைவடையும் போது, உங்களின் மொத்த காப்பீட்டுத் தொகையில் 20% கேஷ்பேக் கிடைக்கும்.
இரண்டாவது கேஷ்பேக் (7-ஆம் ஆண்டு) - பாலிசி தொடங்கி 7 ஆண்டுகள் நிறைவடையும் போது, மீண்டும் மொத்த காப்பீட்டுத் தொகையில் 20% கேஷ்பேக் கிடைக்கும்.
முதிர்வுத் தொகை (10-ஆம் ஆண்டு) - பாலிசி தொடங்கி 10 வருடங்கள் முதிர்வு அடையும் போது, மீதமுள்ள 60% காப்பீட்டுத் தொகை மற்றும் 10 ஆண்டுகளுக்கான முழு போனஸ் தொகை ஒரே தவணையாக வழங்கப்படும்.
ஆயுள் காப்பீடு & போனஸ் கணக்கீடு
பாதுகாப்பு வசதி - 4-வது மற்றும் 7-வது ஆண்டுகளில் கேஷ்பேக் பெற்ற பிறகு பாலிசிதாரர் எதிர்பாராத விதமாக மறைந்துவிட்டால், வாரிசுதாரருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட கேஷ்பேக் தொகைகள் கழிக்கப்படாமல் முழு காப்பீட்டுத் தொகையும் வழங்கப்படும்.
போனஸ் தொகை - போஸ்ட் ஆபீஸ் கிராம் பிரியா திட்டத்தில் ஒவ்வொரு 1,000 ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கும் ஆண்டுக்கு சுமார் ரூ.45 முதல் ரூ.47 வரை போனஸ் வழங்கப்படுகிறது. (உதாரணமாக: காப்பீட்டுத் தொகை ரூ.1 லட்சம் என்றால், ஆண்டிற்கு ரூ.4,700 வரை போனஸ் கிடைக்கும்).
தகுதிகள் & விதிகள்
வயது வரம்பு - 19 முதல் 45 வயதுடைய இந்தியக் குடிமக்கள் இத்திட்டத்தில் இணையலாம்.
காப்பீட்டு வரம்பு - குறைந்தபட்சம் ரூ.10,000 முதல் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை காப்பீட்டுத் தொகையைத் தேர்வு செய்யலாம்.
கட்டண முறை - பிரீமியத்தை மாதந்தோறும், 3 மாதங்களுக்கு ஒருமுறை, 6 மாதங்களுக்கு ஒருமுறை அல்லது ஆண்டிற்கு ஒருமுறை என அருகில் இருக்கும் போஸ்ட் ஆபீஸ் கிளை மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ செலுத்தலாம்.
எப்போது எவ்வளவு பணம் கிடைக்கும்?
ரூ.10 லட்சம் காப்பீட்டுத் தொகைக்கான கணக்கீடு
காப்பீட்டுத் தொகை (Sum Assured) - ரூ.10,000,00 (10 லட்சம்)
பாலிசி காலம் - 10 ஆண்டுகள்
மாத பிரீமியம் - ரூ.9,700
ஆண்டு பிரீமியம் - ரூ.1,16,400 (1.16 லட்சம்)
10 ஆண்டுகளுக்கான மொத்த பிரீமியம் - ரூ.11,64,000 (11.64 லட்சம்)
போனஸ் கணக்கீடு (ஆண்டுக்கு ரூ.1,000-க்கு ரூ.45 எனில்):
காப்பீட்டுத் தொகை - ரூ.10 லட்சம்
ஒரு ஆண்டுக்கான போனஸ் - ரூ.45,000
10 ஆண்டுகளுக்கான மொத்த போனஸ் - ரூ.4,50,000 (4.50 லட்சம்)
மொத்த வருமானம்
4-ஆவது ஆண்டில் - ரூ.2,00,000
7-ஆவது ஆண்டில் - ரூ.2,00,000
10-ஆவது ஆண்டில் - ரூ.10,50,000
என இத்திட்டத்தின் மூலம் 10 ஆண்டுகளில் மொத்தமாக ரூ.14,50,000 (14.50 லட்சம்) வருமானமாகப் பெற முடியும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.





