MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • இனி எல்லோருக்கும் சொந்த வீடு.. வீட்டுக் கடனுக்கு ரூ.1.80 லட்சம் வரை மானியம்.. மத்திய அரசு திட்டம்!

இனி எல்லோருக்கும் சொந்த வீடு.. வீட்டுக் கடனுக்கு ரூ.1.80 லட்சம் வரை மானியம்.. மத்திய அரசு திட்டம்!

Pradhan Mantri Awas Yojana Urban 2.0:: இந்தியாவில் அனைவருக்கும் சொந்த வீடு என்ற இலக்கில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் சூப்பர் திட்டம் குறித்து இந்த செய்தியில் விரிவாக காணலாம்.

2 Min read
Author : Rayar r
Published : Feb 12 2026, 05:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
இனி அனைவருக்கும் சொந்த வீடு
Image Credit : Getty

இனி அனைவருக்கும் சொந்த வீடு

'எலி வளையானாலும் தனி வளை வேண்டும்' என்று ஒரு பழமொழி உண்டு. நாமும் ஒரு சொந்த வீட்டை கட்ட வேண்டும் என்ற கனவு அனைவருக்கும் உள்ளது. ஆனால் ஏழை எளிய, நடுத்தர மக்கள் வீடு கட்டும் கனவை நனவாக்குவது அவ்வளவு எளிதானது அல்ல. ஆனால் இப்போது அனைவரும் சொந்த வீடு கட்ட ஒரு அருமையான வாய்ப்பு கனிந்துள்ளது. மத்திய அரசின் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா-நகர்ப்புற (PMAY-U) 2.0 திட்டம் இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

23
பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டம்
Image Credit : Home Loan\Twitter

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டம்

அதாவது மத்திய அரசு பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா-நகர்ப்புற (PMAY-U) 2.0 திட்டத்தின் கீழ் வீட்டுக் கடன்களை வழங்குகிறது. அதாவது ரூ.35 லட்சம் வரை மதிப்புள்ள ஒரு வீட்டிற்கு ரூ.25 லட்சம் வரை வீட்டுக்கடன்கள் வாங்கும் பயனாளிகள் தள்ளுபடி பெறுகிறார்கள். 

முதல் ரூ.8 லட்சம் வரையிலான கடனுக்கு 4% வட்டி மானியம் வழங்கப்படுகிறது. தகுதியான பயனாளிகளுக்கு 5 ஆன்டு கால இடைவெளியில் சுமார் 1.80 லட்சம் வரை மானியம் நேரடியாக சென்றடையும்.

யார் யார் தகுதி பெறுவார்கள்?

ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை பெறும் EWS எனப்படும் பொருளாதாரத்தில் நலிந்தவர்கள், ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை பெறும் LIG எனப்படும் குறைந்த வருமான பிரிவினர், ஆன்டு வருமானம் ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை பெறும் MIG எனப்படும் மத்திய வருமான பிரிவினர் ஆகியோர் இந்த திட்டத்துக்கு தகுதியானவர்கள்.

Related Articles

Related image1
லோன் கிடைக்கலயா? கிரெடிட் கார்டு ஸ்கோரை ராக்கெட் வேகத்தில் உயர்த்த 5 ரகசிய டிப்ஸ் இதோ!
Related image2
Business Loan: வேலை போனாலும் வாழ்க்கை போகாது.! 50 லட்சம் கடன்.! 35% மானியம்.! அரசு தரும் சுயதொழில் தீர்வு.!
33
4 வழிகளில் பயன் பெறலாம்
Image Credit : Asianet News

4 வழிகளில் பயன் பெறலாம்

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தில் மொத்தம் 4 வழிகள் மூலம் நீங்கள் பயன் பெறலாம். அதாவது உங்கள் சொந்த இடத்தில் வீடு கட்டுதல், கூட்டு முயற்சியில் கட்டப்படும் மலிவு விலை வீடுகள், மலிவு விலை வீட்டு வாடகை வசதி, வங்கிக் கடனுக்கான வட்டி மானியம் என பயன் பெற முடியும். இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 1.18 கோடி வீடுகள் அங்கீகரிப்பட்டு 85 லட்சத்துக்கும் அதிகமான வீட்டுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பிப்பது எப்படி?

மத்திய அரசின் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்துக்கு pmay-urban.gov.in என்ற இணையதளம் வாயிலாக சென்று விண்ணப்பிக்கலாம். ஆதார் எண் மற்றும் மொபைல் எண் குறிப்பிட்டு லாக் இன் செய்து குடும்ப வருமானம், வங்கி விவரங்கள், நீங்கள் எந்த பிரிவை சேர்ந்தவர்கள்? ஆகியவற்றை பூர்த்தி செய்து வருமானச்சான்று, அடையாள சான்று உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். நீங்கள் வங்கியில் கடன் வாங்க முடிவு செய்தால் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதாக வங்கி அதிகாரிகளிடம் கூறி அதற்கேற்ப விண்ணப்பிக்க வேண்டும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
கடன்
மத்திய அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
போடு!.. பாலிசிதாரர்களுக்கு நல்ல செய்தி.. காப்பீட்டு பிரீமியத்தில் 18% ஜிஎஸ்டி நீக்கம்
Recommended image2
வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஆர்பிஐ சொன்ன குட் நியூஸ்
Recommended image3
தங்கத்துடன் போட்டா போட்டி போடும் வெள்ளி.! இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா? தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமா?
Related Stories
Recommended image1
லோன் கிடைக்கலயா? கிரெடிட் கார்டு ஸ்கோரை ராக்கெட் வேகத்தில் உயர்த்த 5 ரகசிய டிப்ஸ் இதோ!
Recommended image2
Business Loan: வேலை போனாலும் வாழ்க்கை போகாது.! 50 லட்சம் கடன்.! 35% மானியம்.! அரசு தரும் சுயதொழில் தீர்வு.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved