MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • புது கார் வாங்க பிளான் பண்றீங்களா? ஈஎம்ஐ மட்டும் பாக்காதீங்க: தவிர்க்க வேண்டிய 5 முக்கிய தவறுகள்!

புது கார் வாங்க பிளான் பண்றீங்களா? ஈஎம்ஐ மட்டும் பாக்காதீங்க: தவிர்க்க வேண்டிய 5 முக்கிய தவறுகள்!

புது கார் வாங்குறீங்களா? மாதாந்திர ஈஎம்ஐ (EMI) தொகையை மட்டும் கணக்கில் கொண்டு முடிவெடுக்காமல், கார் வாங்குபவர்கள் தவிர்க்க வேண்டிய 5 முக்கியமான தவறுகளை பற்றி பார்போம்.

3 Min read
Author : Kiruthickraj D
Published : Oct 22 2026, 02:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
புதிய கார் வாங்குபவர்கள் கவனத்திற்கு
Image Credit : Gemini

புதிய கார் வாங்குபவர்கள் கவனத்திற்கு

நாம் மிகவும் விரும்பிய காரை வாங்கி, அதனை ஷோரூமிலிருந்து வெளியே எடுக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பல கார் டீலர்களும் நமது கார் கனவை நனவாக்க எளிதான லோன் வசதிகளை வழங்குகின்றனர். ஆனால், லோன் மூலம் கார் வாங்கிய பிறகு என்னென்ன செலவுகள் ஏற்படும் என்பதை முன்கூட்டியே கவனிப்பது மிகவும் அவசியம். ஏனெனில், கார் வாங்குவதுடன் நமது செலவுகள் முடிந்துவிடுவதில்லை; அதன் பிறகும் பல விஷயங்களுக்குச் செலவு செய்ய வேண்டிவரும்.

டவுன் பேமெண்ட், மாதாந்திர ஈஎம்ஐ, பெட்ரோல் அல்லது டீசல் செலவு, இன்சூரன்ஸ், கார் சர்வீஸ் என அடுத்தடுத்த செலவுகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். వీற்றுக்கெல்லாம் சரியான திட்டமிடல் அவசியம். இதில் சிறிய தவறு செய்தாலும், பராமரிப்புச் செலவு அதிகரித்து நம்மைத் தீராத கடன் சுமையில் சிக்க வைத்துவிடும். இந்தப் பதிவில், புதிதாகக் கார் வாங்கியவர்கள் தவிர்க்க வேண்டிய 5 முக்கியமான விஷயங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
பட்ஜெட்டைத் தாண்டி விலை அதிகமான காரை தேர்ந்தெடுப்பது
Image Credit : Gemini

பட்ஜெட்டைத் தாண்டி விலை அதிகமான காரை தேர்ந்தெடுப்பது

கார் ஷோரூமுக்குச் செல்லும் வரை ஒரு குறிப்பிட்ட காரை வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால், ஷோரூமுக்குச் சென்ற பிறகு அங்குள்ள மற்ற கார்களைப் பார்த்தால் மனதில் ஒருவித ஆசை தோன்றும். அதற்காக எதையும் யோசிக்காமல் முடிவெடுக்கக் கூடாது. நமது பட்ஜெட்டுக்கு அதிகமான விலை கொடுத்துக் காரை வாங்குவது நமது சேமிப்பைக் கரைத்துவிடும்; அதோடு மாதாந்திர பட்ஜெட்டையும் கடுமையாகப் பாதிக்கும்.

கார் வாங்கும் போது உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவும் எடுக்கக் கூடாது. நமது தேவை என்ன என்பதைப் பொறுத்தே முடிவு எடுக்க வேண்டும். அதேபோல, ஒரு காரைத் தேர்ந்தெடுக்கும் போது அதற்கான ஈஎம்ஐ எவ்வளவு?, ஓட்டும்போது ஏற்படும் செலவுகள் என்ன?, பெட்ரோல்/டீசலுக்கு ஏற்ப மைலேஜ் கிடைக்குமா?, பிற கடன்களைச் செலுத்திவிட்டு ஈஎம்ஐ கட்டும்போது சிரமம் ஏற்படுமா? என்பதையெல்லாம் கவனிக்க வேண்டும். வெறும் ஆசைக்காக முடிவெடுத்தால் பிற்காலத்தில் கடன் பட வேண்டிய சூழல் ஏற்படும்.

36
முறையாக சர்வீஸ் செய்யாமல் இருப்பது
Image Credit : Gemini

முறையாக சர்வீஸ் செய்யாமல் இருப்பது

கார் வாங்கிய பிறகு பணத்தைச் சேமிப்பதாக நினைத்துக்கொண்டு, கம்பெனி பரிந்துரைக்கும் தேதியில் சர்வீஸ் செய்யாமல் தள்ளிப்போடக் கூடாது. இதனால் நாம் புதிதாக வாங்கிய காரின் இன்ஜின் கடுமையாகப் பாதிக்கப்படும். இன்ஜின் பழுதானால் மைலேஜ் குறைவதுடன், பிற்காலத்தில் பெரிய சிக்கல் ஏற்பட்டு, சாதாரண சர்வீஸ் கட்டணத்தை விட பல மடங்கு அதிகமாகச் செலவு செய்ய வேண்டிய நிலை உருவாகும். எனவே, கார் வாங்கும் போது அவர்கள் சொல்லும் கால இடைவெளிக்கு ஏற்ப முறைப்படி சர்வீஸ் செய்ய வேண்டும்.

46
இன்சூரன்ஸ் புதுப்பிப்பதை தவிர்ப்பது
Image Credit : Gemini

இன்சூரன்ஸ் புதுப்பிப்பதை தவிர்ப்பது

புதிய கார் வாங்கும் போது இன்சூரன்ஸ் வழங்கப்பட்டிருக்கும். ஆனால், அடுத்த ஆண்டு வரும்போது அதைத் கண்டிப்பாகப் புதுப்பிக்க வேண்டும். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய செலவுகளைக் கருத்தில் கொண்டுதான் சரியான இன்சூரன்ஸைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பணத்தைச் சேமிக்க வேண்டும் என்ற நினைப்பில் இன்சூரன்ஸ் கவரேஜைக் குறைப்பது ஆபத்தில் முடியலாம்.

56
பெட்ரோல் & டீசல் செலவை கருத்தில் கொள்ளாமல் இருப்பது
Image Credit : Gemini

பெட்ரோல் & டீசல் செலவை கருத்தில் கொள்ளாமல் இருப்பது

கார் ஈஎம்ஐ கட்டிக்கொண்டே காரைப் பயன்படுத்தத் தொடங்கிவிடுவோம். எனவே, ஒரு காரைத் தேர்ந்தெடுக்கும் போது நாம் போடும் பெட்ரோல் அல்லது டீசலுக்கு ஏற்ப அது சரியான மைலேஜைத் தருகிறதா என்பதையும் பார்க்க வேண்டும். சில லக்ஸரி கார்கள் குறைந்த மைலேஜையே கொடுக்கும். எனவே, பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது என்பதற்காக மட்டும் ஒரு காரைத் தேர்ந்தெடுக்காமல், பிற்காலச் செலவுகளுக்கு ஏற்ப திட்டமிட வேண்டும். போர் சூழல்கள் அல்லது பிற உலகளாவிய காரணங்களால் பெட்ரோல், டீசல் விலை திடீரென அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

66
மறைமுக செலவுகளை கவனிக்காமல் விடுவது
Image Credit : Gemini

மறைமுக செலவுகளை கவனிக்காமல் விடுவது

கார் வாங்கியவுடன் ஈஎம்ஐ செலுத்திக்கொண்டிருக்கும் போதே பிற சிறிய விஷயங்களுக்கும் நாம் செலவு செய்தாக வேண்டும். உதாரணமாக, எங்காவது காரை எடுத்துச் சென்றால் அதற்கான பார்க்கிங் கட்டணம், அவ்வப்போது காரை வாஷ் செய்வதற்கான செலவுகள், தேவைப்படும் ஆக்சஸரீஸ் வாங்குவதற்கான செலவுகள், எதிர்பாராமல் பழுது ஏற்பட்டால் அதைச் சரிசெய்வதற்கான செலவுகள் எனப் பல மறைமுகச் செலவுகள் இதில் அடங்கும்.

எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்க்கத் தனியாக ஒரு தொகையைச் சேமித்து வைப்பதும் நல்லது. சிலர் கார் வாங்கும் உற்சாகத்தில் அதனுடன் வரும் பிற செலவுகளைக் கவனிப்பதே இல்லை. ஈஎம்ஐ தொகையை மட்டும் பார்க்காமல், மொத்தமாக அதற்கான செலவு என்ன என்பதையும் கணக்கிட வேண்டும். வசதியாகப் பராமரிக்கக் கூடிய கார் மட்டுமே நம்முடைய சரியான தேர்வாக இருக்க முடியும். இது நமது சேமிப்பைக் கரைக்காமல், எந்தப் பிரச்சனையும் இல்லாமல் லோனைத் திருப்பிச் செலுத்த உதவும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

KD
Kiruthickraj D
வணிகம்
 
2nd TEST • SA vs AUS
Rain Delay
SASA
(127.1 ov)425/9
AUSAUS
(54.0 ov) 99 & 156/4
Day 5 - Session 3
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Innings Break
NZNZ
(20.0 ov)225/4
INDIND
-
IND chose to bowl.
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
DA Hike: இன்னும் முடிவாகாத அகவிலைப்படி உயர்வு! தீபாவளிக்கு நிலுவைத் தொகையுடன் சம்பளம் ஏறுமா?
Recommended image2
Oat Milk Business : துபாயில் ரூ.1 கோடி சம்பளம்! வேலையை விட்டுத் தொழில் தொடங்கிய பெண்.. இன்று ரூ.2.2 கோடி வருவாய்!
Recommended image3
Bank Account: உங்கள் அனுமதியின்றி வங்கிக் கணக்கில் பணம் எடுக்கப்பட்டால் என்ன செய்யணும்?
Related Stories
Recommended image1
காற்றில் பறந்த டெஸ்லா ரோட்ஸ்டர் காருக்கு இந்தியாவில் புக்கிங் ஓபன்: ரூ.2.50 கோடி முன்பதிவுத் தொகை; இங்கும் பறக்குமா?
Recommended image2
அம்பானிகளின் ஜியோ IPO! வெறும் 100 நிமிடங்களில் மொத்தமும் காலி.! முதலீட்டாளர்கள் ஏன் ஆர்வம் காட்டினார்கள் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved